Sixty six year old granny runs ‘marathon’ in a saree in Maharashtra இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின், ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காக வெறும் காலில் கட்டிய சேலையுடன் மராத்தான் ஓட்டப் போட்டி ஒன்றில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்ற பாட்டியின் செயல் பலரையும் நெகிழ் வைத்துள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மராத்தான் ஓட்டப் போட்டியில், 66 வயது பாட்டியான லதா பகல்வான்காரே என்பவர் வெறும் காலில் ஓடி 5,000 ரூபாய் பரிசை தட்டிச் சென்தையடுத்து அவரை சந்தித்து பேசிய மீடியாக்களிடம் சொன்ன செய்தியை கேட்டு பலரும் நெகிழ்ந்து விட்டார்கள் அதாவது இருதய கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் கணவர் பகல்வானின் ‘எம்.ஆர்.ஐ., ஸ்கேன்’ கட்டணத்திற்காகவே அந்த முதிய பெண்மணி முதல்…
Read More மகாராஷ்டிராவில் 66 வயது பெண் தன் கணவரின் உயிரைக் காக்க மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் வெறும் காலில் கட்டிய சேலையுடன் ஓடி 5,000 ரூபாய் பரிசு பெற்றர்Category: இந்தியா – சிறகுகள்
நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து
Fire accident at Mumbai multistorey building மும்பை : நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் இதுவரை 9 நபர்கள் கருகி பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. மும்பை நகரில் உள்ள கென்ஸ் கார்னரில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்து, அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் பரவி, அங்கு எரிந்துகொண்டிருந்த வீடுகளில் இருக்கும் சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டுவர 5 மணிநேரம் ஆனதாகவும், தீயை அணைக்க 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் போராடியதில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள் என தெரிய வந்துள்ளது. வீடுகளில் பற்றிய தீயினால் 6 பேர் அந்த சம்பவ…
Read More நேற்று நள்ளிரவில் மும்பையில் இருக்கும் 26 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 வது மாடியில் பயங்கரமான தீவிபத்துஇந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடை
National Green Tribunal bans burning of plastic, rubber across the country இந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முறைப்படுத்தப்படாத முறையில் திறந்தவெளியில் ரப்பர்பொருட்களின் கழிவுகளை எரிக்க நேற்று தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் பிற பொருட்கள் திறந்தவெளியில் எரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த தடை முறைப்படுத்தப்படாத பிளாஸ்டிக் கழிவுகளின் கையாளுதலும், அகற்றுதலும் தடை செய்து மறு சீரமைப்பு சூழலில் இயற்கையின் பாதுகாப்பிற்குத்தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் வழி வகுப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவு விதிகளுக்கு உட்பட்டு பிளாஸ்டிக் கழிவுகள், பழைய பொருட்கள் விற்பனையாளர்கள், மறுசுழற்சியாளர்கள் மற்றும் பி.வி.சி / பாலிஸ்டர்/ பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் என என்.ஜி.டி தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் கூறியுள்ளார்.…
Read More இந்தியாவில் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகளை திறந்த வெளியில் எரிக்க தடைஅமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்
Deputy Consul general of india in New York Devyani Khobragade handcuffed in public அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணியில் இருப்பவர் திருமதி.தேவயானி கோப்ரகடே. தனது அலுவலகத்தில் வேலை செய்த நபருக்கு அவர் விசா வழங்க அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் முறைகேடான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் அளித்துள்ளதாக, மென்ஹட்டன் பகுதியின் பெடரல் வழக்கறிஞர் ப்ரீத் பஹாரா குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, துணை தூதர் தேவயானி தனது மகளை பள்ளியில் அழத்து வந்து விட்டுச்செல்ல காரில் சென்ற போது பொதுமக்கள் முன் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டு, பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுதலை செய்தார்கள். அமெரிக்க அரசினுடைய இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் இந்தியாவுக்கான…
Read More அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதரை கைவிலங்கிட்டு கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்க தூதருக்கு இந்தியா சம்மன்பெண்ணிடம் சில்மிஷம் : ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்கு
FIR against AAP party Seemapuri MLA Dharmendra Koli on molestation charge புதுடெல்லி : – பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமாபுரி தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்.எல்,ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தர்மேந்தர் கோலி. இவர் மீது இதே தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீர்சிங்கின் மனைவி போலீஸில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் வாக்கு எண்ணிக்கை முடிந்து ஆம் ஆத்மி கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அப்போது தர்மேந்தர் கோலி என் வீட்டுக்குள் வந்தார். என்னிடம் செக்ஸ் சில்மிஷம் செய்து அநாகரீகமாக நடந்து கொண்டார். அந்த கட்சியினர் பலர் மது பாட்டில்களை வைத்திருந்தனர்.எங்கள் பகுதியில் உள்ள வால்மீகி கோவிலுக்குள் அவர்கள் மது பாட்டிலை வீசினர் என்று அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.…
Read More பெண்ணிடம் சில்மிஷம் : ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. மீது வழக்குபுதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி : ஷீலா தீட்சித் தோல்வி முகம்
இந்தியாவின் தலைநகர் தில்லியில் ஊழலை எதிர்த்து போராடி ‘ஆம்ஆத்மி’ எனும் அரசியல் கட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கினார். தில்லியில் சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். அக்கட்சி முதல்–மந்திரி வேட்பாளராக அரவிந்த் கெஜ்ரிவாலை அறிவித்தது. இதனையடுத்து புதுடெல்லி தொகுதியில் முதல்–மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். இங்கு ஓட்டு எண்ணிக்கையில் முதலில் ஷீலா தீட்சித் முன்னணியில் இருந்தார். ஆனால் அடுத்து கெஜ்ரிவால் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணிக்கு வந்தார். தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் 1500 ஓட்டுகள் முன்னணியில் இருக்கிறார். முதல்–மந்திரி ஷீலா தீட்சித் தோல்வி முகத்தில் உள்ளார். பாரதீய ஜனதாவின் முதல்–மந்திரி வேட்பாளர் ஹர்ஷ்வர்த்தன் கிருஷ்ணா நகர் தொகுதியில் 5,000 ஓட்டுகள் முன்னணியில் உள்ளார். லட்சுமி நகர் தொகுதியில் மந்திரி ஏ.கே.வாலியா பின்தங்கிய நிலையில் உள்ளார். இதே போல் இரண் வாலியா, ஹருண்யுசுப்,…
Read More புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னணி : ஷீலா தீட்சித் தோல்வி முகம்இந்தியாவில் மருந்து மத்திரை வாங்கியே ஏழையாகும் 4 கோடி பேர்
இளவயதில் ஆரோக்யத்தினை தொலைத்து பணத்தை சம்பாதிக்கின்றனர். அதுவே முதுமை பருவத்தை ஆரோக்கியத்தினை காக்க சம்பாதித்த பணத்தை செலவு செய்கின்றனர். இன்றைய காலத்தில் நோய்கள் வரும் முன்பே அதற்கேற்ப லட்சக்கணக்கில் பணத்தினை வங்கிகளில் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது மெடிக்ளைம் இன்சூரன்ஸ் போட்டு வைத்துக் கொள்ளவேண்டும் அந்த அளவிற்கு மருந்து மாத்திரைகளின் செலவுகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மருந்து வாங்கியே ஏழைகளாகும் குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. ஆண்டுக்கு 4 கோடி பேர் ஏழைகளாகி விட்டதாக தெரிவிக்கின்றது ஒரு புள்ளிவிபரம். உலகின் பல நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் மிகவும் தேவைப்படும் மருந்துகள் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையை மத்திய அரசு வைத்துள்ளது. இதில் அதிகம் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு விலை கட்டுப்பாடு இல்லை என்று கடந்த 2003ம்…
Read More இந்தியாவில் மருந்து மத்திரை வாங்கியே ஏழையாகும் 4 கோடி பேர்மகராஷ்டிராவில் நரபலி கொடுக்கபட்ட 3 வயது சிறுமி
3 Year Old Murdered in Yavatmal in Suspected Human Sacrifice மகராஷ்டிராவில் காணாமல் போன மூன்று வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயத்தை பார்த்தால், அவர் நரபலி போன்ற மூடநம்பிக்கை காரணமாக பலியாகியிருக்காலம் எனத் தெரிவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மகராஷ்டிராவில் உள்ள யவத் மால் மாவட்டத்தில் ஒரு இடத்தில் கட்டிடப்பணி நடந்து வந்தது. அந்த இடத்தில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுகிடந்தார். உடனே போலீசார் சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அக்குழந்தை யாரென விசாரித்தபோது, மூன்று நாட்கள் முன்னர் அதே இடத்தில் காணாமல் போன ஒரு குழந்தை என தெரியவந்தது. அக்குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.குழந்தையின் உடலில்…
Read More மகராஷ்டிராவில் நரபலி கொடுக்கபட்ட 3 வயது சிறுமிசர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டன் ராணியை முந்தினார் சோனியா
சர்வதேச அளவில் முன்னணி இணையதள செய்தி நிறுவனமான ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள உலகின் முதல் 20 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்கள் பட்டியலில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில், பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு முந்தைய இடத்தில் சோனியா உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அட்டவணை வெளியான 24 மணி நேரத்தில் சோனியா பெயர் திடீரென நீக்கப்பட்டது. தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஹப்பிங்டன் போஸ்ட் நிறுவனம், சர்வதேச அளவிலான கோடீஸ்வரர்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில், நாட்டின் மன்னர்கள், அதிபர்கள், சுல்தான்கள், அரசிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்றிருப்பவர்களில், 7 இடங்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளனர். சர்வதேச கோடீஸ்வரர்களின் பட்டியலில், முதல் 20 இடங்களை…
Read More சர்வதேச கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரிட்டன் ராணியை முந்தினார் சோனியாமுகநூலில் வலம் வரும் இந்திய சிறைச்சாலை கைதிகள்-கேரளாவில் அம்பலம்
Kerala accused using Facebook in jail கேரளச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் பலர் சிறையில் இருந்தபடியே பேஸ்புக் வளைதளத்தைப் பயன்படுத்தி வருவது அம்பலமாகியுள்ளது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதாகி கோழிக்கோடு சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறையில் வாழும் பெரும்பாலான அரசியல் பிண்ணனி கொண்ட குற்றவாளிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுகுறித்து கேரளத் தொலைக்காட்சி ஒன்று சிறப்புப் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிறையில் உள்ள கைதிகள் சிலரின் பேஸ்புக் பக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி குற்றவாளி ஒருவர் நேற்று மாலை கூட சிறையில் இருந்தவண்ணம் தனது பேஸ்புக் பக்கத்தை அப்டேட் செய்துள்ளதும் மேலும் சிலர்…
Read More முகநூலில் வலம் வரும் இந்திய சிறைச்சாலை கைதிகள்-கேரளாவில் அம்பலம்