வழக்கறிஞரை தாக்கியதால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: டிஐஜி அதிரடி உத்திரவு

திண்டுக்கல்: திருவண்ணாமலையில் மதுரையை சேர்ந்த மனோஜ்குமார் (30) காவலராக பணியாற்றுகிறார். அவர் தனது தங்கையின் தோழி சத்யாவை (26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 3 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக சத்யா பிரிந்து சென்றார்.திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது காதலியை சேர்த்து வைக்குமாறு மனோஜ்குமார் மனு அளித்தார். இதனால் பிரிந்த காவலர் மனோஜ்குமார் – சத்யா ஜோடிக்கு திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி கவுன்சலிங் நடத்தினர்.பெண் தரப்பில் சீலப்பாடியை சேர்ந்த வழக்கறிஞர் தியாகு காவல் நிலையத்திற்கு வந்திருந்தார்.காவல் ஆய்வாளர் மற்றும் வழக்கறிஞர் தியாகு இடையே வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர் தியாகுவை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த தியாகுவை அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் வசந்தியை கைது செய்து, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறி பல வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.பிறகு வழக்கறிஞர் தியாகு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் எஸ்பி சக்திவேல் சென்று வழக்கறிஞர்களிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.இதனால் இன்ஸ்பெக்டர் வசந்தியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டார்.மேலும் காவல் ஆய்வாளர் வசந்தியை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி ஜோஷி நிர்மல் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த தகராறுக்கு இடையே காதல் ஜோடி இணைந்து வாழ்வதாக உறுதி மொழி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts