நிலக்கரி வழக்கு அட்டர்னி ஜெனரலுக்கு மர்ம அழைப்பு

Attorney General got a Telephone call imitating Sonia Gandhi voice

Attorney General got a Telephone call imitating Sonia Gandhi voice

புதுடெல்லி:  அட்டர்னி ஜெனரல் வாகன்வதியிடம், சோனியா என்று அறிமுகம் செய்து கொண்டு தொலைபேசியில் உரையாடிய பெண் யார் என்பது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வதிக்கு இந்த செப்டெம்பர் மாதம்  5ம் தேதி மற்றும் 11ம் தேதிகளில் இரண்டு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. தொலைபேசியில் பேசிய அந்த பெண் தான் சோனியா காந்தி என அறிமுகம் செய்து கொண்டு, நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விபரங்கள் குறித்து கேட்டுள்ளார். அந்த பெண்ணின் குரல் சோனியா காந்தியின் குரலைப்போன்றே இருந்தது. ‘‘இந்த வழக்கு நடக்கும் விதம் சரியல்ல, கொஞ்சம் மெதுவாக வாதாடலாம் ’’ என ஆலோசனை கூறியிருக்கிறார். இந்த இரண்டு அழைப்புகளும், நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு விசாரணைக்கு முன்தினம் வந்துள்ளது. அந்த நேரத்தில் சோனியா காந்தி சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். தொலைபேசி அழைப்பு குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், இந்த அழைப்பு குறித்து உள்துறை அமைச்சகத்திடம் வாகன்வதி  புகார் ஒன்றை அளித்தார். டெல்லி காவல்துறையினரும், சி.பி.ஐ அதிகாரிகளும் இந்து குறித்து ஆரம்ப கட்ட விசாரணையை இணைந்து தொடங்கி இருகிறார்கள். அட்டர்னி ஜெனரலிடம், சோனியா காந்தியின் குரலில் பேசிய அந்த மர்ம பெண், ஒரு அரசு ஊழியர் தான் என அறியபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிஇருக்கிறது. இவ்வழக்கை தமக்கு சாதகமாக மாற்ற வேறு யாராவது முயற்சி செய்கிறார்களா என்ற கோணத்திலும் இந்த தவிர விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

Attorney General got a Telephone call imitating Sonia Gandhi

Related posts