சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற யூன் 2ம் திகதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என்று நவாஸ் செரீப் விரும்புகிறார்.
நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார்.
பின்னர் ஜனாதிபதி ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார்.
தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாகிஸ்தான் திரும்பினார். ஆனால், அவரது கனவு பலிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட அவருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்தது.
மேலும் பெனாசிர் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் கைதாகி சிறை காவலில் உள்ளார். இந்நிலையில் அவர் தொடர்ந்து பாகிஸ்தானில் இருப்பது நவாஸ் செரீப்புக்கு பிடிக்கவில்லை.
எனவே, தான் பிரதமர் பதவி ஏற்கும் முன் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடு கடத்துவது குறித்த தனது முடிவை சமீபத்தில் தன்னை சந்தித்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அஷ்பாப் பர்வேஸ் கயானி முலம் முஷரப்பிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்
- நாகர்கோயில்:காதல் திருமணம் செய்த தங்கையை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
- குற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
- சங்கராபுரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: நவம்பர் 3 பேச்சுவார்த்தை, கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாநிலந்தழுவிய போராட்டம் என எச்சரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
← முந்தைய செய்தி: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட வாழ்க்கை திரைப்படமாகிறது
அடுத்த செய்தி →: விண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
