வரும் 7ம் தேதி முதல் ரயில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

Indian Railways to increase passenger fare, freight tariff by 2 per cent   பயணிகளின் இரயில் பயண கட்டணத்தை 2% முதல் 3% வரை வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலைக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் மற்றும் சரக்கு இரயில் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உயர்த்தப்பட்ட சரக்கு ரயில் கட்டணம், மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 15 % உயர்த்தப்பட்டது. நேற்று பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த மத்திய இரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பயணிகள் இரயில் கட்டணத்தை கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில், பயணிகளின் இரயில்…

Read More