அசாமில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டி மாநிலங்களவை தேர்தலில் மனு தாக்கல்

Manmohan Singh files Rajya Sabha nomination கவுகாத்தி 16 மே 2013: பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அசாமில் நேற்று மனு தாக்கல் செய்தார்.அசாம் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய எம்.பி. பதவிக்காலம், வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடிகிறது. ஆகையால், பிரதமர் பொறுப்பு எற்ற இடம் உள்ளிட்ட  காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவதற்கான மனுவை, அசாம் சட்டப்பேரவை செயலாளரிடம் நேற்று தாக்கல் செய்தார். அவர்  நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் – கவுகாத்திக்கு வந்தார். மனு தாக்கலின் போது அவருடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புவனேஸ்வர் கலிதா, மாநில முதல்வர் தருண் கோகய், மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அங்கு, பத்திரிகையாளர்களுக்கு புகைப்படம் எடுக்கவோ, செய்தி சேகரிக்கவோ  அனுமதி அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து, சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதை சமாதானபடுத்தும்…

Read More

சி.பி.ஐ-க்கு சுய அதிகாரம் தர அமைச்சரவை குழு ஆய்வு

Prime minister Manmohan singh appointed a committee for the independence of CBI and its functional autonomy உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு அரசியல் தலையீடு இல்லாத சுய அதிகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை குழு வை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் வி. நாராயண சாமி, பில் சிபல்,  மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுகிறார். முன்னதாக நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. Prime minister Manmohan singh appointed a committee for the…

Read More

நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு

நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு

Tamilnadu police power star Dr.srinivasan again arrested “கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்தின் மூலம் பிரபலமான “பவர் ஸ்டார் சீனிவாசன்” மீது மேலும் ஒரு வழக்கு காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இது இவருக்கு 11வது வழக்கு. ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி 2.5 கோடி பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மலேசியாவைச் சேர்ந்த மணீஷ் என்பவரின் புகாரின்  பேரில் சிறையில் இருந்த பவர் ஸ்டார் சீனிவாசன் மீண்டும் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் சீனிவாசனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்த உள்ளனர். நடிகர் பவர் ஸ்டார் மீது மீண்டும் வழக்கு பதிவு Land for sale in chennai by www.bestsquarefeet.com  Tamilnadu police power star Dr.srinivasan again arrested

Read More

அஜீத்தின் 53வது படம் குலுமனாலியில் இறுதிகட்ட படப்பிடிப்பு

actor ajith cyber crime movie  நடிகர் அஜித் நடிக்கும் 53வது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குலு-மணாலியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இன்னும் பெயர் வைக்கபடாத இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்பிற்கு பஞ்சம் இல்லை. சைபர் க்ரைம்மை  மையமாக கொண்டு உருவாகி வரும்  இப்படம், பில்லா படத்திற்கு பிறகு விஷ்ணுவர்த்தன் அஜித் யுவன்ஷங்கர்ராஜ இணையும் படம் இது கண்களுக்கும் காதுகளுக்கும் இனிமையை கண்டிப்பாக தரும் என்பது இயக்குனரின் கருத்து. இம்மாதம் 15ஆம் தேதி  முதல் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது, விஷ்ணுவர்த்தன், அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் கோலிவுட் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது actor ajith cyber crime movie The Real estate company in chennai

Read More

மோடி ஒரு சிறந்த நிர்வாகி: இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கருத்து.

Narayana Murthy praised Narendra Modi வதோதரா 14 மே 2013 :  குஜராத் சென்றிருந்த இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி  அம்மாநில முதல் அமைச்சர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒருசிறந்த நிர்வாகி என செய்தியாளர்களிடம் கூறினார்.. மேலும் அவர், முதல்வர் மோடி நம் நாட்டின் மிக சிறந்த நிர்வாகி எனவும், குஜராத் மாநிலத்தை வேகமான வளர்ச்சி யை நோக்கி கொண்டு செல்கிறார் என்றார்.  குஜராத்தில் உள்ள  உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்த பின்னரே தாம் அவரது நிர்வாகத்திறமையினை தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். Narayana Murthy praised Narendra Modi Narayana murthy said that Gandhiji is his Role model. A gujarati is my role model and i am proud to get the award in Gujarat. Flats sale in Chennai Mogappair: Contact www.bestsquarefeet.com

Read More

பேஸ்புக்கில் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்த மனித உரிமை ஆர்வலர் கைது

lawyer arrested fb comments against ex cm ஐதராபாத் :  முன்னாள் ஆந்திர முதல்வரும் தற்போதைய தமிழக கவர்னருமான ரோசைய்யா மற்றும் எம்.எல்.ஏ., கிருஷ்ண மோகன் ஆகியோர் குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்தை பதிவு செய்தமைக்காக ஆந்திர வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில அபகரிப்பு கும்பலுக்கும் ரோசைய்யாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அவர் பேஸ்புக்கில் கருத்து பதிவுசெய்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ண மோகன் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் ஜெயா விந்தியாலா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மனித உரிமை ஆர்வலர் மற்றும் மனித உரிமை அமைப்பின் மூத்த பெண் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. A local court in Andhra Pradesh has remanded Lawyer for FB comments against ex-CM lawyer arrested fb comments against ex cm  

Read More

சித்தராமையா கர்நாடக முதல் அமைச்சராக பதவி ஏற்றார்

siddaramaiah sworn as karnataka chief minister 13 மே 2013: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் தலை நகர் பெங்களூருவில் ஆளுநர் பரத்வாஜ் முன்னிலையில் சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். பாஜகவுக்கு முந்தைய ஜனதா தள ஆட்சியின் போது, சித்தராமையா நிதி அமைச்சராக   பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. siddaramaiah sworn as karnataka chief minister

Read More

வன்முறையில் ஈடுபடும் கட்சி தடை செய்யப்படும்:முதல்வர் எச்சரிக்கை

Jayalalithaa cautions ban PMK for violence வன்முறையில் இடுபாடும் கட்சியினரை கட்டுபடுத்தாவிட்டால் அந்த கட்சியின் அங்கிகாரம் ரத்து செய்ய அரசு தயங்காது  என பா.ம.க வினருக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு – வட மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாக நடந்து வருவது குறித்து இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து முதல்வர் ஜெ.ஜெயலலிதா அளித்த பதில் வருமாறு: மரக்காணம் சம்பவம் சம்பந்தமாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி பா.ம.க அறிவித்த தொடர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதுகுறித்து போலீசார்  ெரிவித்திருந்தும் சட்ட விரோதமாக  கடந்த 30&ம் தேதி தடையை மீறி போராட்டத்தை நடத்த  தங்கள் கட்சியினருடன் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக கூடியதால், ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட 363 பா.ம.க வினர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன தொழிலாளர்களுக்கும் ஆபத்து விளைவிக்கும்…

Read More

ரு.443 கோடி மதிப்புள்ள வீட்டுவசதி வாரிய நிலங்கள் ஆக்கிரமிப்பு.

tamil nadu housing board land encroached தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வருடாந்தர தணிக்கை அறிக்கையின் படி மொத்தமாக ரூ.442.99 கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாகவும் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு கையகபடுத்த நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு சென்னையில் அதிகபடியாக  அண்ணாநகர், பெசன்ட் நகர், முகப்பேர், கே கே நகரில் நடந்திருப்பதாகவும் இதுபோல் கோவையுலும் நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பு விவரம்: அண்ணாநகர் – ரூ.178.கோடி பெசன்ட் நகர் – ரூ.177.28கோடி முகப்பேர் – ரூ.47.63கோடி கோவை – ரூ.17.6கோடி இதில் கே.கே நகர் பகுதியில் 229.6 ஏக்கர் நிலமும், கோவையில் 82.64 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கையகபடுத்தபட்ட சுமார் 3,353 ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் அண்ணாநகர், பெசன்ட் நகர், கே கே நகர், முகப்பேர் பகுதியில் பெரும்பாலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. tamil nadu…

Read More

தேமுதிக பேரணிக்குத் திருப்பூரில் தடை

dmdk tirupur meeting தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டைக் கண்டித்து, திருப்பூரில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் உள்பட பல தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும், இந்த பாதிப்பினால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைவடைந்து வருவதாக  கூறி, தே.மு.திக சார்பாக கண்டன பொதுக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தே.மு.திக சார்பில் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் பேரணிக்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் நிறைந்த நகரமாக திருப்பூர் இருப்பதால், பேரணி நடத்த தே.மு.திகவிற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. dmdk tirupur meeting  

Read More