தங்கம் வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்காதீர்கள் : வங்கிகளுக்கு ப.சிதம்பரம் அறிவுரை

banks to advise their customers not to buy gold but to invest in financial assets : PC Chidambaram 07 ஜூன் 013: மும்பை: வாடிக்கையாளர்களை தங்கம் வாங்க, ஊக்கபடுத்த வேண்டாம் என வங்கிகளுக்கு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு நேற்று முன்தினம் இரவு அதன் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக திடீரென்று உயர்த்தியது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. வெளி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் அன்னிய நாணய மதிப்புக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அன்னிய நாணய மதிப்புக்கும் உள்ள வித்தியாசமே நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகும். இதனிடையே, தங்கம் மீதான சுங்க வரி உயர்வால் எந்த பயனும் இருக்காது, அதன் விலை உயர்வுக்கு தான் வழி வகுக்கும் என்றும், உலக தங்க கவுன்சில் (இந்தியா)…

Read More