Indian Railways to increase passenger fare, freight tariff by 2 per cent பயணிகளின் இரயில் பயண கட்டணத்தை 2% முதல் 3% வரை வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் உயர்த்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய ரயில்வே பட்ஜெட்டில், டீசல் விலைக்கு ஏற்ப 6 மாதத்திற்கு ஒரு முறை பயணிகள் மற்றும் சரக்கு இரயில் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி உயர்த்தப்பட்ட சரக்கு ரயில் கட்டணம், மீண்டும் கடந்த 1ம் தேதி முதல் 15 % உயர்த்தப்பட்டது. நேற்று பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்த மத்திய இரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, பயணிகள் இரயில் கட்டணத்தை கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்நிலையில், பயணிகளின் இரயில்…
Read More வரும் 7ம் தேதி முதல் ரயில் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புCategory: இந்தியா – சிறகுகள்
உத்தரபிரதேசத்தில் தேர்வில் தோல்வியுற்ற சி.ஏ மாணவர் தற்கொலை
CA student commits suicide in Uttar Pradesh at Ghaziabad railway station உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இளைஞர் தனது பெற்றோர்கள் கண் முன்னே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளைஞர் ராகுல் (வயது 21) சி.ஏ தேர்வில் கடுமையாக முயன்று படித்தும் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் தனது பெற்றோர்கள் திட்டியதை தாங்கிக்கொள்ள முடியாததால் இந்த விபரீத தற்கொலை முடிவை எடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ராகுல் (வயது 21). சி.ஏ படிப்பு படித்துக் கொண்டிருந்த இவர் நடந்து முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக அவரை அவரது பெற்றோர்கள் திட்டியுள்ள்ளர்கள். இதனால் மனமுடைந்து ஆத்திரப்பட்ட அவர் வீட்டைவிட்டே வெளியேறினார். இதை தொடர்ந்து மாணவர் ராகுலின் தந்தை…
Read More உத்தரபிரதேசத்தில் தேர்வில் தோல்வியுற்ற சி.ஏ மாணவர் தற்கொலைஇங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில் ரசாயன ஆயதங்கள் சர்ச்சை
Churchill wanted to use chemical weapons against Indian tribes இரசாயன ஆயுதங்களை கொண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதி பழங்குடியின மக்களை கொல்ல இங்கிலாந்தின் முன்னால் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் திட்டமிட்டிருந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரபல வரலாற்று புத்தக ஆசிரியர் கைல்ஸ் மில்டன். இவர் ஸ்காட்லாந்தின் விக்டவுனின் நடந்து கொண்டிருக்கும் விக்டவுன் புத்தக விழாவினில் கலந்து கொண்டு தமது புதிய புத்தகமான ரஷ்யன் ரூலெட் பற்றி விளம்பரம் செய்திருந்தார். அங்கு அவர் உரையாடுகையில், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவதில் அதிகம் விருப்பம் கொண்டு இருந்தார்.20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவினுடைய வடகிழக்கு பகுதியினில் தொல்லை தந்த பழங்குடியின மக்களை இரசாயன ஆயுதங்களை கொண்டு கொன்று குவிக்க சர்ச்சில் விருப்பம் கொண்டிருந்தார். இது குறித்த கட்டளை குறிப்பு (மெமோ) ஒன்றை அவர் இந்திய…
Read More இங்கிலாந்து முன்னாள் பிரதமர் சர்ச்சில் ரசாயன ஆயதங்கள் சர்ச்சைஅக்டோபர் 5 முதல் பெட்ரோல் நிலையங்களில் சமையல் கேஸ்
You can buy mini gas cylinders at petrol pumps from 5th October நாட்டின் பெரு நகரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள், “நிறுவனத்துக்குச் சொந்தமான – நிறுவனத்தால் நடத்தப்படும்’ (சி.ஓ.சி.ஓ.) பெட்ரோல் நிலையங்களில் கிடைக்கும். இது நாட்டில் மொத்தமுள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களில் 3 சதவிகிதம் மட்டுமே. இது சந்தை விலைக்கு விற்கப்படும். தற்போது மானிய விலையாக 14.2 கிலோ எடை சிலிண்டர் ரூ.410-க்கு விநியோகிக்கப்படுகிறது. சந்தை விலையானது அதைவிட இரு மடங்குக்கு மேல் அதிகமாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனையை அக். 5 ஆம் தேதி பெங்களூரில்…
Read More அக்டோபர் 5 முதல் பெட்ரோல் நிலையங்களில் சமையல் கேஸ்தேனி அருகே 29 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மகாத்மா காந்தி கோவில்
where the mahatma is no less than god கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டிஎனும் கிராமத்தில், மகாத்மா காந்திக்கு கோயில் ஒன்றை கட்டி அதற்கு வழிபாடும் நடத்த படுகிறது.தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ள காமயகவுண்டன்பட்டி எனும் கிராமத்தில் பல பேர் சுதந்திர போராட்டம் செய்து வந்தார்கள்.ஆகையால், தேசபக்தியும், காந்தியின் மேல் கொண்ட அளவுகடந்த அணிபின் வெளிப்பாடாக காமயகவுண்டன்பட்டி கிராம மக்கள், அந்த தேசத்தந்தைக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்து வருகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த பரமசிவம், சக்திவடிவேல், பாண்டியராஜ், கிருஷ்ணசாமி, பழனிவேல், ஈசப்பர், சாமாண்டி, ராமசாமி, குந்திலிராமசாமி, கிருஷ்ணசாமி, வீராச்சாமி, சுருளியாண்டி, சுப்பிரமணி, சுப்புசாமி உள்பட 80 க்கும் மேற்பட்டோர் தீவிரமாக பங்கேற்றனர். இந்த கிராமத்திற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவாகவும், காந்திக்கு உருவசிலை வடிக்கவும், கோவில் கட்டவும்…
Read More தேனி அருகே 29 ஆண்டுகளுக்கு முன் கட்டிய மகாத்மா காந்தி கோவில்காதலன் மீது ஆசிட் வீசிய பெண் கைது
Girl throws acid on lover for refusing to marry her உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை மணக்க மறுத்த காதலன் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்னி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணும், தர்மேந்திரா என்னும் நபரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயிக்க முடிவுசெய்தனர். இந்த தகவலை தனது காதலன் தர்மேந்திராவிடம் தெரிவிக்க அப்பெண் சென்றுள்ளார். அப்போது, தனது காதலை மறுத்த தர்மேந்திரா, அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அந்த பெண் எவ்வளவு எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பெண் நேற்று தர்மேந்திரா மீது ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தினார். பலத்த காயமடைந்த தர்மேந்திரா மாவட்ட மருத்துவமனையில் இருந்து தற்போது லக்னோ மருத்துவ கல்லூரி…
Read More காதலன் மீது ஆசிட் வீசிய பெண் கைது8 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த நைஜீரிய நபர் டெல்லியில் கைது
nigerian caught with cocaine worth rs 40 crore at 5 star hotel in delhi டெல்லியில் நைஜீரிய நாட்டவர் ஒருவரிடம் இருந்து 8 கிலோ எடையுள்ள சுமார் ரூ40 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று நைஜீரிய நாட்டவர் ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அவர் டெல்லியில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். அவரது உடமைகள் வேறொரு விமானத்தில் வந்துள்ளன. பின்னர் விமான நிலையத்துக்கு வந்து உடைமைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை ஹோட்டலில் சேர்ப்பித்துவிடுமாறு விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளார். இதில் சந்தேகமடைந்த அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஞ்சிய உடைமைகளுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றனர். அங்கு நைஜீரிய நாட்டவரிடம் உடைமைகளை கொடுத்து சோதனை…
Read More 8 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்த நைஜீரிய நபர் டெல்லியில் கைதுபாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்கள் வாழ்க்கை சிக்கல்
Failed marriages with Pak nationals leave 226 Indian women in the lurch வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்யும் இந்திய பெண்கள் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானியரை திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.அவர்களில் 226 பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்துக்கள். விவாகரத்து மற்றும் கணவரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் அவர்கள் தங்களது பிறந்த மண்ணுக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள். எனவே, அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே உருவாகியுள்ள பிரச்சினையில் அவர்களை வைத்து பராமரிப்பதில் குடும்பத்தினரும், நண்பர்களும் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.அதனால் அவர்களுக்கு உதவ முடியாத நிலை உள்ளது. எனவே, நிரந்தர இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை நீண்ட…
Read More பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்கள் வாழ்க்கை சிக்கல்பஞ்சாபில் இளம்பெண்ணை கொலை செய்த குடும்பம்
Disturbing Pics of Cops Recovering Half-Burnt Corpse of Girl Killed by Parents for Having an Affair பஞ்சாபில் ஒரு இளம்பெண்ணை கௌரவ கொலை செய்த குடும்பத்தினர், அவரது சடலத்தை எரிக்க முயன்றப்போது, போலீசார் பாதி எரிந்த சடலத்தை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மௌர் குராத் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஹர்ஜிண்டர் கவுர், இவர் ஜக்சிர் சிங் என்னும் நபரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இவர்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியேற முயற்சித்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொடூரமாக கொலை செய்தனர். தனது காதலி குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், ஜக்சிர் சிங் போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து பெண்ணின் வீட்டில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அவர்கள் அப்பெண்ணை கொலை செய்ததும், அவரது சடலத்தை…
Read More பஞ்சாபில் இளம்பெண்ணை கொலை செய்த குடும்பம்போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது
no fuel for traffic violators. No helmet no petrol new rule in Gujarat அகமதாபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்றை கையாள போக்குவரத்து காவல்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் படி போக்குவரத்து காவல்துறையும், பெட்ரோல் பங்க் நிறுவனமும், இணைந்து போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என முடிவெடுத்து உள்ளார்கள். வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறை படுத்தபடவிருக்கும் இந்த விதிமுறைபடி, உரிமம் இல்லாத ஓட்டுனர்கள், இருக்கை பெல்ட்களோ, ஹெல்மெட்டோ அணியாதவர்கள் ஓட்டிவரும் வாகனங்கள், ஹெல்ப்லைன் எண்கள் எழுதப்படாத ஆட்டோக்கள், ஆடம்பரமான எண் பலகைகள் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கண்ணாடிகளில் அடர்த்தியான பிலிம் பேப்பர் ஒட்டப்பட்ட கார்கள் போன்றவற்றிற்கு எரிபொருள் அளிக்க வேண்டாமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்…
Read More போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது