சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியல்: தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதல் இடம்

Indian Cricketer Ashwin native of Tamilnadu is number one in the list of all rounders in the world after the match played with west indies

ea703798-d4de-4778-958f-0baa75ec51e7_S_secvpf.gif

இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதம் அடித்தால் அதற்கு பலனாக, ஐ.சி.சியினுடைய டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில், இந்திய அணி மோசமான சூழலில் இருந்தபோது, ரோஹித் சர்மாவுக்கு பக்கபலமாக இருந்தது மட்டும் இல்லாமல், சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார் அஸ்வின். அந்த ஆட்டத்தில் அஸ்வின் 124 ரன்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த காரணத்தினால் ஆல் ரவுண்டர் தரவரிசையில் அஸ்வின் 81 புள்ளிகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். முன்னிலையில் இருந்த வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜேக்ஸ் காலிஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். இப்பொழுது, 2-ம் இடத்தில் உள்ள ஹசனை விட 43 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் அஸ்வின்.

Indian Cricketer Ashwin native of Tamilnadu is number one in the list of all rounders in the world after the match played with west indies

பேட்டிங் வரிசை: இதே போல அஸ்வின், டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலிலும் 18 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும், பந்து வீச்சுப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 6-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.
கொல்கத்தா போட்டியில் அறிமுகமான ரோஹித் (177 ரன்கள்), முகமது சமி (9 விக்கெட்டுகள்) ஆகியோரும் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர். பேட்டிங் தரவரிசையில் ரோஹித் 63-வது இடத்தையும், பந்து வீச்சில் சமி 53-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Indian Cricketer Ashwin native of Tamilnadu is number one in the list of all rounders in the world after the match played with west indies

Related posts