நீட் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார். பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தமிழக அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது .அரசு உரிய பயிற்சி அளிக்கவில்லை என்றும், அதனால் சில மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் குடும்பங்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கியுள்ளதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.தமிழக அரசு இழப்பீடு மற்றும் மாணவிகளின் தற்கொலை விவரங்களையும் அறிக்கையாக 2 வாரங்களில் தாக்கல் செய்ய நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

Related posts