Li Keqiang’s visit to India and met Prime Minister Manmohan Singh.
புதுடில்லி 19 மே 2013 : சீனப்பிரதமர், லீ கேக்கியங், மூன்று நாள் சுற்று பயணமாக, இன்று, இந்தியா வந்தடைந்தார். இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம் தொடர்பாக பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், பதவி எற்ற பின் இது தான் அவரது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம்.
மதியம், டில்லி வந்த அவர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த முக்கிய சந்திப்பில், தண்ணீர் பிரச்னை, எல்லை விவகாரம்,உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் விருந்து அளிக்கிறார். அதில், மத்திய அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.