Kanyakumari District : In a Road accident near Valliyur at Kanyakumari District of Tamilnadu, 6 people dead from a single family வள்ளியூர் அருகே நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த கார் ஒன்று வள்ளியூர் அருகில் புறவழிச்சாலை பாலத்தில் புதன்கிழமையன்று மோதியதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகில் ஆலங்கோட்டையைச் சேர்ந்தவர் ராசையா (வயது 58). இவரது மகன் திரு.பாலசுப்பிரமணியன். இவர், சென்னையில் உள்ள பூந்தமல்லியில் புதிதாக வீடு ஒன்று கட்டியுள்ளார். இந்த வீட்டு கிரஹப் பிரவேச நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள திரு.ராசையா மற்றும் அவரது மனைவி பத்மாவதி (வயது 55), அவரது மகள் கலைச்செல்வி…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டிருக்கும் விவாகரத்து
Increasing Divorce in China. About 41 percent of divorce in 6 months are done to avoid property tax 2013, கடந்த செப்டம்பர் மாதம் வரை சீனாவில் 40 ஆயிரம் தம்பதிகள் தங்கள் திருமண முறிவு செய்துள்ளனர். சீனாவின் ஷாங்காய் நகரிலும் இந்த நிலையே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக அங்கே விதிக்கப்பட்டிருக்கும் கூடுதலான சொத்து வரி தான் காரணம் என கூறப்படுகிறது. சீனாவில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர ஒரு குடும்பத்துக்கு ஓர் குழந்தை எனும் திட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அங்குள்ள மக்கள் ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆதலால், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் முற்றிலும் குறைந்து வருகிறது. அதனால், திருமணத்த்திற்கு பெண் கிடைப்பது அரிதாகி வருகிறது. இந்த பிரச்சினை ஒரு பக்கம் இருக்கும் போது…
Read Moreஅக்டோபர் 31-ம் தேதி உலக சேமிப்பு நாள்
World savings day 31st October every year – World Savings Day is celebrated on October 31, 2013. அக்டோபர் 31 உலக சிக்கன தினம் உலக சேமிப்பு தினம் , இத்தாலியில் உள்ள மிலானோ நகரில் முதலாவது சர்வதேச சேமிப்பு வங்கி மாநாடு (சேமிப்பு வங்கிகள் உலக சமூகம்) அக்டோபர் 31, 1924-ம் ஆண்டு நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 29 நாடுகளை சார்ந்த அதன் பிரதிநிதிகள், பொதுமக்கள் மத்தியில் சேமிப்பு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார உயர்வு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கடமையை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தீர்மானிக்க பட்டது. மேலும், சிக்கனதினுடைய முக்கியத்துவத்தை இந்த உலகிற்கு உணர்த்த எண்ணி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி உலக சிக்கன…
Read Moreபிறந்ததிலிருந்து கார் டிக்கியில் அடைக்கப்பட்ட 2 வயது குழந்தை மீட்பு
Car Mechanics rescued a 2 year old baby girl from a car trunk பிரான்ஸ் நாட்டில் ஒரு தாய் தனது 2 வயது பெண் குழந்தையை, பிறந்ததில் இருந்து காரின் டிக்கியில் மறைத்து வைத்து வளர்த்து வந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருக்கும் கார் செம்மை செய்யும் ‘மெக்கானிக்’ ஷெட்டில் ஒரு இளம் வயது பெண்மணி தனது காரை அங்கே நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அவர் விட்டுச்சென்ற வண்டியில் இருந்து சில நாட்களுக்கு பின் குழந்தையினுடைய அழுகுரல் கேட்டதால் அங்கே வேலை செய்யும் ஒரு மெக்கானிக், அந்த காருடைய டிக்கியை திறந்து பரிசோத்தித்த பொது, அதற்குள் ஓர் ஊட்டச்சத்து குறைந்த நிலையில் அழுவதற்கு கூட பலம் இல்லாத ஓர் 2 வயது பெண் குழந்தை இருந்தது கண்டு…
Read Moreலிபியாவில் வங்கி வாகனத்தை வழிமறித்து 331கோடி ரூபாய் கொள்ளை
Libya robbery: Sirte gunmen snatch $54m from bank van லிபியாவில் 331கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிக்களை வங்கி வாகனத்தை வழிமறித்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டு கரன்சி மற்றும் பல வெளிநாட்டு கரன்சிகளை ஏற்றிக் கொண்டு லிபியாவில் உள்ள சிர்தே விமான நிலையத்திற்கு வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வங்கி வாகனம் விமான நிலையத்திற்குள் செல்ல முற்பட்ட பொது 10 பேர் கொண்ட கொள்ளையர்களால் தடுத்த் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் வேனில் பாதுகாப்பிற்கு வந்தவர்களை துப்பாக்கிகளை காட்டி மிரட்டி அங்கேயே இறக்கி விட்டுவிட்டு அந்த வாகனத்தை கடத்திக் கொண்டு போய் விட்டார்கள். அந்த வாகனத்தில் சுமார் 331 கோடி ரூபாய் மதிப்புள்ள பல நாட்டு கரன்சிகள் இருந்ததாக அஞ்சப்படுகிறது. இது…
Read Moreமணிப்பூரில் பள்ளிக்கூடம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு
Four injured in bomb blast in Imphal – the Capital of Manipur இன்று காலை சுமார் 6 மணியளவில் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். கிவைரம்பாந்த் சந்தை வளாக பகுதில் இருக்கும் பைரொதான் பள்ளி எனும் பள்ளிக்கூடம் அருகில் இந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இன்று காலை சுமார் 6 மணிக்கு வெடித்த இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 4 நபர்கள் காயம் அடைந்தார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து அங்கே இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் சோதனை செய்யப்பட்டு, பாதுகாப்பை காவல்துறையினர் கூடுதலக்கியுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு, அந்த மாநில முதல்வர் ஒக்ரம் இபோபி சிங்கின் இல்லத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில்…
Read Moreஇந்தியாவில் தொழில் தொடங்க சிறந்த நகரம் பெங்களூர்: புதிய ஆய்வு
Bangalore tops as business hub, Chennai a close second இந்தியாவிலேயே தொழில் ஒன்றை தொடங்கி நடத்த சிறந்த நகர பட்டியலில் பெங்களூர் நகரம் முதல் இடம் பெற்றுள்ளது. இதற்குஅடுத்தபடியாக சென்னை, மும்பை, புனே ஆகிய நகரங்கள் அந்த சிறப்பை பெற்றுள்ளன. இந்த சிறப்பு பட்டியலில், இந்தியாவின் தலைநகரமான டெல்லி இடம்பெறவில்லை எனினும், டெல்லியின் பிராந்தியத்தில் அமைந்து இருக்கும் நொய்டா, குர்கான் ஆகிய நகரங்கள் 17-ம் இடம் மற்றும் 19-ம் இடம் ஆகிய வரிசையில் வருகின்றன. மனிதவளம், அடிப்படை வாழ்க்கைத் தரம், உட்கட்டமைப்பு வசதிகள், நகர கலாச்சாரம், ஆகிய தன்மைகளின் அடிப்படையில் பெங்களூர் தான் தொழில் தொடங்க பெரிதும் உகந்ததாக உள்ளது. மேலும் இங்கு தடையில்லா மின்சாரம், தட்டுப்பாடு இல்லாத குடிதண்ணீர் விநியோகம், எதிதான போக்குவரத்து வசதி மற்றும் குடியிருப்பு வசதி, அலுவலக இடங்கள் மற்றும்…
Read Moreகுழந்தைகள் பிஸ்கெட்டில் கோகைன் எனும் போதை பொருள்: அதிர்ச்சி ஆய்வு
Oreo cookies may be as addictive as drugs, study shows சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணுவதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்யப்படும் பிஸ்கட்களில் ஒன்று தான் (OREO) ஓரியோ. மயக்கத்தை உண்டாக்கும் விளமபரங்களை போல் இந்த (OREO) ஓரியோ பிஸ்கெட்டில் போதை தரக்கூடிய கோகைன் எனும் போதைப்பொருள் இருப்பதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல் கூறுகிறது. மளிகை பொருட்கள் வாங்க ஷாப்பிங் போனால் குவியல் குவியலாக குழந்தைகளை தூண்டும் வகையில் பல வகையான பிஸ்கெட்டுகள் மார்கெட்டில் பெருமளவு உள்ளது. இந்த பிஸ்கட்டை போல் பல நிறுவனங்களும் புதிது புதிதாக கிரீம் பிஸ்கெட்களை அறிமுகப்படுத்தியிருகின்றன. இந்த வகையில், பிரபல ‘ஓரியோ’ பிஸ்கெட்களை உண்ணும் குழந்தைகளுடைய மூளை கோகைன் போதைப் பொருளை உட்கொண்ட உற்சாகத்தை போன்ற போதையை அடைவதாக அமெரிக்க வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இது பற்றி…
Read Moreகதிர்வீச்சு பயம் போக்க மக்கள் முன் கடல் உணவு உண்ட ஜப்பான் பிரதமர்
Japanese PM eats seafood caught off Fukushima கடந்த 2011ம் ஆண்டு ஜப்பான் நாட்டில், பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து சுனாமி பேரலை தாக்குதலும் ஏற்பட்டது. அந்த பேரிடரில் புகுஷிமா அணு மின் நிலைய அணு உலைகள் சிர்குலைந்து வெடித்தது. அந்த விபத்தில் கதிர்வீச்சு கசிந்து சுற்று சூழல் பதிப்புக்கு உள்ளானது. இதில் குடிநீர், பால், மற்றும் உணவு பொருட்களில் அந்த அணுகதிர் பரவியது. ஆகவே, அந்த விபத்து நடந்த பகுதிகளை சுற்றி வாழ்ந்துவந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். அதற்க்கு பின் நிபுணர்களை உதவியோடு அந்த கதிர்வீச்சு கசிவை கட்டுபடுத்தி வெளியாகாமல் சீர் செய்யப்பட்டது. மீன்கள் சாப்பிட அச்சம் இருந்தும், அங்கிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு கசிவு ஏற்படுகிறது. அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் மீன்களிலும் கதிர்வீச்சு தாக்கி…
Read Moreஇந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைவு
reducing infant maternal mortality tamil nadu இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 % மாகக் குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மாநில அரசினால் கையாளப்படும் பொது சுகாதார வழி முறைகள் தான் இது போன்ற முன்னேற்றத்திற்கு முக்கியக்காரணம் என கருதப்படுகின்றது. குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கணக்கிடுவதாகும். இது சுகாதார சேவைகள், ஊட்டச்சத்து அளவு, வறுமை மற்றும் மக்களின் கல்வி நிலை போன்றவற்றில் ஒரு முக்கியக் குறியீடாக விளங்குகின்றது. கடந்த 2000ஆவது ஆண்டுத் துவக்கத்தில் ஐ.நா அமைப்பு, குழந்தைகளின் இறப்பு விகிதம் உலக நாடுகளில் குறைக்கப்பட வேண்டும் என்பதை தன்னுடைய சுகாதாரக் கழகத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. இதற்கான கெடுவாக…
Read More