புனேயில் நிலச்சரிவில் 75 பேர் பலி 100க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது

Pune landslide toll climbs to 75, 100 more people feared buried

Pune landslide toll climbs to 75, 100 more people feared buried
Pune landslide toll climbs to 75, 100 more people feared buried

புனேவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுள் 75 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன மேலும் 100 க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. புனேவில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலின் கிராமத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 44 வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தில் 200 பேர் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. இந்நிலைரயில் 75 பேரின் உடல்கள் மீம்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் புனே மாவட்டம் மாலின் கிராம மலைப்பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது மலையின் ஒரு பகுதி சரிந்து அடிவாரத்தில் உள்ள வீடுகள் மீது விழுந்தது. மணலுடன் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. வேரோடு மரங்களும் சாய்ந்து விழுந்ததால் பல வீடுகள் புதையுண்டன. இந்த துயர சம்பவத்தால் ஏராளமானோர் தங்களது வீட்டுக்குள்ளேயே பலியாகினர். மேலும் பலர் அலறியடித்து கொண்டு வெளியேறினார்கள். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 300 பேர் வரவழைக்கப்பட்டனர். மேலும் துணை ராணுவத்தினரும் மீட்பு பணிக்காக விரைந்தார்கள். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 75 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளது. முன்பு மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Pune landslide toll climbs to 75, 100 more people feared buried

With the recovery of five more bodies, the toll in the landslide catastrophe at Malin village rose to 75 on Saturday while 100 more persons were believed to be buried in the debris. The dead included 37 women and 10 children, the District Control Room said today. Mass cremations of the victims are being carried out at the village after identification of bodies by relatives. The rescue operations, which have been hampered by rain and inclement weather, entered the fourth day on Saturday after the July 30 disaster that buried 44 houses, as hopes of finding survivors faded with every passing hour. About 100 more persons still could be under the massive debris, district authorities said. “The extrication work is progressing at a slow pace because of restricted movements of JCBs and other heavy equipment due to huge mound of mud and water,” said a rescue official. Meanwhile, Maharashtra relief and rehabilitation minister Patangrao Kadam said the recovery of bodies could take two more days in view of the inclement conditions. He said the NDRF jawans were working ceaselessly even through night using power generators and search lights. The state government has announced an assistance of Rs five lakh to each of the victims’ families with an assurance of their total rehabilitation.

Related posts