Bharat Ratna awardee Scientist CNR Rao calls politicians ‘idiots’ addressing a press conference a day after the award was announced பிரதமரின் அறிவியல் ஆலோசனைகுழுவினுடைய தலைவர பொறுப்பில் இருக்கும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கும் இந்தியாவின் உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில், பெங்களூரில் சி.என்.ஆர். ராவ் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, அறிவியல் ஆராய்ச்சியினுடைய தரம் ஏதும் குறைந்து இருக்கிறதா என்று ஓர் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பேசிய சி.என்.ஆர். ராவ், விஞ்ஞான ஆராய்ச்சிக்காக அரசு ஒதுக்கியுள்ள நிதியை ஒப்பிடும்போது அதைவிட வேகமாகமாகவும் அதிகமாகவும் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறோம். இந்த முட்டாள் அரசியல்வாதிகள், விஞ்ஞான…
Read More முட்டாள் அரசியல்வாதிகள் என பாரத ரத்னா விருது பெறும் சி.என்.ஆர். ராவ் பரபரப்பு பேட்டிCategory: இந்தியா – சிறகுகள்
இறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்பு
India finally included INS Vikramaditya, after 9-years delay இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா நேற்று சேர்க்கப்பட்டதன் மூலம் இந்திய கடற்படையின் பலம் அதிகரித்துள்ளது. ரஷ்ய கடற்படையில் பாகு என்ற பெயரில் 1987ல் சேர்க்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல் பின்னர் அட்மிரல் கார்ஸ்கோவ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1995ல் இந்த கப்பல், ரஷ்ய கடற்படையிலிருந்து ஓரம் கட்டப்பட்டது. நட்பு நாடு என்ற அடிப்படையிலும், நம் ராணுவத்துக்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதாலும் அந்த கப்பலை, இந்தியாவுக்கு இலவசமாக வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது. இதன்படி அந்த கப்பலை இந்தியாவுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும், அதற்கான செலவுகளை இந்தியா ஏற்பது எனவும் முடிவானது. ரஷ்யாவின், செவ்மாஷ் கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இதற்காக 9,300 கோடி ரூபாயை மத்திய அரசு…
Read More இறுதியாக ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா இந்திய கடற்படையில் சேர்ந்தது -வீடியோ இணைப்புசச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் ஆகியோருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற சனிக்கிழமை அன்று பிரதமர் அலுவலகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே பத்ம விபூஷண் விருதைப் பெற்றுள்ள சச்சினும் (40), சி.என்.ஆர். ராவும் (79) இப்போது பாரத ரத்னா விருது பெற்றுள்ள 41 தலைசிறந்த பிரபலங்களின் பட்டியலில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்த சச்சின் 24 ஆண்டுகளாக அந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். விளையாட்டு உலகின் உண்மையான இந்தியத் தூதராக அவர் விளங்குகிறார். அவரது சாதனைகள் ஈடுஇணையற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிரிக்கெட்…
Read More சச்சின் டெண்டுல்கர், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டி
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் புது தில்லி தொகுதியில் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. முதன்முதலாக தேர்தலில் குதித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை கடைசி நாளான சனிக்கிழமை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது அவர் அளித்த பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவிக்கும், தனக்கும் சேர்த்து ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், இதில் காஜியாபாத், இந்தர்புரியில் தனது பெயரில் ஒரு நிலமும், மனைவி பெயரில் குர்கானில் ஒரு குடியிருப்பும் அடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஷீலா தீட்சித், பவன் கேரா ஆகியோர் மூலம் தன் மீது…
Read More டெல்லி தேர்தலில் ஷீலா தீட்சித் எதிராக கேஜரிவால் போட்டிகொல்கத்தா வந்த இங்கிலாந்து பிரதமர் தெரு ஓர கடையில் வடை வாங்கி சாப்பிட்டார்.
British PM’s sudden rendezvous, savours famous Kolkata street food! மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவிற்கு விஜயம் செய்த இங்கிலாந்து பிரதமர் ஓர் தெரு ஓரக்கடையில் வடையை வாங்கி சாப்பிட்டது அங்கே இருந்த பொதுமக்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த வியாழக்கிழமை இங்கிலாந்து பிரதமர் திரு.டேவிட் கேமரூன் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவிற்கு போனார். அவரது அந்த பயணத்தின் நடுவே ஜோகாவில் இருக்கும் ஓர் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பெற அவர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து உரையாடினார். அதற்கு பின், தூதரக அதிகாரிகளுடன் மத்திய கொல்கத்தாவில் உள்ள தெருக்கடைக்கு சென்று வண்டியை விட்டு இறங்கி. ‘விக்டோரியா வடா ஷாப்’ என்னும் கடைக்கு சென்றார். கொல்கத்தாவின் தெருக்கடை உணவை சுவைக்க நினைத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவரே…
Read More கொல்கத்தா வந்த இங்கிலாந்து பிரதமர் தெரு ஓர கடையில் வடை வாங்கி சாப்பிட்டார்.திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம். தீவிர சிகச்சை பிரிவில் அனுமதி
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மயக்கம் போட்டு விழுந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது இல்லத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. abdul kalam admitted in hospital
Read More திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம். தீவிர சிகச்சை பிரிவில் அனுமதிவெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.
கிரிக்கெட் அரங்கில் இருந்து கண்ணீருடன் சச்சின் டென்டுல்கர் இன்று விடைபெற்றார் . இவரது 200வது மற்றும் கடைசி டெஸ்டில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஆட்டம் முடிந்ததும் கையை அசைத்தப்படி ரசிகர்களை பார்த்து கண்ணீர் மல்க நடந்து சென்றார். இவருடன் விராத் கோஹ்லியும் மைதானத்தில் நின்று கொண்டிருந்த சச்சின் மகன் ஆகியோரும் கண்ணீர் விட்டபடி திகைத்து போய் நின்றனர். கிரிக்கெட் உலகில் சாதனை மன்னன் இன்றுடன் ஓய்வு பெற்றார். கிரிக்கெட் இல்லாத எனது வாழ்வை நினைத்து பார்க்க முடியவில்லை என்று அவர் ஓய்வு குறித்து சச்சின் கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பிய நன்றி கடிததத்தில் கூறியிருந்தார். சல்யூட் சச்சின், குட்பை., இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற. கோல்கட்டா டெஸ்டில்…
Read More வெஸ்ட் இண்டிஸ் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்தியா வெற்றி. கண்ணீருடன் சச்சின் விடை பெற்றார்.நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்
ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 747 ஜம்போ ஏஐ 964 என்ற விமானம், நேற்று காலை சவூதி அரேபியா ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 400 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி அறையின் ஒரு கதவு சரியாக மூடப்படாதது குறித்து விமானி அறையின் கருவி எச்சரித்தது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் ஜெட்டா நகர விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த பயணிகள் அனைவரும் பயத்தில் உறைந்தனர். ஜெட்டா விமான நிலைய என்ஜினியர்கள் கதவு சரி செய்தனர். இதையடுத்து இரண்டு மணிநேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் புறப்பட்டது. இதனால் விமானம் ஐதராபாத்திற்கு செல்லாமல் நேராக மும்பைக்கு பத்திரமாக வந்து இறங்கியது. பின்னர் ஐதராபாத் பயணிகள் மற்றொரு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்…
Read More நடுவானில் திறந்த விமான கதவுகள் பயணிகள் உயிர் தப்பினர்இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்பு
human rights violations against the Tamils in Sri Lanka’s war against the LTTE கொழும்பு: மனித உரிமை மீறல்கள் குறித்த பலத்த சர்ச்சைகள், குற்றச்சாட்டுக்கள், கனடா, இந்தியா, மற்றும் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு இடையே காமன்வெல்த் மாநாடு கொழும்பில் இன்று துவங்குகிறது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்த காமன்வெல்த் மாநாட்டிற்கு போகவி்ல்லை. அதற்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தடபுடலாக ஏற்பாடோடு கொழும்பு சென்றுள்ளார். கனடா நாட்டின் சார்பாக ஈழ தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்களை கண்டித்து இந்த காமன்வெல்த் மாநாட்டை முழுமையாக புறக்கணித்து விட்டது. அதே போல் மொரீஷீயஸ் பிரதமர் தான் போகவில்லை என்று அறிவித்து…
Read More இலங்கை மனித உரிமை மீறல்கள் : இந்தியா, கனடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பிரதமர்களின் காமன்வெல்த் மாநாடு புறக்கணிப்புசிறந்த மேலாண்மை முறையில் குப்பையிலிருந்து செல்வதை குவிக்கலாம்
Wealth from human waste in India can be achieved by best method of modern waste management, waste produced by city people is better than any other source, இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 60 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட…
Read More சிறந்த மேலாண்மை முறையில் குப்பையிலிருந்து செல்வதை குவிக்கலாம்