குஜராத் மாநிலத்திலுள்ள 17 மாடி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

Major fire in Surat commercial building

Major fire in Surat commercial building
Major fire in Surat commercial building

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பார்வத் பாட்டியா என்ற பகுதியில் உள்ள 17 மாடி வணிக வளாகக் கட்டடத்தில் இன்று காலை 9 மணியளவில் தீ பிடித்தது. இது சிறிது சிறிதாக மற்ற தளங்களுக்கும் பரவி பயங்கர தீ விபத்தாக மாறியது.

டெக்ஸ்டைல் ஏற்றுமதி கடையின் குடோனாக இருந்த கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து தீ வேகமாகப் பரவியது. முதலில் கரும்புகை எழுந்து, பிறகு கட்டடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து நிகழ்ந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்தோ, காயம் குறித்தோ இதுவரை எந்த தகவலும் இல்லை.

Major fire in Surat commercial building

Fire broke out at Vipul Sarees’ shop located on the fourth floor of the 17-story Orchid Tower in Surat and quickly spread to other floors. Orchid Tower is located in the textile Market area of the city and houses gowdowns and offices of cloth merchants.

Related posts