இந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை அமெரிக்கா உளவு

India, including the embassies of 38 countries watched the shocking secret U.S. intelligence have been reported. அமெரிக்கா: வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களை அமெரிக்க புலனாய்வுத் துறையினர் உளவு பார்த்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய எட்வர்டு ஸ்நோடென், தன் நாட்டு தேசிய பாதுகாப்பு அமைப்பின் அத்துமீறல் உளவு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் கடந்த மாதம் ஹாங்காங்குக்கு தப்பி வந்தார். அங்கு அந்த ஆவணங்களை உலகுக்கு வெளியிட்டார். இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால், ஹாங்காங்கில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அவர், ஈகுவடார் நாட்டிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது ரகசியமாக உள்ளது. சீனாவை, அமெரிக்கா உளவு…

Read More இந்தியா உள்பட 38 நாடுகளின் தூதரகத்தை அமெரிக்கா உளவு

விஜயகாந்துக்கு அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்

arrest warrant for Vijayakanth திங்கள், 1 ஜூலை 2013: சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அரசு அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று விஜயகாந்த் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இதனால், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை.  இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் இன்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட்…

Read More விஜயகாந்துக்கு அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்

வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை

velliappan murdered in vellore  திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 :  வேலூர் : இந்துமுன்னணி மாநிலச் செயலாளர்  சு.வெள்ளையப்பன் வேலூரில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டுள்ளார். இன்று மதியம் 3.15 மணியளவில்  வேலூர் பேருந்து நிலையம் அருகே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் அரசு உடமையாக்கப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பினர் கடந்த இரண்டு வார காலமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளையன் இன்று படுகொலை செய்யப் பட்டுள்ளார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்த்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்து முன்னணி மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பனை கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன…

Read More வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலர் கொலை

எய்ட்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை: உலக சுகாதாரக் கழகம்

AIDS HIV ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான புதிய வழிகாட்டு விதிகளை உலக சுகாதாரக் கழகம் அறிமுகப்படுத்துகிறது. எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க இந்த புதிய விதிமுறை உதவும் என அவர்கள் அது தெரிவிக்கிறது. ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்ட ஆரம்பத்தில் அதாவது நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த மாத்திரை ஒன்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என உலக சுகாதாரக கழகம் பரிந்துரைக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்று ஏற்பட்டு எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும். ஆனாலும் விலை மலிவான சிகிச்சையாகவே இந்த புதிய…

Read More எய்ட்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை முறை: உலக சுகாதாரக் கழகம்

"தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்

EC issues show cause notice to Gopinath Munde இந்திய நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்ற கோபிநாத் முண்டே, 2009 தேர்தலில் எட்டு கோடி ரூபாய் செலவு செய்து தான் தேர்தலில் வென்றதாக அண்மையில் ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவரது தேர்தல் செலவினங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது கோபிநாத் முண்டே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்த தேர்தல் செலவின அறிக்கையில் தனக்கு ரூ.20 லட்சத்துக்கும் குறைவாகவே செலவாகியிருந்ததாக கணக்கு காட்டியிருந்தார். வரம்பு மீறி தேர்தல் செலவு செய்தமைக்காக மஹராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கோபிநாத் முண்டேவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழனன்று மும்பையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த…

Read More "தேர்தல் செலவு எட்டு கோடி" பாஜக தலைவருக்கு நோட்டீஸ்

மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி

admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்   தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில்  அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…

Read More மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி

தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.

பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார். School timing change in madurai இதையும் படியுங்கள் மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி "தேர்தல் செலவு எட்டு கோடி"…

Read More தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.

ஸ்நொவ்டென் எச்சரிக்கை – சீனா உதாசீனம்

Edward Snowden பெய்ஜிங்: அமெரிக்காவின் தேச துரோகியாக கருதப்படும் எட்வர்ட் ஸ்நொவ்டெனனுக்கு அடைகலம் கொடுக்கவேண்டாம் என நேற்று அமெரிக்கா கேட்டுகொண்டிருந்த நிலையில், சீன கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் தொலைகாட்சியில் அவரை சிறந்த சிந்தனையாளர் என்றும் புரட்சியாளராகவும் சித்தரித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுடன் சுமுகமான உறவு நிலைக்கவேண்டுமெனில் ஸ்நொவ்டெனுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டாம் எனவும், அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்குமாறு சீனாவை அமெரிக்க வெள்ளைமாளிகை அறிக்கை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே… China’s state newspaper praises Edward Snowden for ‘tearing off Washington’s sanctimonious mask’ Edward Snowden இதையும் படியுங்கள் தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம். மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி தமிழகஅரசு என்.எல்.சி. பங்குகளை வாங்க தயார்: முதல்வர்.

Read More ஸ்நொவ்டென் எச்சரிக்கை – சீனா உதாசீனம்

தமிழகஅரசு என்.எல்.சி. பங்குகளை வாங்க தயார்: முதல்வர்.

tamilnadu government enterprises ready to buy NLC shares நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) 5 சதவீத பங்குகளை விற்பது குறித்து கடந்த பல ஆண்டுகளாக பேச்சுகள் இருந்தன. அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன். இந்த நிலையில், என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி கடந்த மே 23-ஆம் தேதி தங்களுக்கு கடிதம்…

Read More தமிழகஅரசு என்.எல்.சி. பங்குகளை வாங்க தயார்: முதல்வர்.

கிரிகெட் மினி உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை

india wins Cricket Mini world cup மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் பொட்டில் இந்திய அபார ஆட்டத்தினால் இங்கிலாந்தை 5ரன் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் ஆனது. 2002-ல் இலங்கையுடன் மினி உலகக் கோப்பையைப் பகிர்ந்து கொண்ட இந்தியா, முதல்முறையாக தனித்து கோப்பையை வென்றுள்ளது. பர்மிங்காம்மில் இறுதிப்போட்டியில்  இங்கிலாந்துடன் மோதிய இந்தியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி  சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கை பற்றியது, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று பிர்ப்பகல் 3.00 மணி அளவில் தொடங்குவதாக இருந்தது மழையின் காரணமாக நேரம் மற்றும் ஆட்ட நேரமும் குறைக்கப்பட்டது .டாஸ் வென்ற இங்கிலாந்து இந்தியாவை பட்டிங் செய்ய அழைத்தது. மழையின் காரணமாக ஆட்டம் துவங்குமா என்ற கேள்விக்குறி ஆனது. 5மணி நேரம் கழித்து ஆட்டம் துவங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ரசிகர்களும்…

Read More கிரிகெட் மினி உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை