சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை 4 வயது சிறுமி! கழிவறை வாளிக்குள் இருந்து சடலமாக மீட்பு பாலியல் கொலை தனியாக வீட்டில் 4 வயது மகளை விட்டுச்சென்ற தாய், திரும்பி வந்த போது மகளை சடலமாக காண வேண்டிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. தன் மகள் பாலியல் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அந்த தாய்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. “சென்னையையடுத்த, திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கணவர் பணிக்குச் சென்றுவிட, அவரது மனைவி, 4 வயது மகள், 8 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். மாலை நேரத்தில் மகனை டியூசனுக்கு அழைத்துச்…
Read Moreமுகிலனை 8 வார அவகாசத்தில் மீட்க வேண்டும், சிபிசிஐடிக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம்
காணாமல் போன சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்கும் சிபிசிஐடி காவல்துறை சரியாக பாதையில் சென்று போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முகிலனை மீட்பதற்காக மேலும் எட்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுசுழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தர கோரி ஹென்றி திபேன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூன் 6ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் மாயமானது தொடர்பான வழக்கில் முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக, சிபிசிஐடி தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி…
Read Moreசட்ட விரோத பேனர்களை அகற்ற தமிழக அரசு தவறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
சென்னை:சட்ட விரோத பேனர்களை அகற்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த தவறிவிட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் கோரியதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் கால அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.அரசு தலைமை வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகி சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read Moreபீகாரில் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பீகார்:பீகாரின் மூசாம்பூரில் பல குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.இந்த மூளைக்காய்ச்சலால் 150 குழந்தைகளுக்கு மேல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது சம்மந்தமாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா ,பி ஆர் கவை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .இந்த வழக்கில் மாநில மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக பதில் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுக்கு இன்னும் ஏழு நாட்கள் அவகாசம் உள்ளது.
Read Moreவழக்கறிஞரை தாக்கியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: டிஐஜி அதிரடி உத்திரவு
திண்டுக்கல்: திருவண்ணாமலையில் மதுரையை சேர்ந்த மனோஜ்குமார் (30) காவலராக பணியாற்றுகிறார். அவர் தனது தங்கையின் தோழி சத்யாவை (26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 3 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து சென்றார்.திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது காதலியை சேர்த்து வைக்குமாறு மனோஜ்குமார் மனு அளித்தார். இதனால் பிரிந்த காவலர் மனோஜ்குமார் – சத்யா ஜோடிக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி கவுன்சலிங் நடத்தினர்.பெண் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் தியாகு காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞர் தியாகு இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர் தியாகுவை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த தியாகுவை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் வசந்தியை கைது செய்து, சஸ்பெண்ட்…
Read Moreநீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை :அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது .அரசு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.தமிழக அரசு இழப்பீடு மற்றும் மாணவிகளின் தற்கொலை விவரங்களையும் அறிக்கையாக 2 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
Read Moreதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்தது செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு 35 பேர் விண்ணப்பித்தனர். அதில் பாலசுப்ரமணியன் மற்றும் கணேசன் ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர். பிறகு இவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு சுப்பிரமணியனை துணைவேந்தராக நியமிக்க உத்தரவிட்டனர்.கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் , முறையான தேர்வு நடத்தி தகுதியான துணைவேந்தரை நியமனம் செய்ய கோரி கணேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு அண்மையில் நீதிபதி வி.பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தகுதியின் அடிப்படையிலேயே நியமனம் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Read Moreநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு
Nadigar Sangam Election 2019: சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் இந்த மாதம் (ஜூன்) 23ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்தத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற இருந்த இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டி யிட இருந்தன. இந்த நிலையில் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதற்கிடையில் பாண்டவர் அணியின் நடிகர்கள் விஷால், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்கள். “நடிகர் சங்க தேர்தல்…
Read Moreவைகோ மீதான தேச துரோக வழக்கு ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர் இந்திய அரசுக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரிக்கவும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை 2009ல் ஆயிரம்விளக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கின் தீர்ப்பு வருகின்ற ஜூலை மாதம் ஐந்தாம் தேதி என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read Moreமருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி இறந்தார்.பிறகு நோயாளியின் உறவினர்கள் 2 பயிற்சி மருத்துவர்களை தாக்கினார்கள் .இதனால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று கொல்கத்தாவில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Read More



