கர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது

நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சிகிச்சை போன்றவற்றிற்கான செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கூடிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளோம். இத்திட்டத்தின்படி பிரசவத்துக்கு முன் 7 முதல் 9 மாதங்கள் வரை அவர்களின் சிகிச்சை, நோய் அறிகுறிகளை அறிதல், மற்றும் போக்குவரத்து உணவு ஆகியவற்றுக்கான செலவுகளையும் மேலும் குழந்தை பிறந்த ஒராண்டு வரை நோய் ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்திரா காந்தி மாத்ருத்வ சஹயோக் யோஜனா திட்டத்தின்படி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின்போது மட்டுமே பயன்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அத்திட்டத்தை மேலும் தரம் உயர்த்த உள்ளோம்.…

Read More கர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது

தமிழக அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக  பாடசாலை கல்வி துறை வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. இந்த நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பாடசாலைக்கு செல்ல முடிவதில்லை. இதையடுத்து நாளைமுதல் (திங்கட்கிழமை) முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பாடசாலை துவங்கும், மாலை, 4:15க்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     Government school timing changed. Tamilnadu government இதையும் படியுங்கள் கர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது கிரிகெட் மினி உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம்…

Read More தமிழக அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்

சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம் அதிகம் .

pakistani black money in swiss banks சூரிச் : மக்கள் தொகையிலும்,  பரப்பளவிலும், தொழில்நுட்பத்திலும் மிக வேகமாக வளர்ந்துள்ள இந்தியாவை விட, பாகிஸ்தான் நாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமான தொகையை கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணத்தை விட, பாகிஸ்தானியர்கள் மற்றும் அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கில்தான் அதிகமான கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு ரூ.92000 கோடியாகும். சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு ரூ.9000 கோடியாக குறைந்துள்ளது. இது 2012ம் ஆண்டை விட 35 சதவீதம் அல்லது ரூ.4900 கோடி குறைவாகும். 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.14,000 கோடி இந்தியர்களின் சேகரிப்பில் இருந்த பணம் மூடப்பட்டுள்ளது.…

Read More சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம் அதிகம் .

சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 : மொகாடிசு : சோமாலியா தலைநகர் மொகாடிசுல் உள்ள முக்கிய ஐ.நா மையம் மீது   பயங்கரவாத தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்ட மையத்தின் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய தீவிரவாதிகள்  ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி படைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பேர் பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர் பாதுகாப்பு படையினர் அடங்குவர். இந்த தாக்குதலை ஐ.நா பொது செயலர் பான் கீ மூன் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுபேற்று அல் சபாப்  என்ற தீவிரவாத அமைப்பு,  அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சாத்தானிய சக்தியான ஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என…

Read More சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி

நாசாவில் புதிய 8 விண்வெளி வீரர்கள்: அதில் பாதி பேர் பெண்கள்

NASA announces 8 new astronauts : 4 Women ஹூஸ்டன்: அமெரிக்க விண்வெளி மையமான நாசாவில், சூரிய குடும்ப ஆராய்ச்சிக்காக புதிய தலைமுறை விண்வெளி ஆராய்சியாளர்கள் தேர்வு செய்ய பட்டுள்ளனர். அதில் 4 பேர் பெண்கள். முன்னதாக சுமார் 6000 விண்ணப்பங்கள் வந்த நிலையில், 8 பேர் மட்டுமே தெர்தெஉக்க பட்டனர். அதில் 4 பேர் பெண்கள் என்பது அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக அதிக அளவில் பெண்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை. நாசாவின் தலைமை நிர்வாகி திரு சார்லஸ் போல்டன் கூறுகையில், அமெரிக்காவின் இந்த புதிய முயற்சி வான்வெளியில் முன் எப்போதும் இல்லாத திடமான புதிய திட்டமாக திகழும் என குறிபிட்டுள்ளார். புதிய விண்வெளி ஆராய்சியாளர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கடுமையான பயிற்சி அளிக்கப்படும் என நாசாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. NASA announces 8 new astronauts English Summary: Nasa…

Read More நாசாவில் புதிய 8 விண்வெளி வீரர்கள்: அதில் பாதி பேர் பெண்கள்

தமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்

New Tamilnadu ministers of aiadmk  Government ஜூன்.18, சென்னை: தமிழக அமைச்சரவையில் சி.த.செல்லபாண்டியன் மற்றும் ஏ.முகமது ஜான் இருவரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். மேலும் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் எஸ்.அப்துல் ரகீம் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  இது குறித்து ஆளுநர் அலுவலக மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு பின் வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் ஏ.முகமது ஜான்  மற்றும் தொழிலாளர் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், ஆகியோர்  தமிழக அமைச்சரவரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், ஆவடி தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டு கழக  துறை பொறுப்பை எஸ்.பி.சண்முகநாதன் வகிப்பார். அவர் சுற்றுலாத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார். பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் பட்டியல்  மரபினர்  அயல்நாடு வாழ் இந்தியர்கள் அகதிகள் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக எஸ்.அப்துல்…

Read More தமிழக அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், முகமதுஜான் நீக்கம்

தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் முதல்வர் நடவடிக்கை

தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெயலலிதா நீக்கி, புதிதாக 2 பேரை நியமனம் செய்துள்ளார். இன்று முதல்வர் ஜெயலலிதா தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை, தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி(சேமிப்பு கிடங்கு கழகம்), வி.என்.ரவி(ஜவுளி கழகம்), பிரபாகர்(சிறுதொழில் மேம்பாடு), அருண்மொழித்தேவன்(சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன்(பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு) , ரவிச்சந்திரன்(வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன்(தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8…

Read More தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம் முதல்வர் நடவடிக்கை

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு

england prince william indian origin இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம் தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே இந்திய வம்சாவளி மரபணு உள்ள ஒருவர் முதன்முறையாக இங்கிலாந்து பிரிட்டன் மன்னராக வரவுள்ளார் என்று கூறபடுகிறது. ஆயினும் இந்த மரபணுக்கள் தாய்வழி சொந்தங்களில் மட்டுமே பரவும் காரணத்தால் வில்லியம்ஸ் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்படுகிறது. england prince william indian origin இதையும் படியுங்கள்…

Read More இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு

மோடியின் அடுத்த கட்ட வியுகம்: பா.ஜ.க. வின் தொகுதிகள் முதல் குறி

பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை நியமனம் செய்தது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியிலும், இந்திய அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் மோடி அடுத்த வியுகம் வகுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. முதல் கூட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை பட்டியலிட்டு வைத்திருக்கும் அவர், மஹாராஜ் கஞ்ச், டியோரியா, கோராக்பூர், குஷி நகர், வாரணாசி, பால்லியா, துமாரிகஞ்ச், பஹ்ரியாச், சுல்தான்பூர், லகிம்பூர், தவுர்ஹரா, லக்னோ உன்னாவ், கான்பூர், காசியாபாத், மீரட், ஆக்ரா உள்ளிட்ட 42 தொகுதிகளை சூறாவளி பிரசாரம் செய்வதற்காக தேர்ந்தெடுத்துள்ளார். 1998ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உ.பி.யில் உள்ள 80 தொகுதிகளில் 57 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. 2004 மற்றும் 2009…

Read More மோடியின் அடுத்த கட்ட வியுகம்: பா.ஜ.க. வின் தொகுதிகள் முதல் குறி

கேபினட் அமைச்சர்கள் சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ராஜினாமா

மத்திய  கேபினட் அமைச்சர்கள் ஜோஷி, அஜய் மக்கான் ஆகிய இருவரும் சனிக்கிழமை (15/06/2013) இரவு தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர். இவர்களது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் மத்திய அமைச்சரவை  திங்கட் கிழமை மாலையில் மாற்றியமைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி மாளிகை அதிகாரி தெரிவித்தார். கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று சி.பி. ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தரைவழி போக்குவரத்து மற்றும் ரயில்வே ஆகிய இரண்டு இலாக்காக்களை தன்வசம் வைத்திருந்தார். அஜய் மக்கான் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராக இருந்தார். கட்சிக்காக பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சரவை  நாளை மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 வது முறையாக மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இந்த முறை பிரதமர் மன்மோகன்சிங் இந்த வாய்ப்பை…

Read More கேபினட் அமைச்சர்கள் சி.பி. ஜோஷி, அஜய் மக்கான் ராஜினாமா