கடலூரில் விவசாயிகள் சங்க அகில இந்திய மாநாடு துவக்கம்..

கடலூர்: அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33வது அகில இந்திய மாநாடு, கடலூரில் நேற்று துவங்கியது. சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், மாநாட்டுக் கொடியை சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யா ஏற்றி, பேசினார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகள் சுடரை விழாக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். 33வது மாநாட்டை குறிக்கும் வகையில் மண்டப வளாகத்தில் 33 மரக்கன்றுகள் நடப்பட்டன. தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின், மாநாடு துவங்கியது. அகில இந்திய இணைச் செயலர் சுக்லா, அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வரவேற்றார். அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை தலைமை உரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலர் அதுல்குமார் அஞ்சான் வாழ்த்திப் பேசினார். துவக்க விழாவில் வரவேற்புக் குழு கவுரவத் தலைவர்…

Read More

வால்மார்ட் போனால், மற்றோரு மார்ட் வரும்: காங்கிரஸ்

Walmart can’t meet norms, Congress says other ‘marts’ will come அமெரிக்கா விலும் ஐரோப்பாவிலும் சில்லரை வணிகம் பல்தேசிய வியாபார நிறுவவங்களின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகக் கொண்டுவரப்பட்ட காலம் 1970 களின் ஆரம்பகாலம். இதன் பின்னர் சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நிறுவனங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டிலிருந்து மீள முடியாத நெருக்கடிக்குள் ஐரோப்பிய அமெரிக்கா நாடுகள் அமிழ்ந்துள்ளன. மக்கள் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஐரோப்பா அமெரிக்கா  போன்ற நாடுகளைப் போலன்றி வளரும் நாடுகளில் ஒன்றான இந்தியா சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை அழித்து மக்களை மேலும் வறுமைக்கு உட்படுத்தும் நோக்கில் வால்மார்ட் போன்ற அழிப்பு நடத்தும் பல்தேசிய நிறுவனங்களை கையைப் பிடித்து அழைத்து வந்துள்ளன. சில்லரை வணிகத்தில் இலாபமடையும் அன்னிய நிறுவனங்களின் உள்ளூர்த் தரகர்களின் நலன்களுக்காகச் செயற்படும் இந்திய அரசு மக்களை மந்தைகளாகவே கருதுகின்றது, தொலைத்தொடர்பு, காப்பீடு, பாதுகாப்பு துறைகளில் அன்னிய…

Read More

நாட்டின் பொருளாதார வளர்ச்சி: பிரதமர் நடவடிக்கை?

Manmohan Singh assures industry of economic recovery புதுடில்லி:”நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளது. இந்த நிலையை, சரி செய்து, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு, தேவையான உறுதியான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும்,” என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். சீர்திருத்த நடவடிக்கை:டில்லியில்,”அசோசெம்’ அமைப்பின், கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:நாட்டில் பொருளாதார மந்த நிலை, அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது, திருப்திகரமாக இல்லை. இது கவலையளிக்கிறது. ஆனாலும், இதை சரி செய்தே தீருவது என்ற உறுதியுடன்,மத்திய அரசு செயலாற்றிக் கொண்டு வருகிறது. யாரும் பீதியடையத் தேவையில்லை என்ற வகையில், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில், அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. எனவே, நாட்டின் பொருளாதாரம், மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கும் நாள், வெகுதூரத்தில்…

Read More

பீகாரில் பள்ளியில் மதிய உணவு: 16 குழந்தைகள் பலி

16 children dead after mid-day meal in Bihar பாட்னா – பீகாரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவுண்ட 16 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தச் சம்பவம்  நாடு முழுவதும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. பீகார் சரண் மாவட்டத்தினைச் சார்ந்த ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த  பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மனிதவள மேம்பாட்டுத்துறையினைச் சார்ந்த ஒரு அதிகாரி இது பற்றி விசாரணைச் செய்வதற்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான குழந்தைகள் எட்டு முதல் பனிரெண்டு வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மரணம் அடைந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவினையும் அவர் நியமித்துள்ளார். இந்தியாவில் ஏறத்தாழ 13 கோடி மாணவர்கள் ஆரம்ப பள்ளியில் பயின்று வருகின்றனர். இதற்கு முன்பாக கோவாவில் 23 குழந்தைகளும், ஒரிஸாவில் 30 குழந்தைகளும், டெல்லியில் 40…

Read More

மும்பை பார்களில் அழகிகள் டிஸ்கோத்தே: நீதிமன்றம் அனுமதி

dance bars in maharashtra மும்பை பார்களில் டிஸ்கோத்தே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன. இதற்கு எதிராக மும்பை போலிசார் கடந்த 2005ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது, இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை. இந்த தடையை எதிர்த்து மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டதால், இதனை எதிர்த்து மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மும்பையில் பார்களை மீண்டும் திறந்து ஆட்டம் போடலாம் என்றும், பார்களில் ஆட்டத்திற்கு…

Read More

160 ஆண்டு கால தந்தி சேவை முடிவுக்கு வந்தது

The 163-year old telegram service in the country is end ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ளவர்களுக்கும் அவசர செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க உதவிய 160 ஆண்டு கால பழைமையான தந்தி சேவை இந்தியாவில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்தியாவில் பரீட்சார்த்த(சோதனை) முறையில் 1850ம் ஆண்டு கொல்கத்தாவில் முதன் முதலாக தந்தி சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியார் மட்டுமே பயன்படுத்தி வந்த தந்தி சேவை 1854ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட அவசர செய்திகளை பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு தந்தி மூலமாகவே பரிமாறி வந்தனர். செல்போன், இ.மெயில் போன்ற நவீன வசதிகள் பெருகிவிட்டதால் தந்தி சேவையின் முக்கியத்துவம் மக்களிடையே சிறுகச்சிறுக குறையத் துவங்கியது. இதன் விளைவாக,…

Read More

போலி என்கவுன்ட்டர்: 13 போலீஸார் உள்பட 21 பேருக்கு ஆயுள் தண்டனை

13 Mumbai policemen get life imprisonment in fake encounter case மும்பை: ஜூலை 13, 2013: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கூட்டாளி என்ற சந்தேகத்தின் பேரில், 7 வருடங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பிலான வழக்கு ஒன்றில், 13 போலீஸார்  உள்ளிட்ட 21 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து மும்பை செஷன் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மும்பையை சேர்ந்த ராம் நாராயண் குப்தா என்பவர், மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு நெருக்கமானவர் எனக்கூறி 2006 இல் போலீசாரால்  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிராக அவரது சகோதரரும் வழக்கறிஞருமான ராம் பிரசாத் குப்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. போலி என்கவுண்டரில் தொடர்புடைய பிரதீப்…

Read More

லோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே

Anna Hazare accuses UPA of betrayal on Lokpal, threatens fresh stir புதுடெல்லி, ஜூலை 6– லஞ்சம், ஊழலை ஒழிக்க வகை செய்யும் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி பிரபல காந்திய வாதி அன்னாஹசாரே கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஊழலுக்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அன்னாஹசாரேக்கு ஆதரவு பெருகியது. ஊழலுக்கு எதிராக மக்கள் அலை, அலையாக திரள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு வேறு வழியில்லாமல் பணிந்தது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்பால் உறுப்பினர்கள் மற்றும் செயல்படுத்தும் விஷயத்தில் அன்னா ஹசாரேக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து…

Read More

"தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்

EC issues show cause notice to Gopinath Munde இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற கோபிநாத் முண்டே, 2009 தேர்தலில் எட்டு கோடி ரூபாய் செலவு செய்து தான் தேர்தலில் வென்றதாக அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது தேர்தல் செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கோபிநாத் முண்டே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த தேர்தல் செலவின அறிக்கையில் தனக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகியிருந்ததாக கணக்கு காட்டியிருந்தார். வரம்பு மீறி தேர்தல் செலவு செய்தமைக்காக மஹராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கோபிநாத் முண்டேவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழனன்று மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த…

Read More

தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!

gold price dips in tamilnadu வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய…

Read More