உ.பி.யில் 1000 டன் தங்க புதையல்! தொல்லியல் துறை ஆய்வு செய்யமுடிவு!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருக்கிறது என தகவல் வெளியானதால்  தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்ரப்பிரதேசத்தில் உன்னாவோ மாவட்டம் கேடா எனும் கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற அரசர் வாழ்ந்த கோட்டை ஒன்று உள்ளது. அந்த மன்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து உயிர் துறந்தார். தற்சமயம் அந்த அரசரின் கோட்டை சிதிலமடைந்து இருக்கிறது. எனினும் மன்னரை அந்த பகுதி மக்கள் இன்னும் மறவாமல் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்குள்ள துறவி ஒருவர் தனது கனவில் அரசர் தோன்றி அந்த கோட்டையில் 1000 டன் தங்கப் புதையுண்டு உள்ளதாக கூறினார் என கூறினார். எனினும் இதை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. இருந்தாலும் மத்திய இணை அமைச்சர்…

Read More உ.பி.யில் 1000 டன் தங்க புதையல்! தொல்லியல் துறை ஆய்வு செய்யமுடிவு!

தூத்துக்குடி அருகில் சுற்றி வளைக்கப்பட்ட தனியார் போர்க்கப்பல்!

American private war ship found near Indian sea area near Tuticorin port, Tamilnadu. The investigation is going on regarding the illegal entry of the American vessel தூத்துக்குடி: தூத்துக்குடி அருகில் தனியார் போர்க் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது என பரபரப்பான செய்திகள் வெளியாகிஇருக்கிறது. தூத்துக்குடி அருகே கடலில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றார்கள். அப்பொழுது ஒரு மர்ம கப்பல் நடுக்கடலில் நிலை கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே அந்த  தனியார் போர் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது.  தனியார் போர் கப்பல் என்பதால் பல்வேறு துறையில் உள்ள அரசு அதிகாரிகளும் தூத்துக்குடி நகரில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அங்கே இருந்து இந்திய கடற்பரப்புக்குள்…

Read More தூத்துக்குடி அருகில் சுற்றி வளைக்கப்பட்ட தனியார் போர்க்கப்பல்!

கிரிக்கேட் வரலாற்று சாதனையாளர் சச்சின் ஓய்வு பெறுகிறார்

Sachin Tendulkar retires from Test cricket after living Cricket dream இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாகவும், கடைசி போட்டிகள் இந்திய மண்ணில் இருக்க வேண்டும் என்று எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 1989-ம் ஆண்டு தனது 16-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் சச்சின். இதேபோல் அவரது முதல் ஒருநாள் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக டிசம்பர் 18-ம் தேதி தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தார்.  உலக வேகப்பந்து மற்றும் சுழர்ப் பந்து  வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக…

Read More கிரிக்கேட் வரலாற்று சாதனையாளர் சச்சின் ஓய்வு பெறுகிறார்

தலைநகர் எ.டி.எம் மையங்களில் காமலீலை

டெல்லி வாழ் காதல் ஜோடிகள் தற்போது ஏ.டி.எம் மையங்களை காதல் வளர்க்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் டெல்லி மெட்ரோ ரயிலில் ஜோடிகள் மிகவும் நெருக்கமாக இருந்த காணொளி இணையதளத்தில் வெளியானது. சிசிடிவி காணொளியை கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதனைத் தொடந்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஜோடிகளை அறைகள், கழிவறைகளில் நேரம் செலவிட அனுமதிப்பதை பிரபல தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தியது. தற்போது அந்தவகையில் சில ஜோடிகள் காதல் வளர்க்கும் களமாக ஏ.டி.எம். மையங்களை மையம் கொண்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ஏ.டி.எம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகளை காவல் துறையினரே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். யாரும் நம்மைப் பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்ற நோக்கத்தில் எல்லை மீறும்…

Read More தலைநகர் எ.டி.எம் மையங்களில் காமலீலை

இந்தியாவில் கழிவறை கட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

bill gates foundation going to build toilet in india இந்திய அரசுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் மூலம் இந்தியாவில் கழிவறைகளை கட்டித் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்தியாவில் கழிவறைகள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது. உலகில் 1 பில்லியன் பேர் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். அதில் இந்தியாவில் மட்டும் 638 மில்லியன் பேர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துகிறார்கள். மேலும் கழிவறைகள் இல்லாமல் இருக்கும் உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர். ஏழை மக்கள் கழிவறையை கட்ட செலவாகும் பணத்தை உணவு வாங்க வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். எனவே இந்திய அரசுடன் சேர்ந்து பில் கேட்ஸ் கழிவறை கட்டி தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். bill…

Read More இந்தியாவில் கழிவறை கட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்

Indian Petroleum minister Veerappa Moily travled in Metro rail to his office எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய விலை உயர்வை கட்டுபடுத்த ‘எரிபொருள் சிக்கனம்’ மிக அவசியம் எனும் கருத்தை பல சமயங்களில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார் அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த மாதம் ‘எரி பொருள் சிக்கனம்’ சம்பந்தமாக உரையாற்றும் போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மெட்ரோ இரயில் மற்றும் இதர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பின் படி இன்று காலை அவர் அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டிற்கு அருகில் உள்ள மெட்ரோ இரயில்…

Read More எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்

ஆந்திராவில் தொடர்ச்சியான போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Telangana turmoil – Is President Rule the only option left? கடலோர ஆந்திராபிரதேசம் மற்றும் இராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் தெலுங்கானாவுக்கு எதிராக உச்சகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. 2 மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதனால் ஆந்திரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிய அவசியத்திற்கு மத்திய அரசு தள்ளபட்டிருக்கிறது. மத்திய அரசின் தெலுங்கானாஅறிவிப்பால் சுமார் 2 மாத காலமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.  ஆகையால் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துடன் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஹைதராபாத்திலும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியிலும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில்  போக்குவரத்து, மின்சாரம்,கல்வித்துறை ஊழியர்கள் என எல்லாத்தரப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள்…

Read More ஆந்திராவில் தொடர்ச்சியான போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வடமேற்கு டெல்லி சிறுவர் காப்பகத்திலிருந்து 33 பேர் தப்பியோட்டம்

33 inmates escape from Delhi juvenile home, 14 held  வடமேற்கு டெல்லி சிறார்கள் காப்பகத்தில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து 33 இளம் குற்றவாளிகள் தப்பி ஓடிய  சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படங்களில் வரும் சிறை உடைப்பு காட்சிகள் போன்றே சிறையை உடைத்துவிட்டு இளம் குற்றவாளிகளான இந்த சிறுவர்கள் செய்து தப்பியோடியிருக்கின்றனர். அந்த காப்பகத்தில் பணம் வைத்திருக்கும் பெட்டகத்தை உடைத்து விட்டு  அதில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, சுமார் 50 சிறுவர்கள் அங்கிருந்த காவலாளியை அடித்து, உதைத்து காயப்படுத்தினார்கள். அங்கிருத்த கண்ணாடி ஜன்னல்களை கற்களால் அடித்து உடைத்து சூறையாடிய இளம் குற்றவாளிகள், மதில் சுவர் மேல் பகுதியில் உள்ள முள் வேலியின் மேல் மெத்தைகள் விரித்து காப்பகத்தின் நிர்வாக அலுவலக பகுதிக்கு சென்றுள்ளர்கள். பிறகு சமையல் அறையில் இருந்த…

Read More வடமேற்கு டெல்லி சிறுவர் காப்பகத்திலிருந்து 33 பேர் தப்பியோட்டம்

ஒரே நாளில் பீகார் தலைநகர் பாட்னாவில் மின்னல் தாக்கி 25 பேர் பலி

Lightning claims more than 25 lives in Bihar in a single day  பீகாரின் பல மாவட்டங்களில் இந்த வருட பருவமழை கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று பெய்த மழை இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழையாக இருந்ததால், மக்கள் பெரும் பாதிப்புக்கும் பீதிக்கும் உள்ளாயினர். இதில், அவுரங்பாத் மாவட்டத்தில் ஏற்பட்ட மின்னலில் 4 குழந்தைகளும், 2 விவசாயிகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இது போன்று பங்கா மாவட்டத்திலும் வயல் பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த 5 விவசாயிகளின் உயிரை மின்னல் பறித்தது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்னல் பாய்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மின்னல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில்…

Read More ஒரே நாளில் பீகார் தலைநகர் பாட்னாவில் மின்னல் தாக்கி 25 பேர் பலி

சோனியாவே தெலுங்கனா பிரச்சனை முற்றுவதற்கு காரணம்: ஜெகன்மோகன்

Jaganmohan Reddy blames Sonia Gandhi for Telangana crisis ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு மாநிலமாக ஆக்கும் மத்திய அரசினது முடிவை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த தன்னிச்சையான ஒருதலைப்பட்ச செயல்பாட்டை எதிர்ப்பது மட்டும் இல்லாமல் தெலங்கானா பிரச்சனை மேலும் விரிவடைய சோனியா காந்தியே காரணம். அவர் மக்களுடைய  உணர்வுகளை திட்டம் போட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என  குற்றம் சாட்டினார். மேலும் இந்த ஒரு மாநிலத்தை இரண்டாக பிரித்து மற்றொரு மாநிலத்தை உருவாக்கி அதன் மூலம் வரும் கால சந்ததியினருக்கு ஒரு மிகபெரும்  மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறார். சோனியாகாந்தியின் தன்னிச்சையான சுயநல முடிவால் ஆந்திராவின் இரு தரப்பு மக்களும் பாதிக்கப்படுவது உறுதி. இதைப்பற்றி முற்றிலும் கவலையில்லாமல் தனது மகன் ராகுல்காந்தியை பிரதமராக…

Read More சோனியாவே தெலுங்கனா பிரச்சனை முற்றுவதற்கு காரணம்: ஜெகன்மோகன்