அனந்தபூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் 26 பேர் பலி

Sleeping passengers caught in Nanded-Bangalore Express fire; 26 die, 15 injured

Sleeping passengers caught in Nanded-Bangalore Express fire; 26 die, 15 injured

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். நான்டட்டில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

மின்கசிவால் ரெயிலின் குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீயால் 5 பெட்டிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 3.45 மணி அளவில் கொத்தசேவூர் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தற்போது ரெயிலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க அனந்தபூர், தர்மாவரத்தில் இருந்து மருத்துவ மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளனர். ரெயில்வே உயர் அதிகாரிகளும் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

எனினும், இந்தத் தீ விபத்து நடந்தது அதிகாலை என்பதால், தூங்கிக் கொண்டிருந்தப் பயணிகள் பலராலும் தப்ப முடியவில்லை. இந்தத் தீயில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழுமையான மீட்புப் பணிகளுக்குப் பிறகே சரியான சேத விவரம் தர முடியும் என்று அவர் கூறியதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே உதவி எண்கள்:

ரயில் விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த விபரங்கள் அறிந்து கொள்ளும் வகையில் ரயில்வே நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

பெங்களூரு தொடர்பு எண்கள்: 080 22354108, 080 22259271, 080 22156551, 080 22156554.

எஸ்.எஸ்.பி. நிலையம் எண்கள்: 085 552 80125 மற்றும் 097 31666863

Sleeping passengers caught in Nanded-Bangalore Express fire; 26 die, 15 injured

 

Related posts