why investigating agencies did not take action for four years regarding Radia tape contents in 2g புதுதில்லி 08-ஆகஸ்ட்-2013: நீரா ராடியா உரையாடல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேட்டு, மத்திய அரசு அமைப்புகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. தன் சாட்சிகள் பட்டியலில், அரசியல் தரகர் நீரா ராடியாவின் பெயரை குறிப்பிட்டு இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், மீடியா ஆலோசகராகவும், அரசியல் தரகராகவும் செயல்பட்டார். இவர், ஒன்பது ஆண்டுகளில், 300 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக எழுந்த புகார் அடிப்படையில், இவர் மீதான விசாரணைக்கு, நிதி அமைச்சகம் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில், வருமான வரித் துறையினர், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை இடைமறித்து பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.…
Read More 2ஜி ஊழல் நீரா ராடியா "டேப்" : சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்Category: இந்தியா – சிறகுகள்
டெல்லி பல்கலைகழகத்தில் மாணவிக்கு ஏற்ப்பட்ட அவலம்
Women raped in Delhi university டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மானபங்கம் படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் பெண்களுக்கான பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்றுவந்தார். இந்நிலையில் இவரை சந்திக்க வந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் திடீரென்று அப்பெண்ணை அடித்து தகாத முறையில் நடந்துக்கொண்டார். இதனால் அப்பெண் கூச்சலிட்டுள்ளார் .மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு குவிந்த பிற மாணவர்கள் முன்னாள் மாணவரை அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கே. சொபோரி, இத்தகைய குற்றங்கள் மற்றும் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது. மேலும் இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். Women raped…
Read More டெல்லி பல்கலைகழகத்தில் மாணவிக்கு ஏற்ப்பட்ட அவலம்தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
modification in right to information act புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் தலைமையில் நேற்று இரவு நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு: மந்தமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்ய, தொலை தொடர்புத் துறையில், 74 சதவீத அளவுக்கு உள்ள, அன்னிய நேரடி முதலீட்டை, 100 சதவீதமாக அதிகரிப்பது உட்பட, 12க்கும் மேற்பட்ட துறைகளில், அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்க, ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. “தகவல் பெறும் உரிமைச் சட்டம், காங்கிரஸ் உட்பட, சில அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். அதனால், பொதுமக்கள் கேட்கும் தகவல்களை, அந்தக் கட்சிகள் தர வேண்டும்’ என, சமீபத்தில், மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இது, அரசியல் கட்சிகளுக்கு…
Read More தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்அசாமில் 8 ஆண்டுகளில் 59 பலாத்கார கொலை,12,000 கற்பழிப்பு
Nearly 12000 women raped in Assam in 8 years கவுகாத்தி : அசாமில், கடந்த எட்டு ஆண்டுகளில், 12,000க்கும், மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 59 பேர் பலாத்கார கொலை : நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், பெண்கள், அதிக அளவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக, அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 2005 முதல் 2013 மே வரையிலான, எட்டு ஆண்டுகளில், 12 ஆயிரத்து 857 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், 59 பேர் பலாத்காரத்திற்கு பின், கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும், மாநில உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது: பாலியல் பலாத்காரம் தொடர்பாக, 8,181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 ஆயிரத்து 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பசி, படிப்பின்மை போன்ற காரணங்களாலும், மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க,…
Read More அசாமில் 8 ஆண்டுகளில் 59 பலாத்கார கொலை,12,000 கற்பழிப்புகெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!
‘Broom’ is Aam Aadmi Party’s election symbol வியாழன், 2 ஆகஸ்ட் 2013: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் கமிஷன் துடைப்பம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஊழலுக்கு எதிராக போராடிய அன்னா ஹசாரேவுடன் இணைந்து போராடி பின் பிரிந்த அரவிந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி எனும் கட்சியை தொடங்கினார். சென்ற டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட அக்கட்சிக்கு தேர்தல் கமிஷனும் மார்ச் மாதம் அங்கீகாரம் வழங்கியது. இச்சூழலில் வரும் டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவித்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் கமிஷனிடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க துடைப்பம் சின்னத்தை அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியலில் நிறைந்துள்ள குப்பையை தம் கட்சியால் மட்டுமே துடைக்க முடியும் என்பதாலேயே…
Read More கெஜ்ரிவால் கட்சிக்குத் துடைப்பம் சின்னம்!தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதிஆலோசனை
Election Commission calls all-party meet on August 12 for framing guidelines on ‘freebies’ புதுடெல்லி, ஆக.2-2013: தமிழ்நாடு அரசு அறிவித்த இலவசங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்’ என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டது. அதன்படி, இதுபற்றி ஆலோசனை நடத்துவதற்காக, வருகிற 12-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தேர்தல் கமிஷன் கூட்டி உள்ளது. அதில், இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது பற்றி அனைத்து கட்சிகளின் கருத்தையும் தேர்தல் கமிஷன் கேட்கும். மேலும், ‘இலவசம்’ என்பதற்கான அர்த்தத்தை வரையறுப்பது பற்றியும் கட்சிகளின் கருத்தை கேட்கும். அதன் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும். Election Commission calls all-party…
Read More தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: தேர்தல் கமிஷன் அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதிஆலோசனை65 தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்
65 indian fishermen arrested by srilankan Navy நாகை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கைக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா புதன்கிழமை காலை தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் மேற்கொண்ட விசாரணையில், நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த செ. இளமுருகனுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற சிலம்பரசன், விஜயபாலன், வீரைய்யன், கதிரவன், சக்திவேல், சிவராஜ் ஆகிய 6 பேர், அக்கரைப்பேட்டை கு. மதி என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற கு. மதி, கு. இளங்கோவன், இ. மதன், என். சிங்காரவேலு, வ. ஆறுமுகம், சி. இறைவன்,…
Read More 65 தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கம்
separate Telangana state ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலத்தை உருவாக்க, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (ஐமுகூ) தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் உயர் அதிகாரம் மிக்க காரிய கமிட்டி கூட்டத்தின் முடிவில் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் புதிய மாநிலம் உருவாக்கப்படும். இது நாட்டின் 29ஆவது மாநிலமாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆந்திரம், தெலங்கானாவுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகராக இருக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய லோக்தள தலைவர் அஜீத்…
Read More தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கம்பணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!:வட்டி விகிதம் அதிகரிக்கும்?.
The Reserve Bank of India (RBI) இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ரூபாய் மதிப்பை நிலைக்குக் கொண்டு வர மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, புதிய சில நடவடிக்கைகளை அறிவித்திருப்பதன் மூலம் லிக்விடிட்டியை மீண்டும் இறுக்கமாக்கியுள்ளது. ஆர்பிஐ, லிக்விடிட்டி அட்ஜஸ்ட்மெண்ட் வசதியின் (LAF) கீழ் வங்கிகளுக்கு வழங்கி வந்த பணத்தை, வங்கியில் இருக்கக்கூடிய டெபாசிட்களில் சுமார் 0.5 சதவீதம் என்ற விகிதத்தில் குறைத்துள்ளது. இது ஒட்டுமொத்த வங்கி அமைப்புக்குமான சுமார் 1% அல்லது 75,000 கோடிகளோடு ஒப்பிடப்பட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. “LAF உபயோகத்துக்கான ஒட்டுமொத்த வரையறை ஒவ்வொரு வங்கிக்கும், இரண்டாவதாக வரக்கூடிய இருவார காலக்கெடுவின் கடைசி வெள்ளிக்கிழமையில் இருக்கக்கூடிய அதன் சொந்த என்டிடிஎல் (NDTL) அவுட்ஸ்டாண்டிங்கில் சுமார் 0.5 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜூலை 24, 2013 -இலிருந்து அமலாக்கம்…
Read More பணப்புழக்கத்தை இறுக்கியது ஆர்பிஐ!:வட்டி விகிதம் அதிகரிக்கும்?.சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்
பொருளாதார ரீதியாக சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளருவது இந்தியப் பொருளாதாரம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், மிளகனூரில் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கிக் கிளை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. வங்கித் தலைவர் எஸ்.எல். பன்சால் தலைமை வகித்தார். மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வங்கிக் கிளை, ஏ.டி.எம். மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். தனது சொந்த தொகுதியான சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ப.சிதம்பரம் பேசியதாவது: அனைத்து நாடுகளிலும் பொருளாதார மந்த நிலை உள்ளது. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது சர்வதேச அளவில் மந்த நிலையில் உள்ளது. இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக முடியாது. அதே…
Read More சீனாவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரம்: ப.சிதம்பரம்