actor ajith cyber crime movie
நடிகர் அஜித் நடிக்கும் 53வது படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குலு-மணாலியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இன்னும் பெயர் வைக்கபடாத இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படம் என்பதால் எதிர்பார்பிற்கு பஞ்சம் இல்லை. சைபர் க்ரைம்மை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படம், பில்லா படத்திற்கு பிறகு விஷ்ணுவர்த்தன் அஜித் யுவன்ஷங்கர்ராஜ இணையும் படம் இது கண்களுக்கும் காதுகளுக்கும் இனிமையை கண்டிப்பாக தரும் என்பது இயக்குனரின் கருத்து. இம்மாதம் 15ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது, விஷ்ணுவர்த்தன், அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் கோலிவுட் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது