Indian Petroleum minister Veerappa Moily travled in Metro rail to his office எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று புது தில்லியில் உள்ள தனது அலுவலகத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் பெட்ரோலிய விலை உயர்வை கட்டுபடுத்த ‘எரிபொருள் சிக்கனம்’ மிக அவசியம் எனும் கருத்தை பல சமயங்களில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார் அமைச்சர் வீரப்ப மொய்லி. கடந்த மாதம் ‘எரி பொருள் சிக்கனம்’ சம்பந்தமாக உரையாற்றும் போது அவரும், அவரது அலுவலக ஊழியர்களும் வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் மெட்ரோ இரயில் மற்றும் இதர பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்தப் போவதாக கூறியிருந்தார். அவரது அறிவிப்பின் படி இன்று காலை அவர் அலுவலகத்திற்கு கிளம்பி வீட்டிற்கு அருகில் உள்ள மெட்ரோ இரயில்…
Read More எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி அமைச்சர் மொய்லி மெட்ரோ பயணம்Category: செய்தி சிறகுகள்
மூன்று அமெரிக்க வேதியல் நிபுணர்களுக்கு நோபல் பரிசு
The Nobel prize for 2013 in chemistry was awarded by the Royal Swedish Academy of Sciences 2013 ஆம் ஆண்டிற்கான வேதியியல் சாதனைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்த நோபல் பரிசு மூன்று அமெரிக்க நிபுணர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதன்படி, இந்த ஆண்டு வேதியியலுக்காக வார்ஷெல், மார்ட்டின் கார்ப்லஸ், மைக்கேல் லெவிட், ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. நிபுணர்கள் மூவருக்கும் மூலக்கூறுகள் மாதிரி வடிவமைப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த மூவரின் கண்டுபிடிப்பு இன்றைய கணினிகளில் உபயோகபடுத்தப்படுகிறது. திரு.மார்ட்டின் கார்ப்லஸ் ஸ்ட்ரஸ்டபோர்க் மற்றும் திரு.ஹாவர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள். திரு.ஆரிய வார்ஷெல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பணியில் இருக்கிறார். திரு.மைக்கேல் லெவிட் ஸ்டாண்ட்போர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். English Summary: The Nobel prize for 2013 in chemistry was awarded by…
Read More மூன்று அமெரிக்க வேதியல் நிபுணர்களுக்கு நோபல் பரிசுஆந்திராவில் தொடர்ச்சியான போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Telangana turmoil – Is President Rule the only option left? கடலோர ஆந்திராபிரதேசம் மற்றும் இராயலசீமாவை உள்ளடக்கிய சீமாந்திராவில் தெலுங்கானாவுக்கு எதிராக உச்சகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. 2 மாதத்திற்கும் மேலாக இந்த போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதனால் ஆந்திரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டிய அவசியத்திற்கு மத்திய அரசு தள்ளபட்டிருக்கிறது. மத்திய அரசின் தெலுங்கானாஅறிவிப்பால் சுமார் 2 மாத காலமாக போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆகையால் உச்சகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துடன் ஹைதராபாத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஹைதராபாத்திலும், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியிலும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் போக்குவரத்து, மின்சாரம்,கல்வித்துறை ஊழியர்கள் என எல்லாத்தரப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள். மின்சார வாரிய ஊழியர்கள்…
Read More ஆந்திராவில் தொடர்ச்சியான போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்புவடமேற்கு டெல்லி சிறுவர் காப்பகத்திலிருந்து 33 பேர் தப்பியோட்டம்
33 inmates escape from Delhi juvenile home, 14 held வடமேற்கு டெல்லி சிறார்கள் காப்பகத்தில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து 33 இளம் குற்றவாளிகள் தப்பி ஓடிய சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படங்களில் வரும் சிறை உடைப்பு காட்சிகள் போன்றே சிறையை உடைத்துவிட்டு இளம் குற்றவாளிகளான இந்த சிறுவர்கள் செய்து தப்பியோடியிருக்கின்றனர். அந்த காப்பகத்தில் பணம் வைத்திருக்கும் பெட்டகத்தை உடைத்து விட்டு அதில் இருந்த ருபாய் 35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, சுமார் 50 சிறுவர்கள் அங்கிருந்த காவலாளியை அடித்து, உதைத்து காயப்படுத்தினார்கள். அங்கிருத்த கண்ணாடி ஜன்னல்களை கற்களால் அடித்து உடைத்து சூறையாடிய இளம் குற்றவாளிகள், மதில் சுவர் மேல் பகுதியில் உள்ள முள் வேலியின் மேல் மெத்தைகள் விரித்து காப்பகத்தின் நிர்வாக அலுவலக பகுதிக்கு சென்றுள்ளர்கள். பிறகு சமையல் அறையில் இருந்த…
Read More வடமேற்கு டெல்லி சிறுவர் காப்பகத்திலிருந்து 33 பேர் தப்பியோட்டம்ஒரே நாளில் பீகார் தலைநகர் பாட்னாவில் மின்னல் தாக்கி 25 பேர் பலி
Lightning claims more than 25 lives in Bihar in a single day பீகாரின் பல மாவட்டங்களில் இந்த வருட பருவமழை கனமழையாக பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று பெய்த மழை இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழையாக இருந்ததால், மக்கள் பெரும் பாதிப்புக்கும் பீதிக்கும் உள்ளாயினர். இதில், அவுரங்பாத் மாவட்டத்தில் ஏற்பட்ட மின்னலில் 4 குழந்தைகளும், 2 விவசாயிகளும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது போன்று பங்கா மாவட்டத்திலும் வயல் பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த 5 விவசாயிகளின் உயிரை மின்னல் பறித்தது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின்னல் பாய்ந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மின்னல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில்…
Read More ஒரே நாளில் பீகார் தலைநகர் பாட்னாவில் மின்னல் தாக்கி 25 பேர் பலிசோனியாவே தெலுங்கனா பிரச்சனை முற்றுவதற்கு காரணம்: ஜெகன்மோகன்
Jaganmohan Reddy blames Sonia Gandhi for Telangana crisis ஆந்திர பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு மாநிலமாக ஆக்கும் மத்திய அரசினது முடிவை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். காங்கிரஸ் கட்சியின் இந்த தன்னிச்சையான ஒருதலைப்பட்ச செயல்பாட்டை எதிர்ப்பது மட்டும் இல்லாமல் தெலங்கானா பிரச்சனை மேலும் விரிவடைய சோனியா காந்தியே காரணம். அவர் மக்களுடைய உணர்வுகளை திட்டம் போட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும் இந்த ஒரு மாநிலத்தை இரண்டாக பிரித்து மற்றொரு மாநிலத்தை உருவாக்கி அதன் மூலம் வரும் கால சந்ததியினருக்கு ஒரு மிகபெரும் மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறார். சோனியாகாந்தியின் தன்னிச்சையான சுயநல முடிவால் ஆந்திராவின் இரு தரப்பு மக்களும் பாதிக்கப்படுவது உறுதி. இதைப்பற்றி முற்றிலும் கவலையில்லாமல் தனது மகன் ராகுல்காந்தியை பிரதமராக…
Read More சோனியாவே தெலுங்கனா பிரச்சனை முற்றுவதற்கு காரணம்: ஜெகன்மோகன்அசிட் வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் விஷமருந்தி தற்கொலை
Karaikal Vinothini’s mother Saraswathi committed suicide காரைகாலில் அமில வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் சரஸ்வதி திடீரென விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு, தீபாவளிப் பண்டிகையை தனது குடும்பத்தினர்களுடன் கொண்டாடிவிட்டு சென்னையில் இருந்து திரும்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது சுரேஷ் என்ற வாலிபர் ஆசிட் வீசினார். இந்த அசிட் வீச்சு நடந்ததற்கு மறு நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டான். அதே தினத்தன்று மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பின்பு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி இறந்தார். குற்றவாளிக்கு இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று நள்ளிரவு வினோதினியின்…
Read More அசிட் வீச்சில் இறந்த வினோதினியின் தாயார் விஷமருந்தி தற்கொலைதிரைப்படத்தில் பள்ளிக்கூட மாணவராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகம்
Music Director GV Prakash Kumar is going to play lead role in a movie titled Pencil இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் “பென்சில்” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகிய சில வருடங்களிலேயே சிகரத்தை தொட்ட திரு.ஜி.வி.பிரகாஷ் குமார் தற்சமயம் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். அவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என பல வருடங்களாக கூறி வரும் நிலையில், டைரக்டர் முருகதாஸின் தயாரிப்பில் இசையமைபாளர் திரு.ஜி.வி.பிரகாஷ் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் திரு. கௌதம் வாசுதேவமேனனுடைய உதவியாளராக இருந்த மணி நாகராஜ் இயக்கும் “பென்சில்” என்ற திரைபடத்தில் நடிக்க இசை அமைப்பாளர் திரு.ஜி.வி.பிரகாஷ் ஒப்புக் கொண்டதாக தகவகள் வெளியாகியுள்ளது. இதில் அவர் ப்ளஸ் டூ படிக்கும் பள்ளிகூட…
Read More திரைப்படத்தில் பள்ளிக்கூட மாணவராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகம்கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை இங்கிலாந்து டாக்டர் சாதனை
Toothy vision: Tooth implant restores vision in blind man in UK 1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நடந்த விபத்தில் திரு.இயன் டிபெட்ஸ் (வயது 43) என்ற தொழிலாளியினுடைய வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்து அடிக்கடி மிகுந்த வலியுடன் நீர் வடிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் மிகவும் அவதியுற்று வந்தார். பிறகு குறைந்து கொண்டே வந்த அவரது கண்பார்வை பறிபோயிற்று. இதனால் அவரது வேலையில் இருந்து நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலைக்கு தள்ளபட்டார். அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் குறைய ஆரம்பித்து முற்றிலுமாக பறிபோனதால், இந்த உலகமே இருண்டபோன நிலையில் இருண்ட உலகத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு அவர் ஆளானார். புதிய ஒரு அறுவை சிகிச்சை மூலம் கண்ணை பறிகொடுத்த இயான் டிபெட்சுக்கு மீண்டும் பார்வை…
Read More கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை இங்கிலாந்து டாக்டர் சாதனைஆப்கான் கிரிக்கெட் அணி 2015 வருட உலகக் கோப்பைக்கு தேர்வு
Afghan Cricket Creates History; Qualifies for the 2015 world cup ! ஆப்கானிஸ்தான் அணி, முதல் முறையாக உலக கோப்பை (2015) கிரிக்கெட் தொடர் போட்டிக்கு தகுதி பெற்றது. ஐ.சி.சி., சார்பில் 12வது உலக கோப்பை தொடர், 2015 பிப்ரவரி 14 தேதி முதல் மார்ச் 29 தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. மொத்தம் 14 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். “ஏ” பிரிவில் இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் “பி பிரிவில் தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் என, 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. சார்ஜாவில் நேற்று முடிந்த “வேர்ல்டு கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் தொடர் மூலம் (ஜூன் 2011 முதல் 2013 அக்., 4), 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற…
Read More ஆப்கான் கிரிக்கெட் அணி 2015 வருட உலகக் கோப்பைக்கு தேர்வு