சென்னை: தமிழகத்தில் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த காலி இடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ,வருவாய்த்துறை செயலாளர்,வருவாய் நிறுவாகத்துறை ஆணையர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி.
Read Moreமகள் திருமண ஏற்பாட்டுக்காக நளினிக்கு ஒரு மாதம் பரோல்:சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.
Read Moreமு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை:கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில் ஸ்டாலின் நாளை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அரசு வழக்கறிஞர் வழக்கு தொடர முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது.
Read Moreவிபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கில் விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரிக்கு அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை:திண்டிவனத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்த யுவஸ்ரீ பள்ளி வாகனம் ஏறி பலியானார்.பள்ளி வாகனம் ஏறி பலியான சிறுமிக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தாய் அஞ்சலி தேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இழப்பீடு தொகை தொடர்பாக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகையாக தலா 10 ஆயிரம் விதிக்கப்பட்டது.
Read Moreதண்ணீர் லாரிகளை கட்டாயமாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:இளையராஜா என்பவர் வழக்கு நங்கநல்லூரில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக லாரிகள் மூலம் விற்பனை செய்து வருவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.இந்த வழக்கு வழக்கு விசாரணைக்கு வந்தது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. நீரை எடுத்து வழங்குவதற்கு லாரிகளின் உரிமம் விவரங்களை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்துள்ளது. விவரங்களை வழங்க மறுத்தால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தண்ணீர் லாரிகளை கட்டாயமாக பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read Moreதனியார் கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் எஸ்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில் தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது.அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்த குழு கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தது.ஆய்வு செய்த பிறகு குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.பிறகு கல்லூரி நிர்வாகம் அறிக்கையை கொடுத்தது. அறிக்கை தெளிவாக இல்லை என கூறி எம்.இ பட்ட மேற்படிப்புக்கு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்டது.மேலும் பி.இ இயந்திரவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை 25 சதவீதம் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது என கூறி கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
Read Moreஆறு வாரகால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதிமன்றம் நாளை திறக்கப்படவுள்ளது.
டெல்லி:கோடை விடுமுறையால் உச்சநீதிமன்றம் ஆறு வாரம் திறக்கப்படவில்லை.கோடை விடுமுறைக்கு பின் நாளை அதாவது ஜூலை 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கீழ் இயங்கும் 31 நீதிபதிகளும் கோடை விடுமுறை முடிந்து நாளை பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.உச்சநீதிமன்றம் தொடங்கியவுடன் பல முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Moreதலைக்கவசம் விதிமீறல்: காவலர்கள் மீது உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு
சென்னையில், தலைக்கவசம் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கட்டாய தலைக்கவச சட்டம் கட்டாய தலைக்கவச சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக் கோரும் வழக்கில், இருசக்கர வாகன விபத்துகளில் தலையில் காயமுற்று உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு ஏற்கெனவே ஆணையிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை எனில், 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன்…
Read Moreஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமனறத்தில் பாலமுருகன் அ.ம.மு.க ( கடலூர் மாவட்ட செயலாளர்) மனுதாக்கல் செய்தார் .இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால் , திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்க காரணம் போக்குவரத்து இடையூறு என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்று மனுதாரர் தரப்பு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
Read Moreபள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரிய வழக்கில் போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க உத்தரவு:சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: வழக்கறிஞர் ரங்கநாயகி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.அண்ணாநகரில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு எதிரே நடை மேம்பாலம் அமைக்க கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வு விசாரித்தது .ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்து காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More



