போலி என்கவுன்ட்டர்: 13 போலீஸார் உள்பட 21 பேருக்கு ஆயுள் தண்டனை

13 Mumbai policemen get life imprisonment in fake encounter case மும்பை: ஜூலை 13, 2013: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கூட்டாளி என்ற சந்தேகத்தின் பேரில், 7 வருடங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த போலி என்கவுண்டர் தொடர்பிலான வழக்கு ஒன்றில், 13 போலீஸார்  உள்ளிட்ட 21 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்து மும்பை செஷன் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மும்பையை சேர்ந்த ராம் நாராயண் குப்தா என்பவர், மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு நெருக்கமானவர் எனக்கூறி 2006 இல் போலீசாரால்  என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு எதிராக அவரது சகோதரரும் வழக்கறிஞருமான ராம் பிரசாத் குப்தா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. போலி என்கவுண்டரில் தொடர்புடைய பிரதீப்…

Read More போலி என்கவுன்ட்டர்: 13 போலீஸார் உள்பட 21 பேருக்கு ஆயுள் தண்டனை

சீனாவில் தாய்ப்பால் விற்பனை

சீனாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. சீனாவில் ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன. இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர். தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர். இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது. இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு…

Read More சீனாவில் தாய்ப்பால் விற்பனை

இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்

தர்மபுரி மாவட்டத்தில் காதல் பிரச்சனையால் உயிரிழந்த இளவரசன் மரணம் தொடர்பான தகவல்களை மனித உரிமைக் கழகமானது புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டுள்ளது. விவசாய விடுதலை முன்னணி அமைப்பினர் துணையுடன் நடத்தப்பட்ட இந்த புலனாய்வு தகவலில், இளவரசன் உடலானது ரயில் தண்டவாளம் அருகே கிடந்துள்ளதால் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. ஒரு ரயிலின் முன்பு ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தர்மபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை பார்த்து வந்த கவுடு என்னும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கின்றார். மேலும்…

Read More இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்

திமுக பற்றி பருதி பேச்சு:மு.க.மணி எங்கே ?

கருணாநிதியின் தத்துப்பிள்ளை, மு.க.மணியை கண்டுபிடிக்க நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., அரசின், இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், அமைச்சர் வளர்மதி தலைமையில் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பரிதி இளம்வழுதி கருத்து வெளியிடுகையில், தி.மு.க.,வில் இருப்பது கும்பல், அ.தி.மு.க.,வில் இருப்பது கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும்; கூட்டம் நிலையாக நிற்கும். நானும் நிலையாக உங்களுடன் நிற்பேன். தமிழக அரசியலில், குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான், தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் தி.மு.க., வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக தி.மு.க.,விற்கு உழைத்தேன், நான் என்ன தவறு செய்தேன். 1991 – 1996ம் ஆண்டு தனி எம்.எல்.ஏ.,வாக சட்டசபையில் செயல்பட்டேன். நான் அப்போது, அ.தி.மு.க.,வில் சேர்ந்து இருந்தால், உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும்,…

Read More திமுக பற்றி பருதி பேச்சு:மு.க.மணி எங்கே ?

மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது

புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொது கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் கட்ஆப்  மதிப்பெண் வாங்கிய மாணவி தேஜல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார். இரண்டாவது இடம் வாங்கிய மாணவி அமிர்தசாய் தனியார் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார் . இன்றைய கலந்தாய்வுக்கு  698 மாணவ , மாணவியர் அழைக்கப்பட்டுள்ளனர். இதையும் படியுங்கள் திமுக பற்றி பருதி பேச்சு:மு.க.மணி எங்கே ? இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம் செகந்திராபாதில் இரண்டு அடுக்கு ஹோட்டல் இடிந்து விழுந்தது-6 பேர் பலி

Read More மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது

சிவகாசியில் 100 சவரன் நகை கொள்ளை

விருதுநகர் – சிவகாசியில் அச்சக உரிமையாளர் செந்தில் பாபு  வீட்டில் திருட்டு . செந்தில் பாபு  திருவனத்தபுரம்  சென்று இருந்த பொது இச்சம்பவம் நேரிட்டது. அவர் அடுக்கு மாடி குடிஇருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்தார் . அவரது வீட்டில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 40,000 ரொக்கம்  ஆகியவற்றை மர்ம நபர்கள்   கொள்ளை அடித்தனர். போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .     இதையும் படியுங்கள் செகந்திராபாதில் இரண்டு அடுக்கு ஹோட்டல் இடிந்து விழுந்தது-6 பேர் பலி மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது லோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே

Read More சிவகாசியில் 100 சவரன் நகை கொள்ளை

செகந்திராபாதில் இரண்டு அடுக்கு ஹோட்டல் இடிந்து விழுந்தது-6 பேர் பலி

ஆந்திராவின் -செகந்திராபாதில் இரண்டு அடுக்கு மாடிஹோட்டல்  இடிந்து விழுந்தது. சிட்டி லைட் ஹோட்டல்  செகந்திராபாதில் உள்ளது . இன்று அதிகாலை இந்த ஹோட்டல் திடீர்ரென இடிந்து விழுந்தது, இதில்ஆறு பேர் பலி . 40க்கும்  மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல். தீயணைப்பு  படையினர் சிக்கி இருப்போரை மீட்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளனர். இதையும் படியுங்கள் மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்கியது திமுக பற்றி பருதி பேச்சு:மு.க.மணி எங்கே ? சிவகாசியில் 100 சவரன் நகை கொள்ளை

Read More செகந்திராபாதில் இரண்டு அடுக்கு ஹோட்டல் இடிந்து விழுந்தது-6 பேர் பலி

லோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே

Anna Hazare accuses UPA of betrayal on Lokpal, threatens fresh stir புதுடெல்லி, ஜூலை 6– லஞ்சம், ஊழலை ஒழிக்க வகை செய்யும் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி பிரபல காந்திய வாதி அன்னாஹசாரே கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஊழலுக்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அன்னாஹசாரேக்கு ஆதரவு பெருகியது. ஊழலுக்கு எதிராக மக்கள் அலை, அலையாக திரள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு வேறு வழியில்லாமல் பணிந்தது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பாராளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்பால் உறுப்பினர்கள் மற்றும் செயல்படுத்தும் விஷயத்தில் அன்னா ஹசாரேக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து…

Read More லோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே

விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் காலமானார்

உலகத்தின் மிகச்சிறந்த விஞ்ஞானியும் கணினிக்கான மவுஸ்சை கண்டு பிடித்தவருமான  டக்ளர்ஸ் எங்கிள்பாட் தனது 88 வது வயதில் சிறுநீரக கோளாறால் கடந்த செவ்வாய் இரவு காலமானார் . விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் அமெரிக்காவைச் சேர்ந்தவர் . 1925-ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்த இவர் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் 1960-களில் பணியாற்றினார். அப்போது, கம்ப்யூட்டரை மனிதர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுசைக் கண்டுபிடித்தார். சான் பிரான்ஸிஸ்கோவில் 1000 விஞ்ஞானிகள் முன்னிலையில் மவுசை அறிமுகப்படுத்தி இவர் மணிக்கணக்கில் பேசினார். டக்ளர்ஸ் எங்கிள்பாட்தனது இரண்டாவது மனைவி காறின் ஓ லார்ரியுடன் வாழ்ந்து வந்தார், இவருடைய முதலாவது மனைவி பலாட் 1997 ல் மரணமடைந்தார்.இவருக்கு  கார்டா, டயானா, கிறிஸ்டீனா, நோர்மன் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர் .   Father of the computer mouse DOUGLAS ENGELBART died   இதையும் படியுங்கள் லோக்பால் விவகாரத்தில் துரோகம்.…

Read More விஞ்ஞானி டக்ளர்ஸ் எங்கிள்பாட் காலமானார்

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்

மதுரையில் இருந்து தினமும் காலை 6.55 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் வழக்கம் போல் புறப்பட்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் காலை 8.55 மணிக்கு திருச்சி வந்து 9 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இந்த நிலையில் காலை 8.45 மணிக்கு சென்னையில் உள்ள ரயில்வே உயர் அதிகாரி ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘திருச்சியில் இருந்து பேசுகிறேன். வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. 9 மணிக்கு வெடிக்கும்’ என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இச்செய்தி  உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில் வைகை எக்ஸ்பிரஸ் 8.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்ததுஉடனடியாக அனைத்து பயணிகளையும் கீழே இறங்கும்படி போலீசார் கூறினர். இதற்கிடையே பயணிகளுக்கு வெடிகுண்டு பற்றிய தகவல் தெரியவந்தது.…

Read More வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடி குண்டு மிரட்டல்