65 தமிழக மீனவர்கள் இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்

65 indian fishermen arrested by srilankan Navy

நாகை, காரைக்கால் மாவட்டங்களிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் 65 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கைக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கோசல வர்ணகுல சூர்யா புதன்கிழமை காலை தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நாகை, காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார் மேற்கொண்ட விசாரணையில், நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த செ. இளமுருகனுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற சிலம்பரசன், விஜயபாலன், வீரைய்யன், கதிரவன், சக்திவேல், சிவராஜ் ஆகிய 6 பேர், அக்கரைப்பேட்டை கு. மதி என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற கு. மதி, கு. இளங்கோவன், இ. மதன், என். சிங்காரவேலு, வ. ஆறுமுகம், சி. இறைவன், முத்துசாமி, முருகன் உள்பட 9 பேர், கீச்சாங்குப்பம் ந. சின்னையனுக்குச் சொந்தமான படகில் சென்ற ந. சின்னையன், கஜேந்திரன், விஜயபாலன், ராஜா, ஆ. கதிர்வேல் ஆகிய 5 பேர் என மொத்தம் 20 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களைதவிர, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 16 மீனவர்கள் முல்லைத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் மீனவர்கள் 29 பேர் கைது: காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு ஆகிய இரு கிராமங்களில் இருந்து வீரகுமார், வீராசாமி, வைத்தியநாதன், வேல்முருகன் ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகில் 29 பேர், காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 28-ம் தேதி இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து புதன்கிழமை கைது செய்துள்ளனர். இந்த தகவல் இரவு 7.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக காரைக்கால் மீன்வளத் துறைக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து மீன்வளத் துறை துணை இயக்குநர் இளையபெருமாள் கூறியது: காரைக்கால் மேடு வீரகுமார் என்பவரது படகில் வீரகுமார், மோகன், கதிரவன், குட்டிவீரன், முரளி, கந்தசாமி, செல்வமணி, கலைமணி ஆகிய 8 பேரும், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த வீராசாமி படகில், மதிவாணன், கனகசபை, ராமதாஸ், ராஜா, செல்வநாதன், மதுரைவீரன் ஆகிய 6 பேரும், அதே கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் படகில் மூர்த்தி, கலைமணி, சந்திரன், ராமையன், எஸ்,சந்திரன், கோவிந்தராசு, மூர்த்தி, செல்வம் ஆகிய 8 பேரும், வேல்முருகன் என்பவரது படகில் சண்முகம், வேலாயுதம், கவீந்திரன், குணபாலன், அன்பழகன், பொன்னையன், கணேஷ் ஆகிய 7 பேரும் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். வீரகுமார், வீராசாமி படகில் சென்றவர்கள் பருத்தித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றுள்ளனர். வைத்தியநாதன், வேல்முருகன் படகில் சென்றவர்கள் முல்லைத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு, திரிகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வந்துள்ளது என்றார்.

65 indian fishermen arrested by srilankan Navy

Sixty-five Indian fishermen in nine trawlers have been detained by the Sri Lankan navy for allegedly violating the international maritime border. Naval spokesman commander Kosala Warnakulasuriya has said that 34 of them in five trawlers were arrested off the coast north of Point Pedro in the north, on Tuesday. While another 31 were arrested east of Mullaithivu along with four vessels. “The arrest came last night and the fishermen have been handed over to the authorities in Point Pedro in the north and the eastern port district of Trincomalee” he said. “They will be charged of violating the international maritime border limits,” said the naval officer. Commenting on the frequent incidents of trespassing by Indian fishermen, President Mahinda Rajapaksa said that it could be part of an “organized operation”.
Whereas, his brother Basil Rajapaksa who is the minister of economic development in Sri Lanka has invited a group of Indian fishermen to visit Sri Lanka to discuss the issue. The government sources said that a fishermen group from Rameswaram would be due early August.

Related posts