கர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது

நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சிகிச்சை போன்றவற்றிற்கான செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கூடிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளோம். இத்திட்டத்தின்படி பிரசவத்துக்கு முன் 7 முதல் 9 மாதங்கள் வரை அவர்களின் சிகிச்சை, நோய் அறிகுறிகளை அறிதல், மற்றும் போக்குவரத்து உணவு ஆகியவற்றுக்கான செலவுகளையும் மேலும் குழந்தை பிறந்த ஒராண்டு வரை நோய் ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்திரா காந்தி மாத்ருத்வ சஹயோக் யோஜனா திட்டத்தின்படி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின்போது மட்டுமே பயன்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அத்திட்டத்தை மேலும் தரம் உயர்த்த உள்ளோம்.…

Read More

கேதர்நாத்தில் 200க்கு மேற்பட்ட கிராமங்கள் அழிந்தன 5000 பேர் சாவு

200 villages destroyed in uttarakhand flood ஜூன். 23 -2013 : புது டெல்லி:  உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழைக்கு ருத்ரபிரயாகை, சமோலி ஆகிய 2 மாவட்டங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக கேதர்நாத், ருத்ரபிரயாகை வழித்தடம் சின்னாபின்னமாகி விட்டது. அந்த சாலையை செப்பனிடவே 2 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். கேதர்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளம் போல் பல இடங்களில் தண்ணீர் கிளம்பியதில் சுமார் 200 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. அந்த கிராமங்களில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கேதர்நாத், ருத்ரபிரயாகை சாலையில் சுமார் 50 ஆயிரம் பேர் இன்னமும் தவித்தபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேரழிவு ஏற்பட்டதும் மீட்பு குழுக்களை அனுப்பி…

Read More

வட இந்தியாவில் பேய் மழை.132 பேர் பலி?.

Flood in UTTARAKHAND North india: வட இந்தியாவின் உத்திரகாந்த் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெல்ல பெருக்கு ஏற்பட்டு, நூற்றுகணகானோர் பலியாகியுள்ளனர். மேலும் இமாலய மலையடிவாரபகுதிகளில் நிலச்சரிவினாலும் பலர் பலியாகியும், மீட்புபணிகள் பாதிக்கப்பட்டும் இருக்கிறது. மேலும் லட்சக்கணக்காண மக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும், இழந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகளுக்கு உதவியாக  இராணுவ வீரர்கள் பலர்  ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 75,000 பயணிகள் சிக்கிக்கொண்டு மீட்பு குழுவினர் வருகைக்காக காத்து கொண்டிருக்கிறார்கள் என நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.  Flood in UTTARAKHAND North india:  The holy town of Kedarnath, standing at a height of 11,760 feet and surrounded by majestic snow-capped peaks, was a picture of devastation…

Read More

மோடியின் அடுத்த கட்ட வியுகம்: பா.ஜ.க. வின் தொகுதிகள் முதல் குறி

பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை நியமனம் செய்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியிலும், இந்திய அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் மோடி அடுத்த வியுகம் வகுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. முதல் கூட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை பட்டியலிட்டு வைத்திருக்கும் அவர், மஹாராஜ் கஞ்ச், டியோரியா, கோராக்பூர், குஷி நகர், வாரணாசி, பால்லியா, துமாரிகஞ்ச், பஹ்ரியாச், சுல்தான்பூர், லகிம்பூர், தவுர்ஹரா, லக்னோ உன்னாவ், கான்பூர், காசியாபாத், மீரட், ஆக்ரா உள்ளிட்ட 42 தொகுதிகளை சூறாவளி பிரசாரம் செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளார். 1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 57 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. 2004 மற்றும் 2009…

Read More

கேபினட் அமைச்சர்கள் சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ராஜினாமா

மத்திய  கேபினட் அமைச்சர்கள் ஜோஷி, அஜய் மக்கான் ஆகிய இருவரும் சனிக்கிழமை (15/06/2013) இரவு தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். இவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் மத்திய அமைச்சரவை  திங்கட் கிழமை மாலையில் மாற்றியமைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மாளிகை அதிகாரி தெரிவித்தார். கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று சி.பி. ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தரைவழி போக்குவரத்து மற்றும் ரயில்வே ஆகிய இரண்டு இலாக்காக்களை தன்வசம் வைத்திருந்தார். அஜய் மக்கான் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராக இருந்தார். கட்சிக்காக பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சரவை  நாளை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 வது முறையாக மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இந்த முறை பிரதமர் மன்மோகன்சிங் இந்த வாய்ப்பை…

Read More

குற்றச் செயல்களில் ஈடு படும் சிறுவர்கள் தில்லியில் அதிகரிப்பு!!

இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறுவர்களே அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டில் கொலை வழக்கில் 100 சிறுவர்களும், பலாத்கார வழக்கில் 60 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2011ம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும், ஆனால், பீகார், மகாராஷ்டிர மாநிலங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, 74 சிறுவர்கள் கொலை முயற்சி வழக்கிலும், 18 பேர் ஆட்கடத்தல் வழக்கிலும், 10 பேர் பலாத்கார முயற்சி வழக்கிலும், 13 பேர் கொள்ளையடித்த வழக்கிலும் கைதாகியுள்ளனர். பல்வேறு குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில், ஆந்திரம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவை முன்னணியில்…

Read More

பா.ஜ.க கூட்டணி பற்றி முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது": நித்ஷ்குமார்

பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு வலுத்து வருகிறது, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் . அத்தோடு பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகவும் முடிவு செய்துள்ளது. அவ்வாறு விலகினால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கும் அளிக்கும் ஆதரவை பா.ஜனதா விலக்கிக் கொள்ளும். இருந்தும் கூட்டணியை இழக்க மனமில்லாத பா.ஜனதா, நிதிஷ் குமாரை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரை அத்வானி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மோடி பிரச்சாரக்குழு தலைவராக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார், பிரதமர் வேட்பாளராக அவரை நியமிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் நிதிஷ்குமார் சமாதானம் அடையவில்லை. இருந்தாலும் எந்த…

Read More

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்

மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்

latest news bharatiya janata party L.K.Adwani quit all post in bjp பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கட்சியில் தனது அனைத்து பதிவிகளையும் ராஜினாமா செய்தார் இதனால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூட்டணி கட்ச்சிகளும்  பாஜக வில்  இருந்து விலகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது இதனால் பாஜக உடையும் நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாவின் லோக்சபா தேர்தலுக்கான தேசிய பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அத்வானி இம்முடிவை எடுத்து உள்ளார் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி தமது கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது பாரதிய ஜனதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கட்சி அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கிறது மற்றும் மூத்த தலைவர்களை வைத்து அத்வானியை சமாதானப் படுத்தும் பேச்சு…

Read More

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் கொடுமை படுத்தப்பட்டுள்ளனர்

சவுதி அரேபியாவில் 200 இந்தியர்கள் வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமை படுத்தப்பட்டுள்ளனர் பிளாஸ்டிக் கம்பனியில் வேலை என்று கூறி சுமார் 200 இந்தியர்களை மும்பையை சேர்ந்த பஹாத் என்டேர்பிரைசஸ் அரேபியாவிற்கு அழைத்து சென்று உள்ளது , டெல்லி ,ஆந்திரா,பீகார் ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசம், இங்குள்ள இந்தியர்களை ரூ .90,000 முதல் 1,50,000 வரை சம்பளம் என்றும் கூரி அழைத்து சென்றுள்ளனர் ஆனால் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை தரப்படாமல் கழிவறை கழுவும் வேலை தரப்பட்டுள்ளது, மேலும் இரண்டு மாதங்களாக எந்த சம்பளமும் தரப்படாமல் கொடுமை படுத்தப் பட்டுள்ளனர், இதையடுத்து அவர்கள் இந்திய துதரகத்தில் புகார் கொடுத்தனர். புகாரை கொடுத்ததால் அவர்களை வேலைக்கு எடுத்த ஏஜென்ட் ரவுடிகளை வைத்து அடித்துள்ளனர் மேலும் வேலைக்கு வராவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க வெண்டீருக்கும் என்று மிரட்டியும் உள்ளனர்  பயத்தில் உள்ள…

Read More

நான்கு வகையான அம்புலேன்ஸ்: மத்திய அரசு திட்டம்

அரசியல் மாற்றங்களும் அறிவியல் முன்னேற்றங்களும் நிகழும் இந்த நிலையிலும் இன்றும் இந்தியாவில் அவசரத்திற்கு உதவ செல்லம்  அம்புலென்ஸ்கு வழி இல்லை குறுகிய சாலைகள்   ஆம்புலென்ஸ் செல்ல முடியாத குறுகிய வழிகள் அம்புலேன்சுடன் போட்டி போட்டு  செல்லும் வாகனங்கள் என பல பிரச்சனைகள் மத்தியில் முதலுதவி பெற முடியாமல் பலரும் தவிக்கின்றனர் ஒரு சிலர் இறக்கின்றனர், அத்துடன் பெரும்பாலான நகரங்களில் சாலை வசதியே மிக குறுகலாக உள்ளது. இதனைப் குறைக்கும் வகையில், மத்திய அரசு விரைவில் நான்கு விதமான ஆம்புலன்ஸ் வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும் வரையில் தேவையான முதலுதவி சாதனங்களுடனும், திறமையான ஊழியர்களுடனும் இந்த வாகனங்கள் செயல்படுத்தப்படும். இவற்றில் முதல் பணியாளர் என்ற பெயரில் இரு சக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் போன்ற நாடுகளில் இதுபோன்ற வாகன சேவைகள் மக்களுக்கு கிடைக்கின்றன. இரு சக்கர வாகனங்களில்…

Read More