சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் எஸ்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில் தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது.அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயித்த குழு கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தது.ஆய்வு செய்த பிறகு குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் கொடுத்தனர்.பிறகு கல்லூரி நிர்வாகம் அறிக்கையை கொடுத்தது. அறிக்கை தெளிவாக இல்லை என கூறி எம்.இ பட்ட மேற்படிப்புக்கு இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துவிட்டது.மேலும் பி.இ இயந்திரவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை 25 சதவீதம் குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது என கூறி கல்லூரி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
தனியார் கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த நடவடிக்கை சரியானது – சென்னை உயர்நீதிமன்றம்
