Russia bus bomb: Volgograd blast kills six ரஷ்ய நாட்டில் ஒரு பேருந்தில் ஓர் பெண் தீவிரவாதி உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி செத்தனர். மேலும் 24 பேர் படுகாயமுற்றனர். ரஷ்யாவின் வால்கோகிராட் நகரில் பயணிகள் பேருந்து ஒன்று நேற்று பகலில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சில் பெண் தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் சிதறி பலியாயினர். 24க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதிவாசிகள் தெரிவிக்கும் போது, பலத்த இடியோசை போல் கேட்டது. உடனே அங்கே கரும்புகை சூழ்ந்தது. வெடி சத்தம் கேட்ட மறுவினாடியில் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிதறிக் கொண்டு…
Read MoreCategory: தமிழ் சிறகுகள் By Roopa Rajendran
அமெரிக்க பள்ளிமாணவன் ஆசிரியரை கொன்று தானும் தற்கொலை
Nevada student opens fire at middle school, killing teacher and injuring 2 அமெரிக்காவில் பள்ளி ஆசிரியரை சுட்டுக் கொன்றுவிட்டு மாணவன் ஒருவன் தானும் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திஇருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் அருகில் வடமேற்கு நிவாடா என்னும் இடத்தில் ஸ்பார்கஸ் என்ற நடுநிலைப்பள்ளி இருக்கிறது. நேற்று பள்ளி தினவிழா என்பதால் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மற்ற மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். ஆனால் அவன் விடாமல் விரட்டி விரட்டி சுட்டுக்கொண்டிருந்தான். இதைக்கண்ட அப்பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர்…
Read Moreமாகாத்மா காந்தி பயன்படுத்திய 60 பொருட்கள் இங்கிலாந்தில் ஏலம்
Mahatma Gandhi relics to be auctioned in Britain புனே ஏர்வாடா சிறையில் மகாத்மா காந்தி இருந்தபோது உபயோகபடுத்திய ராட்டை வரும் 5ம் தேதி நவம்பரில் இங்கிலாந்தில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்படுகிறது. இந்திய சுதந்திர போராட்டித்தில் கலந்து கொண்டபோது மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் ராட்டை ஒன்றை பயன்படுத்தினார். பின்னர் அந்த ராட்டையை அமெரிக்க பாதிரியாரான ரெவரன்ட் ஃப்லாய்ட் ஏ பஃப்பருக்கு பரிசாக அளித்தார். அந்த ராட்டை வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனமான முல்லக்ஸில் ஏலத்திற்கு வருகிறது. இந்த ராட்டையின் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 59 லட்சத்து 68 ஆயிரத்து 827 ஆகும். முல்லக்ஸில் காந்தி தொடர்பான சுமார் 60 பொருட்கள் ஏலத்திற்கு…
Read Moreமனிதர்கள் போல் பல மணி நேரம் பேசி கொள்ளும் மார்மோஸட் குரங்குகள்
Monkeys have manners too! மனிதர்களை போல மார்மோஸட் இனக் குரங்குகள் பல மணி நேரம் பேசிக்கொள்கின்றன. அதிலும் குறிப்பாக அழகாக மற்ற குரங்கு பேசுவதை உன்னிப்பாக கேட்டு பின்னர் பொருமையாக யோசனை செய்து அதற்கு பதில் அளிக்கிறது. “உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து இவை ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்ளும் காட்சி பதிவுசெய்யப்பட்டுள்ளது. மார்மோஸட் குரங்குகளின் உரையாடல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறுகையில், இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோஸட் குரங்குகள் சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற மற்ற குரங்கினங்களிலிருந்து முழுமையாக வேறுபட்டு தனித்தன்மையுடன் உள்ளன. ஒன்றுக்கொன்று நட்புடன் பழகுவது, தகவல் தொடர்புகளுக்கு…
Read Moreமேற்குவங்க அரசிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 64 ரகசிய கோப்புகள்
Make public 64 secret Netaji Subhas Chandra Bose files, Bose family urges Mamata Banerjee இந்திய தேசிய ராணுவம் எனும் இந்தியர்களை கொண்ட போராளிகள் படையை உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராட்டத்தை நடத்தி, பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மணி படைகளுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி போர் விமானத்தில் ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, கோளாறு காரணமாக விமானம் மலை மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read Moreஉணவு பரிமாறி பில் கொடுக்கும் தானியங்கி ஜப்பான் உணவகம்
Automated Japanese restaurant serves without waiters ஜப்பான் நாட்டில் புதிய ஒரு உணவகம் அறிமுகம் திறக்கபட்டுள்ளது. இந்த உணவகத்தின் தனித்தன்மை என்னவென்றால் இதில் நமக்கு பரிமாற வெயிட்டர் யாரும் கிடையாது. இருக்கையில் அமர்ந்துகொண்டு கம்பியூட்டர் தொடுதிரையில் நமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்தால் போதும் சுமார் 5 மணித்துளிகளில் உணவு நம்மை தேடி வரும். அதுமட்டும் இன்றி அத்தனையும் தானியங்கி தான். மேலும் உங்களுடைய பில்லும் உடனுக்குடன் நீங்கள் அமர்ந்து இருக்கும் இடத்திலேயே பில்லிங் இயந்தரத்திலேயே பில் தயாராகி வந்துவிடும். இப்படி இந்த பூமி அடுத்த தலைமுறை இயந்திரங்களை நோக்கி நகர தொடங்கி விட்டது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணம் இது என கூறலாம். Automated Japanese restaurant serves without waiters The Japanese conveyor belt sushi restaurant: It is not…
Read Moreஜெர்மன் மதுபான விடுதி சண்டையில் மூக்கை கடித்து துப்பிய வாலிபன்
In Germany, man bites off part of nose in bar brawl மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் எதிராளியுடைய மூக்கை கடித்து துப்பி தலைமறைவாகிபோன வாலிபரை ஜெர்மன் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். ஜெர்மன் நாட்டில் பிரெமென் எனும் நகரத்தில் இருக்கும் மதுபான விடுதி ஒன்றில், நேற்று வாரக்கடைசி நாள் ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. மதுபான விடுதியில் போதை கூடுதலான உள்ளூர் குடிமகனுக்கும், நார்டென்ஹாம் என்ற இடத்தை சேர்ந்த ஒரு குடிகாரருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறு அடிதடியாக மாறியது. மற்ற குடிகாரர்களின் தலையீட்டால் தற்காலிகமாக அவர்கள் பிரித்து வைக்கப்பட்டாலும், நார்டென்ஹாம் ஆத்திரம் அடங்காமல் உள்ளூர்வாசி அசந்த நேரத்தில் பாய்ந்து சென்று அவருடைய மூக்கை கடித்து குதறி அதை பிடுங்கி கீழே துப்பிவிட்டார். அந்த நார்டென்ஹாம் நபரை, மற்ற குடிமகன்கள் பிடிக்க…
Read Moreஇந்தியாவில் 91% பதிவு பெறாத எக்ஸ்-ரே நிலையங்கள்
91 pc of X-Ray units in country without registration இந்தியாவில் செயல்பட்டுகொண்டிருக்கும் 91 சதவிகிதமான எக்ஸ்-ரே நிலையங்கள் முறையாக பதிவு செய்யாமல் செயல்படுகிறது என்று, பொது கணக்கு கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ சோதனைக்காக செயல்பட்டுகொண்டிருக்கும் எக்ஸ்-ரே எடுக்கும் நிலையங்கள், இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திடமிருந்து முறையாக பதிவு செய்து கொண்டு, அனுமதி வாங்கவேண்டும். இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தான், இந்தியாவில் உள்ள எக்ஸ்ரே நிலையங்களுடைய செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குமுறைப்படுத்துகின்றது. இந்த அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தினுடைய செயல்பாடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்டிருக்கிறார். இதை, பி.ஏ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் பொது கணக்கு கமிட்டி ஆய்வு மேற்கொண்டது. பொது கணக்கு கமிட்டி ஆய்வில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்துதிருக்கிறது. இந்தியாவில்…
Read Moreபராகுவே நாட்டில் 80 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து காதல் திருமணம்
103-year-old man marries 99-year-old woman in Paraguay பராகுவே நாட்டில் உள்ள வயதான காதல் ஜோடி ஒன்று காலம் கடந்தாலும் காதல் வெற்றிபெறும் என நிருபித்திருக்கிறார்கள். சுமார் 80 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து தற்சமயம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் முன்னிலையில் அவர்கள் நடத்தி வைக்க திருமணம் நடைபெற்றது. பராகுவே நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் அந்நாட்டைச் சார்ந்த ஜோஸ் மேனுவல் ரெய்லா மற்றும் அவரது காதலி மார்டினா லோபஸ். காதலர்கள் இருவரும் காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கினர். அதன்பிறகு குழந்தைகள் பெற்றெடுத்து பேரப்பிள்ளைகளை கண்ட பின் சுமார் 49 ஆண்டுகளுக்கு சென்ற பின்னர் சாதாரண முறையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். எனினும், பாதிரியாரின் முன்னிலையில் அத்திருமணம் நடக்கவில்லை. இது காதலி மார்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய குறையாக இருந்திருக்கிறது. ஆகவே, இப்போது தனது குடும்பத்தினரின்…
Read Moreடைட்டானிக் கப்பலில் வாசிக்கப்பட்ட வயலின் 9 கோடி ரூபாய்க்கு ஏலம்
Titanic Violin Sells For Record £900,000 டைட்டானிக் கப்பல் மூழ்கும் நிலையில் இருந்த போது பயணிகளை சாந்த படுத்துவதற்காக வாசிக்கப்பட்ட வயலின் ஏலம் விடப்பட்டது. அந்த வயலின் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதலாக 8 கோடியே 91 லட்சத்து 93 ஆயிரத்து 792 ரூபாயிக்கு ஏலம் போனது. இங்கிலாந்தில் இருந்து கடந்த 1912ம் ஆண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்ட டைட்டானிக் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. இதில் 1,517 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிகொண்டிருந்த போது பயணிகளை சாந்தபடுத்துவதற்காக இசைக்குழுவின் தலைவர் வாலஸ் ஹார்ட்லி இந்த வயலினை பயன்படுத்தி வாசித்துள்ளார். இங்கிலாந்தின் வில்ட்ஷயரில் இருக்கும் ஏல நிறுவனத்தில் ஹார்ட்லி வாசித்த வயலின் இசை கருவி நேற்று ஏலத்தில் விடப்பட்டது. ஏலம் ஆரம்பமான சுமார் 10 நிமிடங்களில் ஒரு நபர் அந்த வயலின் இசை…
Read More