Prime minister Manmohan singh appointed a committee for the independence of CBI and its functional autonomy உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, சிபிஐ-க்கு அரசியல் தலையீடு இல்லாத சுய அதிகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை குழு வை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார். நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சரவை குழுவில் வி. நாராயண சாமி, பில் சிபல், மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சிறப்பு அழைப்பாளராக இக்குழுவில் இடம்பெறுகிறார். முன்னதாக நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வாங்கி பார்வையிட்டு, அதில் திருத்தம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம், சிபிஐ, எஜமானரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்படும் ஒரு கூண்டுக்கிளி போல் உள்ளதாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. Prime minister Manmohan singh appointed a committee for the…
Read MoreYou are here
- Home
- india cbi