Real estate Regulations in India நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து பல ஆயிரம் கோடிரூபாய் புழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை படுத்த மசோதா ஒன்றை மக்களவையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முக்கியமாக பொதுமக்களை மோசடிகளில் இருந்து காப்பற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். இதில் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது கட்டுமான திட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே வீட்டு மனையோ, வீடுகளோ விற்கப்பட முடியும். ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் வீட்டை கட்டி தரவில்லை என்றால், அதன் மீது ஆணையம் அபராதம் விதிக்க முடியும். முக்கிய அம்சங்கள் வருமாறு: * ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். * ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு…
Read More ரியல் எஸ்டேட் மசோதா. பில்டர் தவறு செய்தால் 3 ஆண்டு சிறை!!Category: செய்தி சிறகுகள்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்!!
Right To Information Act in India : Political parties under the Right 2013 ஜூன்.4 : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு எவ்வளவு நிதி உள்ளது மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தகவல்களை இந்த சட்டத்தின் கீழ் மக்கள் பெறலாம் என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு கூறியுள்ளது. முன்னதாக சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மனு ஒன்றை அளித்திருந்தார்கள். சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தம் என்ற அமைப்பை சேர்ந்த அனில் பெய்ர்வால் ஆகியோர் மத்திய தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு : காங்கிரஸ், பா.ஜ., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய தேசிய கட்சிகள் ஏராளமாக நன்கொடைகள் பெறுகின்றன. இந்த நன்கொடைகள் யார் யாரிடமிருந்து கிடைத்தன…
Read More தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகள்!!தந்தை – மகன் ரஷியக் கதை: முதல்வர் ஜெ.ஜெயலலிதா.
russian story by j.Jayalalitha ஸ்ரீரங்கம், 2013 ஜூன்.4 – : தி.மு.க., தலைவர் கருணாநிதியையும், அவரது மகன் ஸ்டாலினையும், கடுமையாகச் சாடி, ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாவில், குட்டிக் கதை கூறி முதல்வர் ஜெயலலிதா பேசினார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு:- சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நான் அறிவித்து வருகிறேன். இதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக தலைவர் கருணாநிதி, இவையெல்லாம் வெறும் அறிவிப்புகள் என குதர்க்கமாகத் தெரிவித்தார். அவரது மகன் மு.க. ஸ்டாலின் “இது 110 ஆட்சி’ என்று கூறி “இதில் 50 சதவீதத்தையாவது நிறைவேற்ற முடியுமா?’ எனக் கேட்கிறார். இதில் எதையுமே நிறைவேற்ற முடியாது என்று பொருள்படவும் பேசி மக்களை ஏமாற்றி வருகிறார். விதி 110-ன்…
Read More தந்தை – மகன் ரஷியக் கதை: முதல்வர் ஜெ.ஜெயலலிதா.சேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதி
sethusamudram shipping canal project karunanidhi birthday மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன் 2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.…
Read More சேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதிஐ பி எல் போட்டியால் அவமானம் தான் வருமானம்: ரணதுங்கா
sri lankan cricketer ranathunga ஐ.பி.எல் தொடரால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானம் தான் கிடைத்தது என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார். சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிக்சிங் செய்த வீரர்கள் புக்கிகள் என்று பலர் கைதாகினர். இத்தொடர் குறித்து மக்களிடம் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையின் ரணதுங்கா கூறுகையில், ஐ.பி.எல் தொடரில் பிக்சிங் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடையவில்லை. ஏனெனில், இம்மாதிரியான சம்பவங்கள், தொடக்கத்தில் இருந்தே நடந்து கொண்டுள்ளன. இத்தொடரால் ஊழல் அதிகரிக்கும் என, ஐ.சி.சி., ஊழல் தடுப்பு அதிகாரி பால் கான்டன், 2008 ம் ஆண்டில் எச்சரித்தார். அவர் சொன்னது போலவே, ஒவ்வொரு ஆண்டும் பெட்டிங், பிக்சிங், போதை என்று ஏதாவது ஒன்று நடக்கத்தான் செய்கிறது. ஐ.பி.எல் தொடரால், இந்திய கிரிக்கெட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. உலக கிரிக்கெட்டுக்குத் தான்…
Read More ஐ பி எல் போட்டியால் அவமானம் தான் வருமானம்: ரணதுங்காஅல் கொய்தா ரகசிய விஷவாயு தொழிற்சசாலை ஈராக்கில் கண்டுபிடிப்பு
al qaeda chemical weapons factory in iraq ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அல்கொய்தா இயக்க தீவிரவாதிகள் ரகசியமாக நடத்தி வந்த விஷ வாயு தயாரிப்பு தொழிற்சாலையை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். சரின், கடுடு வாயு உள்ளிட்ட ரசாயன விஷவாயுக்கள் பாக்தாத்தில் இயங்கி வந்த 2 தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாகவும் ஈராக் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் முஹம்மது அல் அஸ்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தொழிற்சாலையில் கைப்பற்றப்பட்ட உபகரணங்களையும், கைது செய்யப்பட்டவர்களையும் நிருபர்களுக்கு காட்டிய அவர், இங்கு தயாரிக்கப்பட்ட விஷவாயுவை பயன்படுத்தி ஈராக், ஐரோப்பியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளின் மீது விஷ வாயு தாக்குதலை நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும் கூறினார். ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் விமானங்களின் மூலம் மக்கள் அதிகமாக வசிக்கும்…
Read More அல் கொய்தா ரகசிய விஷவாயு தொழிற்சசாலை ஈராக்கில் கண்டுபிடிப்புபெங்களூரில் வரலாறு காணாத மழை 122 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ பதிவு
Heavy rain in bangalore பெங்களூரில் 122 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மட்டும் 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தென் மேற்கு பருவக் காற்று ஜூன் 2-ம் திகதி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரில் மே 30, 31 ஆகிய திகதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, சனிக்கிழமை அதிகாலை வரை பெய்தது. சனிக்கிழமை காலை(ஜூன் 1) எடுக்கப்பட்ட மழை அளவுப்படி, பெங்களூரில் 100 மி.மீ மழை பெய்துள்ளது. பெங்களூரில் கடந்த 1891-ம் ஆண்டு, ஜூன் 16-ம் திகதி எடுக்கப்பட்ட மழை அளவின்படி, பெங்களூரில் 101.6 மி.மீ மழை பதிவானது. இதுவே பெங்களூரில் ஜூன் மாதங்களில் பெய்த மழையில் அதிக அளவாகும். 122 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை(ஜூன் 1) 100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது…
Read More பெங்களூரில் வரலாறு காணாத மழை 122 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ பதிவுதமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு
new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி,…
Read More தமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்புதமிழக மக்கள் தொகை 7கோடியை தாண்டியது-சென்னை முதலிடம்
Tamilnadu Population 2013 தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டி உள்ளது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தமிழ்நாடு பிரிவு இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இதுகுறித்து கிருஷ்ணாராவ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்களும், 19 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர் ஆண்கள், 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர் பெண்கள். கடந்த 10 ஆண்டுகளில் (2001-2011) தமிழகத்தில் மக்கள் தொகை…
Read More தமிழக மக்கள் தொகை 7கோடியை தாண்டியது-சென்னை முதலிடம்எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : 9 மாணவிகள் முதலிடம்
sslc results exam 2013 தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ-மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள…
Read More எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் : 9 மாணவிகள் முதலிடம்