விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத்தை பூமியில் இருந்து பார்க்க முடிந்ததாக “நாசா” தெரிவித்துள்ளது.
மணிக்கு 90,000 கிலோமீற்றர் வேகத்தில் வந்த விண்கல் ஒன்று நிலவை மோதியதினால் அங்கு சுமார் 20 மீற்றர் பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று நாசாவின் விண்கல் சுற்றுசூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விண்கற்கள் ஆராய்ச்சியாளர் பில் குக் கூறுகையில், சிறிய அளவிலான பாறை போன்ற விண்கல் கடந்த மார்ச் 17ம் திகதி நிலவில் மோதியது. அப்போது இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிகளவு வெளிச்சம் உண்டானது என்று கூறியுள்ளார். இது போல் பல நிகழ்வுகள் தினமும் விண்ணில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றும் அவர் கூறினார். இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லையா என்ற கேள்விக்கு பதில் அவரிடம் இருந்து இல்லை.