இந்தியாவில் வளமான நகரம் பட்டியலில் சென்னைக்கு இரண்டவது இடம்

chennai-guindy-28

இந்தியாவின் வளமான நகரங்களின் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் குர்காவுன் உள்ளது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது.

தற்போது சர்வதேச நிதி நெருக்கடியால் வெளிநாட்டினர் பலர் சிக்கனம் கருதி இந்திய நகரங்களில் வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களது பட்டியலில் சென்னை உட்பட 7 நகரங்கள் முன்னணி வகிக்கின்றன.
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிதி நெருக்கடியால் அந்நாட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் உள்ள கிளை அலுவலகங்கள், துணை நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றன.

அப்படி மாறுதல் பெறும் ஊழியர்களில் பெரும்பாலோர் இந்தியாவில் வசிக்க விரும்புகின்றனர். அவர்களது நாடுகளில் நிலவும் விலைவாசியை ஒப்பிடுகையில் இந்திய நகரங்களில் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளதாக கருதுகின்றனர். எனவே, சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், புனே, கொல்கத்தா ஆகிய 7 நகரங்களை குறிவைத்து மாறுதல் கேட்கின்றனர்.

இந்த விவரங்களை இசிஏ இன்டர்நேஷனல் என்ற மனிதவள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அது நடத்திய உலகின் மிக காஸ்ட்லியான நகரங்கள் பட்டியலில் 370 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கடந்த ஆண்டின் நிலவரத்தைவிட இந்திய நகரங்கள் பல மடங்கு கீழிறங்கியுள்ளன. எனவே, குறைந்த வருமானத்துடன் வசிக்க ஏற்ற நகரங்களாக இந்திய நகரங்களை வெளிநாட்டினர் பார்க்கின்றனர். இங்கு செட்டிலாக ஆர்வம் காட்டுகின்றனர்

இந்நிலையில் டிவி, மொபைல், லேப்டாப், கார், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களின் அடிப்படையில் இபபோது தயாரிக்கப்பட பட்டியலில் குர்காவினில் 27 சதவீதம் பேரும், சென்னையில் 24 சதவீதம் பேரும் இத்தகைய வசதிகளுடன் வாழ்கின்றனர். இந்த பட்டியலில் 3வது இடத்தில் பெங்களூருவும், 4வது இடத்தில் மும்பையும், அதனைத் தொடர்ந்து டில்லியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts