நான் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி: நடிகை கனகா பேட்டி

Actress Kanaka Is Alive

தான் புற்று நோயால் காலமானதாக வெளிவந்த செய்திகள் வதந்தி என நடிகை கனகா பேட்டி அளித்துள்ளார். முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான கனகா, இவர் நடித்த கரகாட்டக் காரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இதையடுத்து ரஜினி, பிரபு, கார்த்திக், மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்த அவர், தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகிகளில் ஒருவராக மாறியிருந்தார். திருமணம் செய்து கொள்ளாது இருந்த அவர் 200ம் ஆண்டில் தனது தனது தாய் இறந்த பின்பு யாரும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளாவின் ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

சமீபத்தில் மலையாள திரையுலகத்தின் பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள புற்றுநோய்க்கு சிகிசை அளிக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது தான் அங்கு நடிகை கனகா சிகிச்சை பெற்று வந்ததை அவதானித்ததாகவும் யாரும் கவனிக்காத நிலையில் அவர் தனிமையில் வாடியதாகவும் தகவல் வெளிவந்ததை அடுத்து இச்செய்தி ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில்  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்த  நடிகை கனகா  ‘எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னை கேட்காமலேயே என் உடல்நிலை சரியில்லை என யாரோ வதந்தி பரப்பியுள்ளனர். நான் ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்ததாக வெளிவந்த தகவலும் தவறு. யாரோ சிலர் என்னைப் பற்றி வேண்டுமென்றே வதந்தி பரப்பிவிட்டிருக்கிறார்கள். என்னை தொடர்பு கொண்டு யாரும் விளக்கம் கேட்க முயற்சிக்காதது வருத்தமளிக்கிறது’ என்றார்.

Actress Kanaka Is Alive

There were reports in media that actress Kanaka passed away in Kerala, today, (July 30). It was reported that she was suffering from cancer from past seven months and she was under palliative care in Alappuzha, Kerala. Now, it has been confirmed by our source that she is alive. It was reported that the hospital sources said that Kanaka was not showing any interest and denied meeting anyone. Kanaka was diagnosed with cancer in early January this year. However, the latest news about her health status has brought a huge relief to her fans. Kanaka is the daughter of Tamil yesteryear actor Devika, and she started her acting career at the age of sixteen. Actress made her debut from Karakattakaran in 1989. She has acted in more than 40 films in Tamil and Malayalam as female lead. She was last seen in Tamil in Simha Rashi (1999). The actress has acted with top stars like Rajinikanth, Mammootty, Mohanlal, Vijaykanth, Prabhu and Sarath Kumar. Kanaka had left cinema arena after the death of her mother Devika, who was also an actress.  Actress Kanaka Appears Before Media: Kanaka’s false death news shocked entire South film industries. In order to clarify the speculations, she came before the media in Chennai. After clarifying the death news, the actress said that her health is fine and she is doing well.

Related posts