Karunanithi blames Jayalaithaa for not constructing Maduravoyal Elevated high way சென்னை, ஆக. 13- : தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2006ஆம் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதும், 5.6.2006 அன்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு நான் எழுதிய கடிதத்தில், சென்னைத் துறைமுகத்தையும் மதுரவாயலையும் இணைத்திட உயர்மட்டப் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை அனுமதித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததோடு, பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து 8.1.2009 அன்று முதலமைச்சராக இருந்த என் தலைமையில், அந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். கழக ஆட்சியில் விரைவாக நடைபெற்று வந்த இந்தத் திட்டத்தை தொடரவிடாமல் அ.தி.மு.க. அரசு தடுத்துவிட்ட காரணத்தால் தான், இந்தப் பணிகளை மேற்கொண்டு வந்த “சோமா” நிறுவனம், தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்று கோரியது.…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி பாஜகவில் இணைந்தது
Subramanian Swamy Janata Party merges with BJP புதுதில்லி:12.ஆகஸ்ட்.2013: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்தார். ஜனதா கட்சித் தலை வர் சுப்ரமணியசாமி, பாஜ தலைவர்களுடன் சமீபகாலமாக நெருக்கமாக காணப்பட்டார். இந்நிலை யில், தனது கட்சியை பாஜ.வுடன் இணைப்பது பற்றி அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொ டர்ந்து, பாஜ.வுடன் ஜனதா கட்சி இணைக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும்…
Read Moreஆந்திராவை பிரிப்பதில் மாற்றம் இல்லை சோனியா உறுதி
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8-வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் இந்நிலையில் . கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நடந்துவரும் இப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் வரும் 12ம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆந்திரா பகுதி காங்கிரஸ் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளனர். அப்போது சோனியா காந்தி கூறுகையில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே அந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரசார் தெலுங்கானா அமைய முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்த பகுதி மக்களுக்கும் அநீதி ஏற்படுத்த வேண்டும் என் பதற்காக நாங்கள் இங்கு இருக்கவில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம், எல்லாருக்கும் நீதி…
Read Moreகர்நாடக அரசியலில் குத்து ரம்யா என்கின்ற திவ்ய ஸ்பந்தனா
kuthu ramya entering karnataka politics நடிகர் நடிகைகள் அரசியல் நுழைவு இந்தியவில் தொடர்ந்து வரும் வரலாறு ஆகும் இந்த வரிசையில் இணையும் அடுத்த பிரபலம் நடிகை திவ்ய ஸ்பந்தனா என்கின்ற குத்து ரம்யா. கர்நாடகத்தின் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரபல நடிகை திவ்ய ஸ்பந்தனா போட்டியிட உள்ளார். பிரபல கன்னட நடிகையான திவ்ய ஸ்பந்தனா, இவர் கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணாவின் பேத்தியாவர்.இந்நிலையில் இவர் மாண்டியா எம்.பி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர் தொகுதி எம்.பி.யாக இருந்த குமாரசாமியும், மாண்டியா எம்.பி.யாக இருந்த சலுவரய்யாசாமியும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வரும் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நடிகை ரம்யா பெயரை முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ்…
Read Moreமாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர்!
Sachin Tendulkar in Parliament புது தில்லி: ஆகஸ்ட் 06 2013: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு எம்.பி சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவையில் நேற்று கலந்து கொண்டார். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகை ரேகா, தொழிலதிபர் அனு அகா ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியதால், அதில் சச்சின் டெண்டுல்கர் நேற்று கலந்து கொண்டார். அவை கூடுவதற்கு முன்பாகவே வந்த சச்சின், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவுடன் இணைந்து அவைக்குள் நுழைந்தார். தனது இருக்கையில் அமருவதற்கு முன் சில எம்.பி.க்களுடன் கை குலுக்கினார். இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி வென்றதற்கு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி பாராட்டு தெரிவித்தபோது, டெண்டுல்கர் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். அமளி காரணமாக அவை 10 நிமிடங்கள்…
Read Moreதகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
modification in right to information act புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு: மந்தமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய, தொலை தொடர்புத் துறையில், 74 சதவீத அளவுக்கு உள்ள, அன்னிய நேரடி முதலீட்டை, 100 சதவீதமாக அதிகரிப்பது உட்பட, 12க்கும் மேற்பட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்க, ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. “தகவல் பெறும் உரிமைச் சட்டம், காங்கிரஸ் உட்பட, சில அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். அதனால், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை, அந்தக் கட்சிகள் தர வேண்டும்’ என, சமீபத்தில், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இது, அரசியல் கட்சிகளுக்கு…
Read Moreபிரதமர் மன்மோகன்சிங் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்
Prime minster Manmohan singh arrived Trichy புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஓலைக்குடிப்பட்டியில் 57 ஏக்கரில் ரூ.600 கோடியில் பெல் பவர் பிளான்ட் பைப்பிங் யூனிட் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங், இந்தியன் ஏர்போர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் காலை 11.05 மணிக்கு திருச்சி வந்தார். வரவேற்பு முடிந்த பின்னர் தனி ஹெலிகாப்டரில் 11.10 மணிக்கு திருமயம் புறப்பட்டுச் சென்றார். Prime minster Manmohan singh arrived Trichy
Read Moreகெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!
‘Broom’ is Aam Aadmi Party’s election symbol வியாழன், 2 ஆகஸ்ட் 2013: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் கமிஷன் துடைப்பம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடிய அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடி பின் பிரிந்த அரவிந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி எனும் கட்சியை தொடங்கினார். சென்ற டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட அக்கட்சிக்கு தேர்தல் கமிஷனும் மார்ச் மாதம் அங்கீகாரம் வழங்கியது. இச்சூழலில் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் கமிஷனிடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க துடைப்பம் சின்னத்தை அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலில் நிறைந்துள்ள குப்பையை தம் கட்சியால் மட்டுமே துடைக்க முடியும் என்பதாலேயே…
Read Moreசேது சமுத்திர திட்டத்தால் தூத்துக்குடி வளர்ச்சி அடையாது: வை.கோ
No improvements can be made in Tuticorin implementing sethu canal: Vaiko தூத்துக்குடி : “”மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம்,” என, வைகோ தெரிவித்தார். தூத்துக்குடியில், ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அவர் கூறியதாவது: சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, நான் முன்னிலையில் இருந்து செயல்பட்டேன். அப்போதைய சூழ்நிலைகள் வேறு. தற்போது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். கடல்வளத்தை நம்பி வாழும் மீனவர்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இத்திட்டத்தில் சர்வதேச அளவிலான, பெரிய கப்பல்கள் வந்து செல்ல முடியாது. இத்திட்டத்தால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை. மீனவர்களின் அச்சத்தை போக்கிய பின், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாம். ஈழத்தமிழர் படுகொலையை திசை திருப்புவதற்காக, இப்பிரச்னையை தி.மு.க., கையில் எடுத்துள்ளது. இலங்கையில் “காமன்வெல்த்’ மாநாடு நடத்தக் கூடாது.…
Read Moreதேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதிஆலோசனை
Election Commission calls all-party meet on August 12 for framing guidelines on ‘freebies’ புதுடெல்லி, ஆக.2-2013: தமிழ்நாடு அரசு அறிவித்த இலவசங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. அதன்படி, இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, வருகிற 12-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் கமிஷன் கூட்டி உள்ளது. அதில், இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி அனைத்து கட்சிகளின் கருத்தையும் தேர்தல் கமிஷன் கேட்கும். மேலும், ‘இலவசம்’ என்பதற்கான அர்த்தத்தை வரையறுப்பது பற்றியும் கட்சிகளின் கருத்தை கேட்கும். அதன் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும். Election Commission calls all-party…
Read More