சார்ஜாவில் மீசை வைத்த இந்தியா என்ஜினீயரின் பாஸ்போர்ட் பறிமுதல்

Officer detains Indian man’s passport in Sharjah over dislike of moustache கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுஜீல் குமார். கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் ஐக்கிய அரசு எமிரேட் நாடுகளில் ஒன்றான சார்ஜா சென்றிருந்தார். இவர் பயணம் செய்த விமானம் சார்ஜாவில் இறங்கியது. அங்கு அவரது பாஸ்போர்ட்டை அதிகாரி ஒருவர் பரிசோதித்து விட்டு அதன் மீது ‘ரப்பர் ஸ்டாம்ப்’ குத்தினார். ஆனால், அதை திருப்பி தராமல் அதில் இருந்த சுஜீல் குமாரின் போட்டோவை பார்த்து விட்டு சர்ச்சையில் ஈடுபட்டார். அதாவது நேரில் இவர் வைத்திருந்த மீசைக்கும், போட்டோவில் முகத்தில் இருந்த மீசைக்கும் வித்தியாசம் இருந்தது. எனவே, முகத்தில் இருக்கும் மீசையை அகற்றி விட்டு வந்து காட்டினால் தான் பாஸ்போர்ட்டை தரமுடியும் என ‘கெடுபிடி’ செய்தார். அதற்கு சுஜீல்குமார் விளக்கம் அளித்தார். ஆனால் இவர் சொன்னதை…

Read More சார்ஜாவில் மீசை வைத்த இந்தியா என்ஜினீயரின் பாஸ்போர்ட் பறிமுதல்

சத்திஸ்கரில் 10 வயது சிறுவனை துண்டுதுண்டாக வெட்டி படுகொலை

Child sacrifice suspected after missing boy’s body found சத்திஸ்கர் மாநிலத்தில் கண்டதுண்டமாக வெட்டப்பட்ட நிலையில் கிடைத்துள்ள 10 வயது சிறுவனின் பிரேதம் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம் ரத்னபூர் பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் (10) என்ற சிறுவன் கடந்த சனிக்கிழமை காலை அப்பகுதியின் மலை மீது அமைந்துள்ள லக்கன் தேவி கோயிலுக்கு போவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றான். மாலை வெகுநேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் கலக்கம் அடைந்த தாய், ஊர் முழுவதும் தேடி பார்த்தார். அவனைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் உள்ளூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கோயிலில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்தக்கரை படிந்த ஹரிசங்கரின் உடைகள் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பிலாஸ்பூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் தலைமையில் ஏராளமான…

Read More சத்திஸ்கரில் 10 வயது சிறுவனை துண்டுதுண்டாக வெட்டி படுகொலை

குஜராத் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு புத்தகங்களுக்கு பதிலாக டேப்லட்ஸ் வழங்கப்பட்டுள்ளது

Govt school beats hazards of heavy schoolbags with tablets தமிழகத்தில் புத்தக சுமையை குறைக்கும் வகையில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கான பாடங்களை 3 பருவமாக பிரித்து புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.அத்துடன் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் கிரேடு முறையில் மாணவர்களின் தேர்வு முறைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த திட்டம் மாணவர்களை மட்டுமின்றி பெற்றோர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.எனினும் பள்ளி மாணவர்களின் புத்தக சுமை பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் இப்போதும் கவலை அடையச் செய்கிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு கையடக்க கம்ப்யூட்டர் (டேப்லட்ஸ்) வழங்கப்பட்டுள்ளது.    அதாவது அதிக பாடப்புத்தகங்கள் கொண்ட பைகளை சுமந்து செல்வதற்கு பதிலாக இந்த கையடக்க கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக ‘சங்கன்வா’ என்ற பள்ளியில் 5–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு…

Read More குஜராத் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு புத்தகங்களுக்கு பதிலாக டேப்லட்ஸ் வழங்கப்பட்டுள்ளது

அனந்தபூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் 26 பேர் பலி

Sleeping passengers caught in Nanded-Bangalore Express fire; 26 die, 15 injured ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். நான்டட்டில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   மின்கசிவால் ரெயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீயால் 5 பெட்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கொத்தசேவூர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது ரெயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க அனந்தபூர், தர்மாவரத்தில் இருந்து மருத்துவ மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். ரெயில்வே உயர் அதிகாரிகளும் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். எனினும், இந்தத் தீ…

Read More அனந்தபூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் 26 பேர் பலி

ஜோத்பூர் மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமானது

High-Level Probe Ordered Into Wastage of 742 Eyes   ஜோத்பூர் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்டது குறித்து  உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.  ராஜஸ்தான் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் இயங்கி வரும் கண் வங்கியின் 17 வருடத் தகவல்களை வேண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒரு நபர் விண்ணப்பித்திருந்தார்.  அதன்படி, கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் தானமாக பெற்ற மொத்த கண்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து கல்லூரியில் இருந்து பெறப்பட்ட தகவல்களை தகவல் ஆணையம் அவருக்கு அனுப்பி வைத்தது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரையில்…

Read More ஜோத்பூர் மருத்துவமனையில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமானது

இமாச்சல பிரதேச ஐ கோர்ட்டு ‘ஜங் புட்’ களை விற்க தடை செய்ய உத்தரவு

Himachal HC orders complete ban on junk food items, wafers and Kurkure in state இமாச்சல பிரதேசத்தில் வேப்பர்ஸ் மற்றும் குர்க்குரே பேன்ற `ஜங் புட்’களை விற்க தடை விதிக்க ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மக்காத மற்றும் பிளாஸ்டிக் பொருட்களாக பேக் செய்யப்படும் உருளை கிழங்கு சிப்ஸ், வேப்பர்ஸ், குர்க்குரே மற்றும் பிற ‘ஜங் புட்’ களை விற்க இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தடை அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. ஆனால் குடிநீர் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . ஏற்கனவே அம்மாநில அரசால் இது போன்ற பொருட்களை விற்க, தயாரிக்க மற்றும் சேமிக்க தடை விதிக்கப்பட்டது. ஜூன் 26ம் தேதி இந்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டது.…

Read More இமாச்சல பிரதேச ஐ கோர்ட்டு ‘ஜங் புட்’ களை விற்க தடை செய்ய உத்தரவு

ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த நிதி: விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு

  தில்லி : வரும் டிசம்பர் 28 ஆம் தேதியன்று தில்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கயிருக்கிறார். இந்தநிலையில் அவருடைய கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பான புகார் எழுந்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால் தங்கள் கட்சி சார்பாக நிதி பெற்றது சம்பந்தமான அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் தங்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளன என கூறியிருந்தார். இதற்கிடையில் இந்த புகார் பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது. முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அவர் விசாரணையை சந்திக்கவுள்ளார். Home Ministry to inspect accounts of Aam Aadmi Party on foreign funding Home Ministry will soon inspect the books of accounts of Aam Aadmi Party in connection with…

Read More ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த நிதி: விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு

பீகார் கிராம பஞ்சாயத்தில் திருமணம் அகாத இளம் பெண்கள் கைபேசி பயன்படுத்த தடை

Ban on mobile phones for unwed girls in Bihar panchayat பீகாரில் கிராமங்களில் புதிதல்ல. சிறுமியருக்கு ஆடை கட்டுப்பாடு, பள்ளி மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை என அவ்வப்போது பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்படுவது போல் அங்குள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில், திருமணமாகாத கன்னிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது, சோம்கார். இந்த கிராமத்தில், பஞ்சாயத்து தலைவராக இருப்பவர், ஜாகீர் அன்சாரி. நேற்று முன்தினம், கிராம பஞ்சாயத்து கூடியது.அதில், ‘திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமியர், மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது’ என ஏக்மனதாக் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை நேற்று பஞ்., தலைவர் அன்சாரி அறிவித்தார்.அதில் ”தடையை மீறி யாரேனும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை அறிந்தால் அவர்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கப்படுவர்” என தெரிவித்தார். இது…

Read More பீகார் கிராம பஞ்சாயத்தில் திருமணம் அகாத இளம் பெண்கள் கைபேசி பயன்படுத்த தடை

பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ்

Yoga Master Guru Ramdev says that he will support Narendra modi and not his Bharatiya Janata Party   பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ் புதுடில்லி: இந்திய தலை நகர் டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ் உரையில்: பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறேன். எனினும், நரேந்திர மோடிக்கு மட்டும் எனது ஆதரவு உண்டு, அவரது கட்சியான பாரதிய ஜனதாவிற்கு கிடையாது. 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்க இருக்கிறது. என கூறினார். Yoga Master Guru Ramdev…

Read More பா.ஜ.கட்சியின், பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியை ஆதரித்து, அமேதி பகுதி மற்றும் ரேபரேலி பகுதிகளில் பிரசாரம் : யோகாசன பயிற்சியாளர் குரு ராம்தேவ்

பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு

Foot wear thrown on Bihar chief Minister Nitish kumar while speaking about congress and BJP in Public meeting at Bihar பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு பெகுசராய் எனும் பகுதியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் அவர், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் பா.ஜ.க வை கடுமையாக தாக்கி மற்றும் குற்றம் சாட்டி பேசினார். அப்பொழுது கூட்டத்திலிருந்து, முதலமைச்சர் நிதிஷ்குமாரை குறிவைத்து, செருப்பு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும், வீசப்பட்ட அந்த செருப்பு, நிதிஷ் குமார் மீது விழ வில்லை. இதனையடுத்து, செருப்பு வீசப்பட்ட இடத்தை நோக்கி காவல்துறையினர் விரைந்து சென்றன்ர். ஆனாலும் செருப்பு வீசிய நபர், அவர்களிடம் அகப்படாமல்…

Read More பீகார் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க வை தாக்கி பேசிய முதலமைச்சர் நிதீஷ் குமாரை குறிவைத்து செருப்பு வீச்சு