separate Telangana state ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்டின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜீத்…
Read MoreCategory: அரசியல் சிறகுகள்
ஆடிட்டர் ரமேஷ் கொலை: 4 பேர் கைது
4 accused arrested in auditor ramesh murder case நெல்லை,ஜூலை28:ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பாக நெல்லையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்ட நிலையில், சேலத்தில் பாஜக மாநில பொது செயலர் ஆடிட்டர் கடந்த 19ம் தேதி மரவேனரி கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த போது மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் கொலை குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய சிபிசிஐடி டிஜிபி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இதில், கொலை வழக்கு குற்றவாளியாக மதுரையை சேர்ந்த…
Read Moreமீனாட்சி நடராஜன் 100% வீதம் கவர்ச்சியானவர்: திக் விஜய் சிங்
Congress defends Digvijaya Singh’s remarks on Meenakshi Natarajan காங்கிரஸ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான தமிழகத்தைச் சேர்ந்த மீனாட்சி நடராஜன் 100 வீதம் கவர்ச்சியானவர் எனும் அர்த்தத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக் விஜய் சிங் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பேசிய திக் விஜய் சிங், காங்கிரஸ் கட்சியில் பெண்கள் அதிக அளவில் கடுமையாக உழைக்கின்றனர். இதோ இங்கு இருக்கும் மண்ட்சோர் எம்.பி மீனாட்சி நடராஜன் இதற்கு நல்லதொரு சாட்சி. அவர் மிகவும் நேர்மையானவர். கடும் உழைப்பாளி, இன்னும் சொல்லப்போனால் அனைவரும் விரும்பத் தக்கவகையில் 100 சதவீதம் மிக கவர்ச்சியானவர் எனக் கூறியதாக தொலைக்காட்சி ஊடகமொன்று தகவல் வெளியிட்டது. இதையடுத்து பாஜக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புக்கள் திக்விஜய் சிங்கிற்கு தமது எதிர்ப்பை…
Read Moreஆஸ்ட்ரியாவில் கருணாநிதியின் தபால் தலை
திமுக தலைவர் கருணாநிதியின் 90 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்ட்ரியாவில் அவரது படத்துடன் தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தனது 90ஆவது பிறந்தநாளை கடந்த மாதம் 3 ஆம் தேதி கொண்டாடினார். ஆஸ்ட்ரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்ட்ரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இந்நிலையில் டான் மற்றும் அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து பொது வாழ்க்கை, சினிமா, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர். அந்த தபால் தலையில் கருணாநிதியின் முகம், கட்சிகொடி மற்றும் 90 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த தபால் தலையின் விலை ரூ.7,023 ஆகும். தனிப்பட்ட…
Read Moreதிமுக பற்றி பருதி பேச்சு:மு.க.மணி எங்கே ?
கருணாநிதியின் தத்துப்பிள்ளை, மு.க.மணியை கண்டுபிடிக்க நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., அரசின், இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், அமைச்சர் வளர்மதி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பரிதி இளம்வழுதி கருத்து வெளியிடுகையில், தி.மு.க.,வில் இருப்பது கும்பல், அ.தி.மு.க.,வில் இருப்பது கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும்; கூட்டம் நிலையாக நிற்கும். நானும் நிலையாக உங்களுடன் நிற்பேன். தமிழக அரசியலில், குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் தி.மு.க., வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக தி.மு.க.,விற்கு உழைத்தேன், நான் என்ன தவறு செய்தேன். 1991 – 1996ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.,வாக சட்டசபையில் செயல்பட்டேன். நான் அப்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்து இருந்தால், உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும்,…
Read More"தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்
EC issues show cause notice to Gopinath Munde இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற கோபிநாத் முண்டே, 2009 தேர்தலில் எட்டு கோடி ரூபாய் செலவு செய்து தான் தேர்தலில் வென்றதாக அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது தேர்தல் செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கோபிநாத் முண்டே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த தேர்தல் செலவின அறிக்கையில் தனக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகியிருந்ததாக கணக்கு காட்டியிருந்தார். வரம்பு மீறி தேர்தல் செலவு செய்தமைக்காக மஹராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கோபிநாத் முண்டேவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழனன்று மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த…
Read Moreபருதிஇளம்வழுதி அதிமுகவில் இணைந்தார்
dmk famous former minister Joins AIADMK திமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சியின் முன்னால் துணை பொது செயலாளரும் மான பருதி இளம்வழுதி அதிமுகவில் இணைந்தார். திமுகவின் பிரபலமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்த பருதி அவர்கள் சற்று நாட்களாக திமுகவின் அனைத்து கூட்டம் மற்றும் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். இன்று திடிரென்று அவர் முதல்வர் ஜெ வை சந்தித்து அதிமுக வில் அவரை இணைத்துக் கொண்டார். பருதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டால் அவர் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது. இவர் தி.மு.க.,வில் துணை பொதுசெயலாளராகவும், ஒரு முறை செய்தி துறை அமைச்சராகவும், ஒரு முறை துணை சபாநாயகராகவும் இருந்தார். இவர் கடந்த 1981 ல் தி.மு.க.,வின் எம்.எல்.ஏ.,வானார். ராஜிவ்கொலைக்கு பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் (1991) கருணாநிதி, பரிதி ஆகிய இருவர் மட்டுமே எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்…
Read Moreமாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி
admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில் அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…
Read Moreகர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது
நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சிகிச்சை போன்றவற்றிற்கான செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கூடிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளோம். இத்திட்டத்தின்படி பிரசவத்துக்கு முன் 7 முதல் 9 மாதங்கள் வரை அவர்களின் சிகிச்சை, நோய் அறிகுறிகளை அறிதல், மற்றும் போக்குவரத்து உணவு ஆகியவற்றுக்கான செலவுகளையும் மேலும் குழந்தை பிறந்த ஒராண்டு வரை நோய் ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்திரா காந்தி மாத்ருத்வ சஹயோக் யோஜனா திட்டத்தின்படி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின்போது மட்டுமே பயன்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அத்திட்டத்தை மேலும் தரம் உயர்த்த உள்ளோம்.…
Read Moreதமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்
New Tamilnadu ministers of aiadmk Government ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான் மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர் தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல் மரபினர் அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல்…
Read More