பெங்களூரில் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவ கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது

Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs சச்சினின் முழு உருவ கேக் , பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேக் உலகிலேயே இது வரை மிகப்பெரிய  கேக் எனும் பெருமையை  தட்டிச்செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அண்மையில் ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான ராமச்சந்திரன் என்பவர்தான் சச்சினின் முழு உருவ கேக்கினை செய்தவர்.ஒரு கையில் பேட்டையும் மற்றொரு கையில் ஹெல்மெட்டையும் பிடித்தவாறு சச்சின் நிற்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட கேக்கை காண பலர் வருகைபுரிந்துள்ளனர்.கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் கேக் கண்காட்சிக்காக இது அமைக்கப்பட்டுள்ளது. சச்சினின் முழு உருவ கேக்கை செய்ய 5 நாட்களானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Life-size Sachin Tendulkar cake in Bangalore grabs eyeballs

Read More

பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு :திரு.சவுரவ் கங்குலி நிராகரிப்பு

புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் திரு.சவுரவ் கங்குலிக்கு பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாகவும், தேர்தலில் வெற்றியடைந்து பா.ஜ.க ஆட்சி அமைத்தால்  திரு.சவுரவ் கங்குலிக்கு விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் பா.ஜ.க அழைப்பு விடுத்திருந்தது. எனினும், தான் தேர்தலில் பங்கேற்க விரும்பவில்லை என்றும் பா.ஜ.க வின் அழைப்பை நிராகரிப்பதாகவும் திரு.சவுரவ் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Read More

பெண்களுக்கான உலக கோப்பை கபடி போட்டியில் தொடர்ந்து 3வது முறையாக இந்திய அணி வெற்றி

India won Womens Kabaddi World Cup 2013 உலக கோப்பை கபடி போட்டி பஞ்சாப்பில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி ஜலந்தரில் நேற்று நடந்தது.இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.   விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 49-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக 3வது முறையாக உலககோப்பையை இந்திய பெண்கள் அணி தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு ரூ.51 லட்சம் பரிசு கிடைத்தது. அத்துடன் போட்டியில் சிறந்த ஸ்டாப்பராக இந்தியாவின் அனுராணியும், சிறந்த ரைடராக ராம்பத்தேரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாருதி ஆல்டோ…

Read More

சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை..

Pakistan Banned Taliban condemns Pakistan media for appreciating Sachin tendulkar and criticizing their country Cricket captain. சச்சின் தெண்டுல்கரை பாகிஸ்தான் பத்திரிக்கைகள் புகழ்ந்ததால் கடுப்பான தலிபான்கள் எச்சரிக்கை.. இஸ்லாமாபாத்: கடந்த 16–ந்தேதி கிரிக்கெட் விளையாட்டில் சகாப்தமான தெண்டுல்கர் ஓய்வு பெற்றார். உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைகாட்சிகள் அவரை புகழ்ந்து பாராட்டின. அதே போல பாகிஸ்தான் பத்திரிக்ககளும் தொலைகாட்சிகளும் சச்சின் டெண்டுல்கரை புகழ்ந்து தள்ளின. சச்சின் தெண்டுல்கர் இல்லாததால் கிரிக்கெட் விளையாட்டு ஏழையாகி விடும் என அந்த நாட்டு பத்திரிகைகள் தெரிவித்தன. அவருடைய விளையாட்டுக்கு நிகரான வீரர் இல்லை என பாராட்டின. இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை புகழ்ந்து தள்ளுவதை பாகிஸ்தான் ஊடகங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தெஹ்ரிக்– இ–தலிபான்…

Read More

சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட்…

Read More

வெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.

கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் சச்சின் டென்டுல்கர் இன்று விடைபெற்றார் . இவரது 200வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கையை அசைத்தப்படி ரசிகர்களை பார்த்து கண்ணீர் மல்க நடந்து சென்றார். இவருடன் விராத் கோஹ்லியும் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் மகன் ஆகியோரும் கண்ணீர் விட்டபடி திகைத்து போய் நின்றனர். கிரிக்கெட் உலகில் சாதனை மன்னன் இன்றுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் இல்லாத எனது வாழ்வை நினைத்து பார்க்க முடியவில்லை என்று அவர் ஓய்வு குறித்து சச்சின் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய நன்றி கடிததத்தில் கூறியிருந்தார். சல்யூட் சச்சின், குட்பை., இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற. கோல்கட்டா டெஸ்டில்…

Read More

சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியல்: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் இடம்

Indian Cricketer Ashwin native of Tamilnadu is number one in the list of all rounders in the world after the match played with west indies இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதம் அடித்தால் அதற்கு பலனாக, ஐ.சி.சியினுடைய டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில், இந்திய அணி மோசமான சூழலில் இருந்தபோது, ரோஹித் சர்மாவுக்கு பக்கபலமாக இருந்தது மட்டும் இல்லாமல், சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார் அஸ்வின். அந்த ஆட்டத்தில் அஸ்வின் 124 ரன்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும்…

Read More

இந்தியாவில் 2018ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தபடுகிறது

India is hosting the mens hockey world cup to be held in 2018 at India பல்வேறு நாடுகள் 2018–ம் ஆண்டு 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டியை தங்கள் நாட்டில் நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்து இருந்தது. குறிப்பாக இதில் ஆண்களுக்கான உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்த வாய்ப்பு கோரி இந்தியா விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் பல நாடுகளில் இருந்து வந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்த சர்வதேச ஆக்கி சம்மேளனம் 2018–ம் ஆண்டு உலக கோப்பை ஆக்கி போட்டியை நடத்தும் நாடுகள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி 2018–ம் ஆண்டு டிசம்பர் 1–ம் தேதி முதல் 16–ம் தேதி வரையில் நடைபெறும்.. இங்கிலாந்தில் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி ஜூலை…

Read More

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பணக்கார பட்டியல்: டெண்டுல்கர் முதல் இடம்

cricketer Tendulkar is No1 millionaire to earn Rs .965 crore among Sports personalities in India கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி இந்திய  கிரிக்கெட் வீரர்களின் பணக்காரர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தெண்டுல்கர் முதலிடத்தை பிடித்து உள்ளனர். அவரது சொத்து மதிப்பு ரூ.965 கோடி (160 மில்லியன் டாலர்). கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மூலமும் இன்றி விளம்பரத்தில் நடிப்பதிலும் வருமானம் கொட்டுகிறது. நிறைய விளம்பரங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். தெண்டுல்கருக்கு அடுத்த படியாக  2 வது இடத்தில் டோனி உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 350 கோடி ஆகும். மூன்றாவது இடத்தை பிடித்தவர் யுவராஜ்சிங், இவரது சொத்து மதிப்பு சுமார் 190 கோடியாகும் நான்காவது இடத்தை  ராகுல் டிராவிட் -126 கோடியும்  , ஐந்தவது இடத்தை வீராட் கோஹ்லி -ரூ. 95 கோடி…

Read More

கிரிக்கேட் வரலாற்று சாதனையாளர் சச்சின் ஓய்வு பெறுகிறார்

Sachin Tendulkar retires from Test cricket after living Cricket dream இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாகவும், கடைசி போட்டிகள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் சச்சின். இதேபோல் அவரது முதல் ஒருநாள் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் 18-ம் தேதி தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தார்.  உலக வேகப்பந்து மற்றும் சுழர்ப் பந்து  வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக…

Read More