இந்திய திருநாட்டின் பண மதிப்பு குறைந்ததற்கும், நாடு முன்னேற்றம் காணாமல் இன்னும் பின் தங்கியே இருப்பதற்கும், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசே காரணம் என்றும், தற்போதைய வெளியுறவு கொள்கை சரியில்லை என்றும், இந்தியாவில் சாதித்தது என்ன , வளர்ச்சிப்பணிகள் நடந்தது என்ன என்பது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா என குஜராத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து மாநில முதல்வரும் , பா.ஜ., தேர்தல் பிரசார குழு தலைவருமான மோடி பேசுகையில் குறிப்பிட்டார். பிரதமரின் சுதந்திர தின உரை திருப்தியாக இல்லை. இவரது பேச்சில் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை மறந்தது ஏன் ? அருகில் உள்ள பாகிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் கடும் கண்டனம் எதுவும் தெரிவிக்கவில்லை. இவரது பேச்சு ஒரு குறிப்பிட்ட குடும்ப நலனில்…
Read More நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் தயாரா? நரேந்திரமோடி சவால்Category: இந்தியா – சிறகுகள்
67-வது சுதந்திர தின கொண்டாடம்
67 INDEPENDENCE DAY CELEBRATION 67-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மன் மோகன் சிங் செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். காலை 7.30 மணி அளவில் செங்கோட்டைக்கு வந்த பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி வரவேற்றார். இதனையடுத்து தரைப்படை, கப்பற்படை, விமானப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றார். 21 குண்டகள் முழங்க பிரதமர் மூவர்ணக் கொடியேற்றினார். இதனையடுத்து பிரதமர் மன் மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திவருகிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…
Read More 67-வது சுதந்திர தின கொண்டாடம்ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.
14 year old boy dead in Rail accident மும்பையில் ஒடும் ரயிலில் சிறுவன் ஒருவன் சாகசம் காட்டுகிறேன் என்று நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் தானேவிலிருந்து மும்பராவிற்கு சென்றுக்கொண்டிருந்த பயணிகள் ரயிலில் சயீத் மோஷின் ராஸா14 வயதான இச்சிறுவன் ரயில் பேட்டியின் நுழைவாயிலில் ஒழுங்காக நிற்காமல், ஒரு காலில் மட்டும் தனது உடல் எடையை தாங்கி சாகசம் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கு சரியாக கால்களை மாற்றி ரயிலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த மோஷின் ரேதி பந்தர் என்னும் இடத்திற்கு அருகே ரயில் சென்றுக்கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், பெரும் நகரங்கள் சென்னை மும்பை போன்ற இடங்களில் இளைஞ்சர்கள் இதுபோல சாகசம் செய்கிறோம் என்று உயிரை விடுவது அதிகமாகி வருவதாகவும்,ரயிலில்…
Read More ஒடும் ரயிலில் சிறுவன் சாகசம் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தான்.உணவு பாதுகாப்பு மசோதா மக்களுக்கு சுமை: மோடி
Narendra Modi உணவு பாதுகாப்பு மசோதா சாதாரண மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார். ஏற்கனவே பிரதமருக்கு மோடி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பேசியதாவது:- உணவு பாதுகாப்பு மசோதா சாமானிய மக்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் சுமையாகிவிடும் என்றும்,ஊட்டச்சத்து குறைபாட்டினை எந்த வகையிலும் தீர்க்காது என்றும் கூறியுள்ளார். Narendra Modi
Read More உணவு பாதுகாப்பு மசோதா மக்களுக்கு சுமை: மோடிஆந்திரா மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம்
indefinite strike in Andhra pradesh for Telangana statehood தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அரசு ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் போராட்டத்தில் குதித்ததால், அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர்களும் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து சேவையும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் அண்டைமாநிலங்களில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்க பட்டுள்ளது. ஆந்திராவில் மின் வாரிய ஊழியர்கள் உள்பட 53 அரசு துறைகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநில அரசின் நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய,மாநில அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெலங்கானா அறிவிப்புக்கு எதிராக பதவி விலகவேண்டும் என்று ஆந்திரப் பிரதேச அரசு ஊழியர்…
Read More ஆந்திரா மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம்போர்க்கப்பல் விக்ராந்த் இந்திய கடற்படைத்தளத்தில்
INS Vikrant, India 1st indigenous aircraft carrier launched இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் என்ற போர்க் கப்பல், இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் முறைப்படி இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. முதன் முதலாக இந்திய நிபுணர்களால் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை இயக்குனரகம் வடிவமைத்த இந்த போர்க்கப்பலை கட்டும் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது. 260 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரமாண்டமான விமானம் தாங்கி போர்க்கப்பலின் எடை 37 ஆயிரத்து 500 டன் ஆகும். இந்த கப்பலின் 55 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல் கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கப்பலின் வெளிப்புற கட்டுமானம் மற்றும்…
Read More போர்க்கப்பல் விக்ராந்த் இந்திய கடற்படைத்தளத்தில்கடலில் ஐ .என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல்
India launched its first aircraft carrier INS Vikrant உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாராகி வரும் விக்ராந்த் போர்கப்பல் கடலில் இறக்கப்பட்டது . முதல் கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து விக்ராந்த் போர்கப்பல் கொச்சியில் கடலில் இறக்கப்பட்டது . இந்த 37,500 டன் எடை கொண்ட போர்கப்பலை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, அவரது மனைவி எலிஸபெத்துடன் கலந்து கொண்டு, முறைப்படி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஐ .என்.எஸ் .விக்ராந்த் கப்பலின் சோதனை ஓட்டம் 2016 ஆம் ஆண்டு நடைபெறுகிறது . இந்த விமானந்தாங்கி போர்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்திய கடற் படையில் சேர்க்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார் . Indias first aircraft career-INS Vikrant, placing India in the fifth rank, after US, Russia, Britain and France,…
Read More கடலில் ஐ .என்.எஸ் விக்ராந்த் போர்கப்பல்சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி பாஜகவில் இணைந்தது
Subramanian Swamy Janata Party merges with BJP புதுதில்லி:12.ஆகஸ்ட்.2013: ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்தார். ஜனதா கட்சித் தலை வர் சுப்ரமணியசாமி, பாஜ தலைவர்களுடன் சமீபகாலமாக நெருக்கமாக காணப்பட்டார். இந்நிலை யில், தனது கட்சியை பாஜ.வுடன் இணைப்பது பற்றி அக்கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொ டர்ந்து, பாஜ.வுடன் ஜனதா கட்சி இணைக்கப்படுவதாக ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்தார். தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டார். இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, பாரதிய ஜனதா கட்சியும், ஜனதா கட்சியும் இணைய வேண்டும்…
Read More சுப்பிரமணியன் சுவாமியின் ஜனதா கட்சி பாஜகவில் இணைந்ததுஒடிசா-மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் மண் சரிவு: 40பேர் பலி?.
Odessa Makanati soil decline in coal mining company ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது குல்டா வசுந்தரா என்ற கனிம சுரங்கம். இது மகாநதி சுரங்க பணிகள் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, சுரங்கத்தின் நுழைவு வாயிலின் அருகே, நிலக்கரி கொட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி, திடீரென சரிந்து விழுந்தது. இதில் 10 பேர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பலியாயினர். மேலும் 30 பேர் வரை மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் சார்பில், 3 லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில், 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என,…
Read More ஒடிசா-மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் மண் சரிவு: 40பேர் பலி?.ஆந்திராவை பிரிப்பதில் மாற்றம் இல்லை சோனியா உறுதி
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8-வது நாளாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் இந்நிலையில் . கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் நடந்துவரும் இப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் வரும் 12ம் திகதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆந்திரா பகுதி காங்கிரஸ் மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளனர். அப்போது சோனியா காந்தி கூறுகையில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே அந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரசார் தெலுங்கானா அமைய முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாட்டில் உள்ள எந்த பகுதி மக்களுக்கும் அநீதி ஏற்படுத்த வேண்டும் என் பதற்காக நாங்கள் இங்கு இருக்கவில்லை. யாரும் கவலைப்பட வேண்டாம், எல்லாருக்கும் நீதி…
Read More ஆந்திராவை பிரிப்பதில் மாற்றம் இல்லை சோனியா உறுதி