20 killed in bus accident in Sirmaur in Himachal pradesh ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று (27 செப்டம்பர் 2013) காலை தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் சிர்மோர் மாவட்டம் ரேனுகாஜில் புறப்பட்டு உசாதிகார் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. தடாப்ரோக் எனும் பகுதியினில் சென்று கொண்டிருந்த போது சுமார் 550 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் 20 பயணிகள் பலியாகினர் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். 15 பயணிகள் விபத்து நடந்த இடத்திலும், 5 பேர் படுகாயமுற்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதும் பலியாகினர் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியான பயணிகள் எல்லோரும் உசாதிகார், அந்தாரி, மற்றும் ஹரிபூர் தார் பகுதிகளை சார்தவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு…
Read More ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் சாவுCategory: இந்தியா – சிறகுகள்
திருச்சி மாநாட்டில் மத்திய அரசை சரமாரியாக தாக்கி மோடி உரை
Narendra modi speech in trichy திருச்சி: மத்தியில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு தொடர்ந்தால், நம் இளைஞர்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் என திருச்சியில் 26.9.2013 வியாழன் நடந்த பா.ஜ.க. இளந்தாமரை மாநாட்டில் நரேந்திர மோடி பேசினார். திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாடு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேளராவில் இருந்து தனி விமானம் மூலம் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி திருச்சி வந்தனர். அவர்களை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். இந்த…
Read More திருச்சி மாநாட்டில் மத்திய அரசை சரமாரியாக தாக்கி மோடி உரைஇந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்
Senior Congress N D Tiwaris sexy dance with lady உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர் அமைதியாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி கதம் கதம் பாத்யா ஜா என்ற பாடலைப் பாடினார். பின்னர் நடனமும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணுடன் சேர்ந்து அவர் ஆடியதால் அங்கு கலகலப்பு கூடியது. அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் திவாரி. இருப்பினும் விழா…
Read More இந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்
alcoholic Government staff salary will be given to spouse in rajasthan குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களும் மதுவுக்கு அதிகளவில் அடிமையாகி கிடக்கின்றனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் இதற்கே செலவழித்து விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற அவலத்தை தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடி சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். அதன்படி குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியரின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் 1971ல் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளார். ஒரு ஊழியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருடைய சம்பளத்தில் பாதி மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இருப்பினும்…
Read More ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்நிலக்கரி வழக்கு அட்டர்னி ஜெனரலுக்கு மர்ம அழைப்பு
Attorney General got a Telephone call imitating Sonia Gandhi voice புதுடெல்லி: அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடம், சோனியா என்று அறிமுகம் செய்து கொண்டு தொலைபேசியில் உரையாடிய பெண் யார் என்பது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வதிக்கு இந்த செப்டெம்பர் மாதம் 5ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. தொலைபேசியில் பேசிய அந்த பெண் தான் சோனியா காந்தி என அறிமுகம் செய்து கொண்டு, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விபரங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த பெண்ணின் குரல் சோனியா காந்தியின் குரலைப்போன்றே இருந்தது. ‘‘இந்த வழக்கு நடக்கும் விதம் சரியல்ல, கொஞ்சம் மெதுவாக வாதாடலாம் ’’ என ஆலோசனை கூறியிருக்கிறார். இந்த இரண்டு அழைப்புகளும், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணைக்கு முன்தினம் வந்துள்ளது.…
Read More நிலக்கரி வழக்கு அட்டர்னி ஜெனரலுக்கு மர்ம அழைப்புமனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை
Techie kills wife, jumps to death from 13th floor பெங்களூர் அருகே உள்ள ஜே.பி. நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பல் வசித்து வந்தவர் மதுசூதன். சாப்ட்வேர் என்ஜினியரான இவரது மனைவியும் சாப்ட்வேட் என்ஜினியர்தான். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவும் வழக்கம்போல் இருவரும் கடுமையாக சண்டை போட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த மதுசூதன், கத்தியால் தன் மனைவியின் உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த மதுசூதன், தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் கயிறு அறுந்து கீழே விழுந்துள்ளார். பின்னர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றுள்ளார். தீப்பெட்டியை கண்டு பிடிக்க முடியாததால் அந்த முயற்சியையும் கைவிட்டார். பின்னர் தான்…
Read More மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலைபிரதமராக சோனியாவை ஏற்று கொள்ளவே முடியாது: சுஷ்மா சுவராஜ்
Sonia gandhi cannot be accepted as Indian prime minister : Sushma swaraj புதுடில்லி : இத்தாலி நாட்டில் பிறந்து வளர்த்தவர் சோனியா. அவரை பிரதமராக எப்போதும் ஏற்ற்று கொள்ளவே முடியாது என பா.ஜ., லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்த கொண்ட அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், சோனியா காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கட்டும், ஆனால் அதற்காக அவரை பிரதமராக கண்டிப்பாக ஏற்க முடியாது; இப்படி ஒரு வெளிநாட்டுகாரர் இந்திய பிரதமராக தேர்வு செய்தால் அது பாரம்பரியம் மிக்க இந்தியாவையும், இந்தியர்களை அவமான படுத்தும் செயலாகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நமது முன்னோர்கள் பலர் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். இப்படி, உயிர் தியாகம் செய்து வெள்ளையரிடம் இருந்து பெற்ற சுதந்திரம் 60 ஆண்டுகளுக்கு பின்,…
Read More பிரதமராக சோனியாவை ஏற்று கொள்ளவே முடியாது: சுஷ்மா சுவராஜ்அமெரிக்க நிர்பந்தம்!! பணிந்ததா மன்மோகன் சிங் அரசு??
Indian Prime minister Man mohan singh may carry nuclear liability dilution to U.S.Nuclear power companies அணு உலை விபத்து இழப்பீடு விஷயத்தில் அமெரிக்க நிர்பந்தத்தின் பேரில் மத்திய அரசு பணிந்து, நமது நாடாளுமன்றத்தில் இயற்றபெற்ற சட்டப்படி நடவாமல் அவமதித்தது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கும் எதிரான செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பிரதமர் மன்மோகன் சிங், இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார். அங்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் வரும் 27-ம் தேதி சந்தித்துப் பேசவிருக்கிறார். அந்த சந்திப்பின் போது இந்தியாவில் அணு மின் உற்பத்திக்காக அணு உலைகள் நிறுவும் விவகாரத்தில், நாட்டினுடைய நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் அமெரிக்க நிறுவங்களுக்கு ஆதரவாகவும் ஒபந்தம் ஒன்றில் கையெழுத்திடப்பட உத்தேசித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அணுஉலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக இந்தியாவில் அணு…
Read More அமெரிக்க நிர்பந்தம்!! பணிந்ததா மன்மோகன் சிங் அரசு??தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
Orissa HC judge elevated to Supreme Court உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்பார் எனத் தெரிகிறது. இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் இந்நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மறைந்த வி.என்.சொக்கலிங்கம் – வைரம் தம்பதியினரின் மகனாக 4.10.1951 நாகப்பன் பிறந்தார். கரூரில் பள்ளிப் படிப்பை முடித்த நாகப்பன், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.யு.சி.யும், மதுரை மதுரா கல்லூரியில் பி.எஸ்.சி.…
Read More தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.நாகப்பன் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்விமானத்தை செலுத்தும் உரிமையை பெற்று முதல் காஷ்மீரி பெண்
This Kashmir teen is all set to spread her wings காஷ்மீரை சேர்ந்த ஒரு இளம்பெண், மிக இளைய வயதில் விமானத்தை செலுத்தும் உரிமையை பெற்று சாதனை புரிந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆயிஷா அசிஸ்.இவரது வயது 17. சிறு வயது முதலே பெண்கள் அதிகம் சாதிக்காத துறையில் சாதிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் வளர்ந்த இப்பெண் தற்போது மிக இளைய வயதில் ஒரு விமானத்தை செலுத்த உரிமம் பெற்ற முதல் காஷ்மீரி பெண் ஆவார். கடந்த ஆண்டு நாசாவில் நடத்தப்பட்ட விண்வெளி பயிற்சி முகாமில் பங்கேற்க இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஆயிஷாவும் ஒருவர் ஆவார். நாசாவிற்கு சென்று ஆயிஷா, அவரது ரோல் மாடலான சுனிதா வில்லியம்ஸை சந்தித்து பேசியுள்ளார். இதனை பெருமிதத்துடன் தெரிவிக்கும் ஆயிஷா தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.…
Read More விமானத்தை செலுத்தும் உரிமையை பெற்று முதல் காஷ்மீரி பெண்