Dr Niranjan Mardi IAS சென்னை 22 மே 2013: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய துறையான உள்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறையின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால், மின் நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய முக்கிய நியமனங்கள்: ராஜீவ் ரஞ்சன் – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர் ( முன்பு வகித்த பதவி: வருவாய்த் துறை செயலாளர்) ககன்தீப் சிங் பேடி – வருவாய்த் துறை செயலாளர் ( முன்பு வகித்த பதவி: கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர்) எஸ். விஜயகுமார் – கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைச் செயலாளர் (முன்பு வகித்த பதவி: ஊரக வளர்ச்சித் துறை ஆணையாளர்) கிரிஜா வைத்தியநாதன் –…
Read Moreகுற்றவாளிகளின் உடல்களை துண்டாக வெட்டி பார்வைக்கு வைத்த சவூதி அரேபியா
Saudi Arabia displays corpses of 5 executed Yemeni men ஏமன் நாட்டு குற்றவாளிகள் 5 பேரை கொலைச்செய்த சவுதி அரசு அவர்கள் உடல்களை பொது இடத்தில் பார்வைக்கு வைத்துள்ளது. கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும் ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புனிதத்திற்கும், மற்றவர்களின் ரத்தத்திற்கும் மதிப்பு கொடுக்காத இந்தக் குற்றவாளிகளின் உடல்கள் பொது இடத்தில் கிடத்தப்பட வேண்டும். நாட்டில் ஊழலும், லஞ்சமும் இருப்பதை மற்றவர் உணரவேண்டும் என்று சவுதியின் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் குற்றங்கள் செய்ய எண்ணுவோருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இன்று கொலைச் செய்யப்பட்ட அவர்களின் உடல்கள், சவுதியின் தென்பகுதியில் உள்ள ஜாசன் நகரின் ஒரு சதுக்கத்தில் மக்கள் பார்வைக்கு…
Read Moreநிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்
விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத்தை பூமியில் இருந்து பார்க்க முடிந்ததாக “நாசா” தெரிவித்துள்ளது. மணிக்கு 90,000 கிலோமீற்றர் வேகத்தில் வந்த விண்கல் ஒன்று நிலவை மோதியதினால் அங்கு சுமார் 20 மீற்றர் பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று நாசாவின் விண்கல் சுற்றுசூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து விண்கற்கள் ஆராய்ச்சியாளர் பில் குக் கூறுகையில், சிறிய அளவிலான பாறை போன்ற விண்கல் கடந்த மார்ச் 17ம் திகதி நிலவில் மோதியது. அப்போது இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிகளவு வெளிச்சம் உண்டானது என்று கூறியுள்ளார். இது போல் பல நிகழ்வுகள் தினமும் விண்ணில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அவர் கூறினார். இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லையா என்ற கேள்விக்கு பதில் அவரிடம் இருந்து இல்லை.
Read Moreநாகர்கோயில்:காதல் திருமணம் செய்த தங்கையை கொன்ற அண்ணன் பரபரப்பு வாக்குமூலம்
காதல் திருமணம் செய்து கொண்ட தன் தங்கையை கொன்றது ஏன் என பரபரப்பான வாக்குமூலத்தை அளித்துள்ளார் அப்பெண்ணின் அண்ணன் சபரிநாதன். நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமின் மகன் சிவா(வயது 21). இவரும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியை சேர்ந்த காசிநாடார் மகள் சவுமியா(வயது 21) என்பவரும் மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட தொடர் பால் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து கடந்த 5ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை சவுமியா வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தனது நண்பர்கள் பொன்னேரி பகுதியை சேர்ந்த சேகர்(21), செல்லப்பாண்டியன்(29) ஆகியோருடன் ஒரு காரில் சபரிநாதன் நாகர்கோவில் வந்து சவுமியா, சிவா, ஜெயராம் ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் சரமாரியாக குத்தினர். இதில் சவுமியா, ஜெயராம் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த…
Read Moreஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என தண்டிக்க முடியாது. உச்சநீதி மன்றம்.
A man having sex with a woman with her consent is not a Rape: SC 21மே2013:புதுதில்லி : ஒப்புதலுடன் நடக்கும் உறவுக்கு பலாத்காரம் என கூறி எவரையும் தண்டிக்க முடியாது. திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இருவர் சம்மதத்துடன் நடக்கும் உடல் உறவுக்கு பின், எதாவது காரணத்தினால் திருமணம் நின்றால், அது கற்பழிப்பு குற்றமாகாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. A man having sex with a woman with her consent is not a Rape: SC
Read Moreவிண்ணுக்கு பறந்த எலி, பல்லி: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது
விண்ணுக்கு சென்ற எலி, பல்லி, நத்தை போன்றவை பாதுகாப்புடன் பூமிக்குத் திரும்பின. செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் நடவடிக்கையிலும் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சூழல் உயிரினங்களுக்கு எந்த வகையில் உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைக கண்டறிவதற்காக, ரஷ்ய விஞ்ஞானிகள் சுண்டெலி, நத்தை, பல்லி உள்ளிட்ட உயிரினங்களை “பயோன்-எம்” என்ற விண்கலம் மூலம், கடந்த மாதம் விண்வெளிக்கு அனுப்பினர். இந்த விண்கலம் ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் நேற்று பாதுகாப்பாக தரை இறங்கியது. புவி ஈர்ப்பு சக்தி இல்லாத விண்வெளியில் பிராணிகளின் இதயம், நரம்பு, தசை ஆகியவற்றில் எந்த விதமான பாதிப்பு ஏற்படுகிறது என்பதை ஆராய இவை அனுப்பப்பட்டன. அனுப்பப்பட்ட 45 எலிகள், 15…
Read Moreபாகிஸ்தானில் முஷரப்பை மீண்டும் நாடு கடத்த புதிய பிரதமர் நவாப் செரீப் திட்டம்
சமீபத்தில் நடந்த பாகிஸ்தான் தேர்தலில் முஸ்லிம் லீக் (என்) கட்சி அமோக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அக்கட்சி தலைவர் நவாஸ்செரீப் வருகிற யூன் 2ம் திகதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அப்போது தனது எதிரியான முஷரப் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. அவரை மீண்டும் நாடு கடத்த வேண்டும் என்று நவாஸ் செரீப் விரும்புகிறார். நவாஸ் செரீப் பிரதமராக இருந்தபோது முஷரப் ராணுவ தலைமை தளபதி ஆக இருந்தார். அப்போது, ராணுவ புரட்சி மூலம் நவாஸ் செரீர்ப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் ஜனாதிபதி ஆனவுடன் நவாஸ் செரீப் மற்றும் பெனாசிர் பூட்டோவை நாட்டை விட்டு வெளியேற்றினார். இந்நிலையில், கடந்த தேர்தலில் பெனாசிர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து முஷரப் நாடு கடத்தப்பட்டார். தேர்தல் அறிவித்ததை தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற…
Read Moreகிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சூதாட்ட வாழ்க்கை திரைப்படமாகிறது
cricket player srishaanth cricket gambling life will come as a movie பிரபல கிரிக்கெட் வீரர் “ஸ்ரீஷாந்த்” ஐ பி எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் , அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது, மற்றும் 7ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்து “கிரிக்கெட்” என்ற பெயரில் மலயாளத்தில் திரைப்படம் தயாராக உள்ளது இப்படத்தினை மலையாள பட தயாரிப்பாளர் ஷாஜி கைலாஷ் ஏ கே சாஜன் தயாரிக்க உள்ளனர் கதை வசனத்தை சாஜன் எழுதுகிறார். “ஸ்ரீஷாந்த்” கிரிக்கெட் சூதாட்ட வாழ்க்கையை மைய்யமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது என கதைக் குழுவினர் தெரிவிக்கின்றனர். ஒரு பள்ளியில் படிக்கும் போது கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கும் ஒரு இளைஞன் ஆல் ரவுண்டராக விளையாட…
Read Moreஜெ.பேரவை மாநில செயலாளர் கார் பறிமுதல்
AIADMK Politician car seized in dharmapuri 20 மே 2013 தர்மபுரி: ஜெ.பேரவை மாநில செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், அரசு விதிகளை மீறி, சுழல் விளக்கு பொருத்திய காரை பயன்படுத்தியதால் எஸ்.பி உத்தரவின் பேரில் போலீஸார் பறிமுதல் செய்தனர். எஸ்.பி.,ஆஸ்ராகர்க் உத்தரவின் பேரில் அதிவேகத்தில் தருமபுரி நான்கு சாலைகள் சந்திப்பில் சென்ற காரை பரிசோதனை செய்து பார்க்கும் போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஜெ.பேரவை மாநில செயலாளர் டி.ஆர். அன்பழகன் சட்டவிரோதமாக சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. சுழலும் சிகப்பு விளக்கு உள்ள காரை ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், துணை சபாநாயகர், மத்திய மந்திரிகள், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தலாம் என்று கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அந்தஸ்தில் இருக்கும் டி.ஆர். அன்பழகன் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. அந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரின் ஓட்டுநர் எம்.துரை (39)…
Read Moreசீனப்பிரதமர், லீ கேக்கியங், இந்தியா வருகை
Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh. புதுடில்லி 19 மே 2013 : சீனப்பிரதமர், லீ கேக்கியங், மூன்று நாள் சுற்று பயணமாக, இன்று, இந்தியா வந்தடைந்தார். இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், பதவி எற்ற பின் இது தான் அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம். மதியம், டில்லி வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த முக்கிய சந்திப்பில், தண்ணீர் பிரச்னை, எல்லை விவகாரம்,உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார். அதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh.
Read More



