Manmohan Singh files Rajya Sabha nomination
கவுகாத்தி 16 மே 2013: பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அசாமில் நேற்று மனு தாக்கல் செய்தார்.அசாம் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவருடைய எம்.பி. பதவிக்காலம், வரும் ஜூன் 14ம் தேதியுடன் முடிகிறது. ஆகையால், பிரதமர் பொறுப்பு எற்ற இடம் உள்ளிட்ட காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் இம்மாதம் 30ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் போட்டியிடுவதற்கான மனுவை, அசாம் சட்டப்பேரவை செயலாளரிடம் நேற்று தாக்கல் செய்தார். அவர் நேற்று காலை சிறப்பு விமானம் மூலம் அசாம் – கவுகாத்திக்கு வந்தார்.
மனு தாக்கலின் போது அவருடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் புவனேஸ்வர் கலிதா, மாநில முதல்வர் தருண் கோகய், மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர். அங்கு, பத்திரிகையாளர்களுக்கு புகைப்படம் எடுக்கவோ, செய்தி சேகரிக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து, சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியே பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதை சமாதானபடுத்தும் வகையில், தருண் கோகய், காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் ஆகியோர் வெளியே வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
பின்னர், பத்திரிக்கை நிருபர்களிடம் பேசிய மன்மோகன், ‘கடந்த 21 ஆண்டுகளாக அசாமில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாக உள்ளேன். நான் எம்.பி.யாக தேர்வாக, அசாம் மக்கள் எனக்கு மாபெரும் உதவியை செய்துள்ளனர். அசாமின் முன்னேற்றத்திற்காக நடவடிக்கைகளை எடுப்பேன்’’ என்றார்.
Manmohan Singh files Rajya Sabha nomination
Real estate Chennai: Property for sale:
Please click the image given below