reducing infant maternal mortality tamil nadu
இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் 3-ல் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் 50 % மாகக் குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மாநில அரசினால் கையாளப்படும் பொது சுகாதார வழி முறைகள் தான் இது போன்ற முன்னேற்றத்திற்கு முக்கியக்காரணம் என கருதப்படுகின்றது.
குழந்தை இறப்பு விகிதம் என்பது ஒரு வருடத்தில் பிறந்த ஆயிரம் குழந்தைகளில் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் கணக்கிடுவதாகும். இது சுகாதார சேவைகள், ஊட்டச்சத்து அளவு, வறுமை மற்றும் மக்களின் கல்வி நிலை போன்றவற்றில் ஒரு முக்கியக் குறியீடாக விளங்குகின்றது. கடந்த 2000ஆவது ஆண்டுத் துவக்கத்தில் ஐ.நா அமைப்பு, குழந்தைகளின் இறப்பு விகிதம் உலக நாடுகளில் குறைக்கப்பட வேண்டும் என்பதை தன்னுடைய சுகாதாரக் கழகத்தின் வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகக் கொண்டிருந்தது. இதற்கான கெடுவாக 2015 ஆம் வருடத்தினையும் அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது. தற்போது கடந்த 2012ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் மூலம் மாதிரி பதிவுத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியாவின் மொத்த மாநிலங்களிலும் குழந்தை இறப்பு விகிதம் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுள், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்களில் குழந்தை இறப்பு விகிதம் 40 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலோ இது 50 சதவிகிதமாகக் குறைந்துள்ளது தெரிய வந்திருக்கின்றது. மாநில அரசுகளால் கையாளப்படும் பொது சுகாதார முறைகளே இத்தகைய முன்னேற்றத்திற்குக் காரணம் என்று கருதப்படுகின்றது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இந்த இறப்பு விகிதத்திற்கான இடைவெளி தொடர்ந்து காணப்படும்போது இறப்பு விகிதம் குறைந்து வருவதும் இந்தக் கணக்கீட்டின் மூலம் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பரந்த மற்றும் சிறந்து காணப்படும் சுகாதார சேவைகளும், ஊட்டச்சத்து திட்டங்களும் குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைத்து மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை முன்னணியில் நிறுத்தியுள்ளது.
reducing infant maternal mortality tamil nadu
There has been 50% reduction in the Infant Mortality Rate (IMR) from 48 deaths per 1,000 in 1999 to 31 deaths in 1,000 live births in 2006 although additional efforts are needed to bring Tamil Nadu’s IMR closer to its better-performing neighbours.