Lankan army illegally encroaching lands of Tamils 26 ஏப்ரல் 2013: இலங்கையில் தமிழர் நிலங்கள் சிங்கள ராணுவத்தால் பறிக்கப்படுவதை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக துபாயில் இருந்து 19 ஈழத் தமிழர்களை கொழும்புவுக்கு அனுப்பாமல் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்து,இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:- இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் அளவு கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழர்களுக்குச் சொந்தமான 6,381 ஏக்கர் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 1990-ம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது முதல் தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கையில் போர் முடிவுற்ற பின்பும், அந்த நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைக்கப் படவில்லை. தற்போது சிங்கள ராணுவமே அந்த நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கான உத்தரவினை சிங்கள அரசு பிறப்பித்துள்ளது.…
Read Moreசென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடங்குகிறது
Chennai-Bangalore double decker train service begins பெங்களூர்: 26 ஏப்ரல் 2013: சென்னை பெங்களூர் டபுள் டெக்கர் ரயில் சேவை தொடக்கம். சென்னை – பெங்களூர் இடையே இரட்டை அடுக்கு ஏசி ரயில் சேவை நேற்று (26 ஏப்ரல் 2013) துவங்கப்பட்டது. முன்னதாக இந்த சேவை கடந்த மாதம் 25ம் தேதி (25 ஏப்ரல் 2013) துவங்கப்பட திட்டமிடப்பட்டு ஒரு மாதம் தாமத்திற்கு பிறகு துவங்கியது. தென் மேற்கு ரயில்வே (South western Railway) அறிக்கையின் படி, தினசரி சுப்பர் பாஸ்ட் (superfast) எக்ஸ்பிரஸ் காலை 7.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் வந்தடையும். திரும்ப, அது மதியம் 2.40 மணிக்கு பெங்களூரில் இநருந்து புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். Chennai-Bangalore double decker train service begins English Summary: The Chennai-Bangalore air…
Read Moreபிரபல நடிகர் "பவர் ஸ்டார்" ஸ்ரீனிவாசன் கைது.
Tamil actor Powerstar Srinivasan arrested சென்னை 26 ஏப்ரல் 2013: பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது. ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சார்ந்த P.S.ரங்கநாதன் என்பவர் பண மோசடி சம்பந்தமாக அளித்த புகாரின் பேரில்.வெள்ளி மலை ஸ்ரீனிவாசனை (50) கைது செய்ததாக சென்னை போலீஸ் வட்டாரம் தெரிவித்தது. பிரபல நடிகர் “பவர் ஸ்டார்” ஸ்ரீனிவாசன் கைது. மேலும் சுமார் 20 கோடி ருபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அதற்கு கமிஷனாக ருபாய் 50 லட்சம் பெற்று வங்கி கடனும் வாங்கித்தராமல் பெற்ற கமிஷனையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் செய்யபட்டுள்ளது. திரு.மணிகண்டனின் இயக்கத்தில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்ற தமிழ் படத்தின் மூலம் உலகம் முழுவதிலும் பிரபலம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. Tamil actor Powerstar Srinivasan arrested Well…
Read Moreதமிழ்நாடு சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 34% வளர்ச்சி.
Tamil nadu tourism new policy சென்னை 26 ஏப்ரல் 2013: தமிழ்நாடு 2011 ல் 14 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (13.67 கோடி உள்நாட்டு பயணிகள் மற்றும் 33 லட்சம் வெளிநாட்டு பயணிகள்). 2012ல் மொத்தம் 18.76 கோடி சுற்றுலா பயணிகள் வந்ததாகவும் (உள்நாட்டு பயணிகள் 18.41 கோடி மற்றும் 35 லட்சம் வெளிநாட்டு பயணிகள்) ஆக சுற்றுலா பயணிகளின் சதவீதம் 34 வளர்ச்சி கண்டது. தமிழ்நாடு அரசு புதிய சுற்றுலா கொள்கைகள் உருவாக்கி ஆசிய மேம்பட்டு வங்கியின் {Asian Development Bank (ADB)} உதவியுடன் சுமார் ருபாய் 500கோடியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய சுற்றுலா கொள்கை அதிகமாக பணம் செலவழிக்கும் பயணிகளை கவரவும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் முதலீட்டாளர்களை கவரவும் திட்டம் வகுத்து அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க உறுதி செய்யப்பட்டுள்ளதாக…
Read Moreஇலங்கையில் காமன்வெல்த் கூட்டத்தை நடத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு
Commonwealth summit 26 ஏப்ரல் 2013: இலங்கையில் வரும் நவம்பர் மாதம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்கான நிகழ்ச்சிகள் பற்றி விவாதிப்பதற்காக காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலையிலான பிரதிநிதிகளின் கூட்டம் லண்டனில் வெள்ளிக்கிழமை (இன்று ) நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் கூட்டத்தை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கூறியது: காமன்வெல்த் நாடுகளின் அமைச்சக நிலை பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில், காமன்வெல்த் நாடுகளின் மதிப்பை குலைக்கும் வகையில் இலங்கை செயல்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் எங்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று முடிவெடுத்து அந்நாட்டு அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றார். இலங்கையில் போர் நடைபெற்றபோது நிகழ்ந்த மனித உரிமை மீறல் பிரச்னைகளை மையமாக வைத்தும், இலங்கையில் மனித உரிமைகளைக் காக்க…
Read Moreஇலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் மனு
FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott 25 ஏப்ரல் 2013:ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் ஃப்ரேசர் இலங்கையில் நடக்க இருக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என் வலியுறுத்தி ஆஸ்திரேலியா அரசுக்கு மனு அளித்துள்ளார். இதில் இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கும் பல முன்னணி ஆஸ்திரேலிய தலைவர்கள் பட்டியலில் தம் பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு குறிபிட்டுள்ளார். இதே போல் ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் அமைப்பு, இலங்கையில் மனித உரிமைகள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் வரும் வரை இது போன்ற நிகழ்ச்சிகளை பபுறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. FORMER prime minister Malcolm Fraser Calls for Boycott English Summary: FORMER prime minister Malcolm Fraser is among dozens of prominent Australians calling on the federal government to consider boycotting a…
Read Moreசீனாவில் 2 புத்தசாமியார்கள் – திபெத்தியர்கள் தீக்குளித்து சாவு
Two young Tibetan monks immolated themselves பீஜிங் 25April2013 திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேற கோரி திபெத்தியர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக இதுவரை 110 பேர் தீக்குளித்து உள்ளனர். இதில் பலர் இறந்து விட்டனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக சீனாவின் சிச்சுவான் மாகாணம் கிர்தி மொனாஸ்திரி என்ற இடத்தில் இன்று 2 புத்தசாமியார்களும் ஒரு திபெத்திய பெண்ணும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். பிரான்சு நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹோலண்ட் மற்றும் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு கொள்கை குழு தலைவர் கேத்தரின் அஷ்டன் ஆகியோர் பீஜிங்கில் சுற்றுப்பயணம் செய்யும் சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. English Summary: Two young Tibetan monks immolated themselves Two young Tibetan monks of Taktsang Lhamo Kirti Monastery in Zoege,…
Read Moreதமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம்: சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை 25 April 2013 தமிழக சட்டசபையில், நேற்று விதி 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க நீலகிரி மாவட்டத்தில் ரூ.7 ஆயிரம் கோடியில் புதிய நீர்மின் திட்டம் அமைய இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட 10 துணை மின் நிலையங்கள், 230 கிலோவோல்ட் திறன் கொண்ட 16 துணை மின் நிலையங்கள், 110 கிலோ வோல்ட் திறன் கொண்ட 19 துணை மின் நிலையங்கள் மற்றும் 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட 11 துணை மின் நிலையங்கள் என மொத்தம் 56 துணை மின் நிலையங்கள் 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். புதிய மின் உற்பத்தி நிலையங்களை இயக்கி வைத்தல், புதிய மின் திட்டங்களைத் தொடங்குதல் மட்டுமல்லாது, பற்றாக்குறையை 85…
Read Moreசீன இராணுவ(PLA) துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் உள்ளே 10 கிமீ ஊடுருவல்
Troops of of China intruded 10-km inside the Indian territory 24 April 2013: சீன இராணுவ (PLA) துருப்புக்கள் இந்திய எல்லைக்குள் உள்ளே 10 கிமீ ஊடுருவல். எல்லையில் ராணுவ தலைமை தளபதி ஆய்வு. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீன ஊடுருவல் நிகழ்ந்த பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இந்தியப் படைப்பிரிவுகளை புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார் இந்திய ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங். கடந்த சில நாள்களுக்கு முன்பு Daulat Beg Oldi (DBO) பகுதியில் சீன ராணுவத்தினர் கூடாரம் அமைத்தது கண்டறியப்பட்ட உடனே அப்பகுதிக்கு லடாக் ஸ்கவுட்ஸ் படைப்பிரிவினரை இந்தியா அனுப்பி வைத்தது. பதற்றம் நிறைந்த இந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள விக்ரம் சிங் திங்கள்கிழமை ஜம்மு காஷ்மீருக்கு சென்றார். ஆளுநர் என்.என்.வோராவைவும் முதல்வர் ஒமர் அப்துல்லாவையும் சந்தித்து சீனா…
Read Moreபிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். மந்திரி கமல்நாத் பதிலடி
BJP wants PM to resign, both Houses adjourned till noon பிரதமர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும், பா.ஜ. பிடிவாதம். நாடாளுமன்ற இரு அவையும் நண்பகல் வரை ஒத்திவைப்பு. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மந்திரி கமல்நாத் கூறுகையில் “கடந்த 9 ஆண்டுகளில், பா.ஜ. க பிரதமரை பல முறை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றது. அவர்கள் எதாவது பிரச்சினைகளையும் சம்பவங்களையும் முன்னிறுத்தி இதை முயன்று வருகின்றன. இந்த விஷயங்களை அரசியல் ஆதாயத்திற்காகவும் சுயநலம் கருதியும் முன்னிருத்துகின்றன. இதில் மக்கள் நலம் ஒன்றும் இல்லை” என கூறினார். BJP wants PM to resign, both Houses adjourned till noon Real estate property in chennai
Read More



