one more dead steam pipeline explosion at nlc
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த விபத்தில், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்தார்.
சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பயனளிக்காமல் சிவலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் உயிரிழந்தார்.
மேலும், படுகாயமடைந்த இருவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆம் தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில், சம்பவ இடத்திலேயே பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களில் மூவருக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். விபத்தை தொடர்ந்து, அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அங்கு பணிப்புரியும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடவும், ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
One person died on Thursday in Chennai hospital, in the Neyveli Lignite Corporation (NLC) sustained burns after the steam pipeline exploded due to heavy pressure on May 20.