பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறல்: இந்திய ராணுவ அதிகாரி பலி

Pakistani troops opened persistent fire at a forward Indian post in Jammu & Kashmir and killed a junior commissioned officer (JCO).

08 June 2013: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மாண்டி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இளநிலை ராணுவ அதிகாரி (ஜே.சி.ஓ.) ஒருவர் உயிரிழந்தார்.

பூஞ்ச் மாவட்டம் மாண்டியை அடுத்த சாஜியான் பகுதியில் உள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். மாலை வரை நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது, லோனவாலி சாவடி மீது ஒரு ராக்கெட் தாக்கியது. அப்போது, அதிலிருந்து சிதறிய ஒரு பாகம், கர்வால் படைப்பிரிவைச் சேர்ந்த இளநிலை ராணுவ அதிகாரி (ஜேசிஓ) நைப் சுபேதார் பச்சன் சிங் மீது தாக்கியது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பச்சன் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலின்போது, பைகா வகை துப்பாக்கிகள், ராக்கெட் (ஆர்பிஜி) மற்றும் யுபிஜிஎல் உள்ளிட்ட நவீன தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றார் அந்த அதிகாரி.

 ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் கடந்த 15 நாள்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மூன்றாவது தாக்குதல் இது ஆகும். இதற்கு முன்பு, மே 24 ஆம் தேதி துத்மரி கலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பிரிகேடியர் மற்றும் 2 வீரர்கள் காயமடைந்தனர். 27ஆம் தேதியும் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இது இம்மாதத்தில் நடக்கும் மூன்றாவது தாக்குதலாகும். இந்த தாக்குதல், பாகிஸ்தான் தீவிரவாதிகளை உடுருவ செய்ய தந்திரமாக இந்திய ராணுவத்தை திசை திருப்ப நடக்கும் சதியாக இருக்ககூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் அப்பகுதி மட்டும் அன்றி எல்லையிலுள்ள ஏனைய பகுதியிலும் தீவிரவாதிகள் உடுருவல் நடந்திருக்கிறதா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையேயான, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, நேற்று நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு, இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Pakistani troops opened persistent fire at a forward Indian post in Jammu & Kashmir and killed a junior commissioned officer (JCO).

Buying and selling Properties made easy by Best squarefeet.com

Related posts