திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகபலியானார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர் கிராமப் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது கொடிக்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதால் திமுக கிளை நிர்வாகிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளை யொட்டி கொடிக்கம்பம், கல்வெட்டு இன்று திறக்கப்படுவதாக இருந்தது. அதற்கான ஆயத்த பணிகள் நேற்று இரவு நடந்தது. கட்சியின் தோரணங்கள், அலங்கார பணிகளும் செய்யப்பட்டு இருந்தது. நேற்று நள்ளிரவு மொளச்சூர் பகுதி 45வது வார்டு திமுக கிளைச் செயலாளரும், அரசு பேருந்து ஓட்டுநரும் ஏ.பாஸ்கர் (வயது 45), 12வது வார்டு கிளைச் செயலாளர் சி. முருகன் (வயது 45), 6வது வார்டு கிளைச்செயலாளர் டி.பாஸ்கர் (வயது 43) ஆகிய மூவரும் இரும்பினால் ஆன கொடிக்கம்பத்திற்கு கருப்பு-சிவப்பு வர்ணம் பூசி அந்த கொடிக்கம்பத்தை கல்வெட்டின் மீது பதிப்பதற்காக…
Read More மொளச்சூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து மூன்று பேர் பலிCategory: செய்தி சிறகுகள்
ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம்
ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வசதி துறை சார்ந்தோர், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எஃப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதிநிதிகளுடன் கலந்துகொண்ட கூட்டம் நேற்று தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்த வேண்டும் என்றும் கிலோ மீட்டர்களுக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவை அமல்படுத்துவது குறித்து இதில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மேலும் வரும் ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணமும் கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு தலா ரூ.10 கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதிக்குள் கட்டாயமாக அனைத்து…
Read More ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது அவசியம்குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் மக்கள் போட்டி போட்டு முன் பதிவு
இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் விளையும் துரியன் பழத்திற்கு மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். துரியன் பழம் சீசன் துவங்கியுள்ளதையடுத்து அதை வாங்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலை, காய்கறிகள், குறிப்பிட்ட வகை மலர்கள், பழங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் துரியன் பழத்திற்கு அதிக தட்டுப்பாடு. குன்னூர் அருகே உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் தனியார் பண்ணைகளில் துரியன் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரசு பண்ணையில் 31 துரியன் மரங்கள் இருந்தாலும் அதில் 15 மரங்கள் மட்டுமே கடந்த 2 ஆண்டுகளாக பழம் தருகின்றன. துரியன் பழம் உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். அதனால் குழந்தை இல்லாதவர்கள் துரியன் பழத்தை வாங்க…
Read More குழந்தை பாக்கியம் தரும் துரியன் பழம் மக்கள் போட்டி போட்டு முன் பதிவுகுற்றச் செயல்களில் ஈடு படும் சிறுவர்கள் தில்லியில் அதிகரிப்பு!!
இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறுவர்களே அதிகம் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டில் கொலை வழக்கில் 100 சிறுவர்களும், பலாத்கார வழக்கில் 60 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2011ம் ஆண்டைக் காட்டிலும் மிக அதிகம் என்றும், ஆனால், பீகார், மகாராஷ்டிர மாநிலங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, 74 சிறுவர்கள் கொலை முயற்சி வழக்கிலும், 18 பேர் ஆட்கடத்தல் வழக்கிலும், 10 பேர் பலாத்கார முயற்சி வழக்கிலும், 13 பேர் கொள்ளையடித்த வழக்கிலும் கைதாகியுள்ளனர். பல்வேறு குற்றச் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அதிகமாக உள்ள மாநிலங்களின் வரிசையில், ஆந்திரம், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவை முன்னணியில்…
Read More குற்றச் செயல்களில் ஈடு படும் சிறுவர்கள் தில்லியில் அதிகரிப்பு!!பா.ஜ.க கூட்டணி பற்றி முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது": நித்ஷ்குமார்
பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டதற்கு கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு வலுத்து வருகிறது, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் . அத்தோடு பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகவும் முடிவு செய்துள்ளது. அவ்வாறு விலகினால் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கும் அளிக்கும் ஆதரவை பா.ஜனதா விலக்கிக் கொள்ளும். இருந்தும் கூட்டணியை இழக்க மனமில்லாத பா.ஜனதா, நிதிஷ் குமாரை சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரை அத்வானி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மோடி பிரச்சாரக்குழு தலைவராக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார், பிரதமர் வேட்பாளராக அவரை நியமிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் நிதிஷ்குமார் சமாதானம் அடையவில்லை. இருந்தாலும் எந்த…
Read More பா.ஜ.க கூட்டணி பற்றி முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது": நித்ஷ்குமார்கவிஞர் வாலி உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகில் போற்றப்படும் கவிஞர் வாலி வியாழன் அன்று உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளனர். கவிஞர் வாலி அவர்கள் வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டும்மல்லாமல், இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர். 50ஆண்டுகள் கடந்து இன்றும் திரையுலகில் பாடல் எழுதுபவர் என்பதினால் வாலிப கவிஞர் வாலி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர். எந்த அரசியல்வாதியுடனும், இலக்கியவாதியுடனும், இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம். திரையுலகில் அனைவருக்கும் இனியவராக திகழ்பவர் வாலி. காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று…
Read More கவிஞர் வாலி உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதிகனிமொழி மாநிலங்களவை வேட்பாளர்?? திமுக அவசர கூட்டம்..
Kanimozhi the Rajyasabha Candidate of DMK 13 ஜூன் 2013 : சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழியை மீண்டும் போட்டியிட வைக்க முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக போட்டியிடும் பட்சத்தில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 23 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழகம், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Kanimozhi the Rajyasabha Candidate of DMK…
Read More கனிமொழி மாநிலங்களவை வேட்பாளர்?? திமுக அவசர கூட்டம்..116 வயது ஜப்பானிய மனிதர் ஜியிமொரோண் கிமறு காலமானார்.
Guinness World Record 116 years old Mr Kimura dead World’s oldest person dies aged 116 ஜிரோயிமொண் கிமறு அவர்கள் உலக சரித்திரத்தில் மிகவும் அதிகமான வயதான மனிதராக கடந்த டிசம்பரில் கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தவர் .1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தவர் . ஜிரோயிமொண் கிமறு ஓய்வுபெறும் வரை ஒரு உள்ளூர் தபால் அலுவலககத்தில் பணியாற்றினார். பின்னர் 90வயது வரை விவசாயத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். இவருக்கு 7 பிள்ளைகளும், 14 பேரப்பிள்ளைகளும், 25 பூட்டப் பிள்ளைகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவரது பூட்டப்பிள்ளைகளுக்கும் 15 குழந்தைகள் இருக்கின்றனவாம். ஜிரோயிமொண் கிமறு அவர்கள் கியூதாங்கோ க்யோட்டா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று இயற்கை மரணம் எய்தினார். According to Guinness World Records, Mr Kimura was the first man in…
Read More 116 வயது ஜப்பானிய மனிதர் ஜியிமொரோண் கிமறு காலமானார்.மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்
latest news bharatiya janata party L.K.Adwani quit all post in bjp பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கட்சியில் தனது அனைத்து பதிவிகளையும் ராஜினாமா செய்தார் இதனால் அக்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்தநிலையில் கூட்டணி கட்ச்சிகளும் பாஜக வில் இருந்து விலகும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது இதனால் பாஜக உடையும் நிலையில் உள்ளது. பாரதிய ஜனதாவின் லோக்சபா தேர்தலுக்கான தேசிய பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து அத்வானி இம்முடிவை எடுத்து உள்ளார் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி தமது கட்சிப் பதவிகள் அனைத்தையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது பாரதிய ஜனதாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கட்சி அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கிறது மற்றும் மூத்த தலைவர்களை வைத்து அத்வானியை சமாதானப் படுத்தும் பேச்சு…
Read More மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ராஜினாமா:பா.ஜ.க உடையும் அபாயம்உசிலம்பட்டி அருகே மாணவன் தலையில் செருப்பை வைத்த கொடுமை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் அருண். இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இந்த மாணவர் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது அருண்குமார் மட்டும் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த வேறு பிரிவைச் சேர்ந்த நிலமாலை என்ற நபர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காக திட்டியுள்ளார். பின்னர் ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார். இந்த தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தனது தாய் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று கேட்டதற்கு கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த…
Read More உசிலம்பட்டி அருகே மாணவன் தலையில் செருப்பை வைத்த கொடுமை