சென்னையில் தொடரும் சிறுமி பாலியல் வன்கொடுமை 4 வயது சிறுமி! கழிவறை வாளிக்குள் இருந்து சடலமாக மீட்பு
பாலியல் கொலை
தனியாக வீட்டில் 4 வயது மகளை விட்டுச்சென்ற தாய், திரும்பி வந்த போது மகளை சடலமாக காண வேண்டிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. தன் மகள் பாலியல் கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அந்த தாய்க்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“சென்னையையடுத்த, திருமுல்லைவாயிலில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகில் உள்ள அந்தோணி நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கணவர் பணிக்குச் சென்றுவிட, அவரது மனைவி, 4 வயது மகள், 8 வயது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார்.
மாலை நேரத்தில் மகனை டியூசனுக்கு அழைத்துச் சென்ற தாய், சிறுமியை வீட்டில் தனியாக விட்டுச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. தகவலறிந்து வந்த கணவர், மனைவியுடன் சேர்ந்து சிறுமியை தேடியபோது, வீட்டின் கழிவறையின் ஒரு ஓரத்தில் கண்ட காட்சியால் அப்படியே உறைந்து போயுள்ளனர்.
அதன் பின்னர் வாளிக்குள் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது சிறுமி உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம்
மேலும் மகளை பறிகொடுத்த தம்பதியின் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர் மீனாட்சி சுந்தரம் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்து வந்தனர். அப்போது விசாரணையில், குழந்தையின் பெரியப்பாவே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. 60 வயதான அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 Years old Girl child sexual abused and Killed in chennai Thirumullaivoyal
இதையும் படியுங்கள்
- ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- தலைக்கவசம் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு
- பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவு:சென்னை உயர்நீதிமன்றம்
- உறவு முறிந்ததால் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு ஆகாது: வயது வந்தோரின் தேர்வுகளில் தார்மீகத் தீர்ப்பு கூடாது – உச்ச நீதிமன்றம்
- இறைச்சிக் கூடங்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே விதிமுறை: காயல்பட்டினம் நகராட்சி வழக்கில் பசுமைத் தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்
- ஆதாரம் இல்லாமல் ஊகத்தின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யலாமா? பெரியார் பல்கலைக்கழக ஊழியர் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?
- கோயில் இனாம் நிலத்தை அரசுக்குப் பரிசாக எழுதித் தருவது செல்லுமா? கொடுமுடி வட்டாட்சியர் அலுவலக வழக்கில் உச்ச நீதிமன்றம் விளக்கம்
← முந்தைய செய்தி: முகிலனை 8 வார அவகாசத்தில் மீட்க வேண்டும், சிபிசிஐடிக்கு அவகாசம்: உயர்நீதிமன்றம்
அடுத்த செய்தி →: பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவு:சென்னை உயர்நீதிமன்றம்

