பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு

India refusal to negotiate with Pakistan

இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்தும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அக்பருதீன் இதனை தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என்று கூறிய அவர், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற தனது வாக்குறுதியை அந்த நாடு காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில்தான் இந்தியாவின் கவனம் உள்ளது என்றும் அக்பருதீன் தெரிவித்தார்.

முன்னதாக, அடுத்த மாதம் நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொது அவை கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்திருந்தார். எனினும் சண்டை நிறுத்த ஒப்ந்தத்தை மீறும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருவதால் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது.

India refusal to negotiate with Pakistan

Real estate company Chennai: http://www.bestsquarefeet.com/

Related posts